01.
தந்தை : டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?
மகன் : ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?
02.
பையன் : அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா : நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன் : ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா : கெட்ட செய்தி
பையன் : வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
03.
போலீஸ் : பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர் : அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
04.
நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....
05.
வந்தவர் : என் மனைவிக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் டாக்டர்
டாக்டர் : அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க
வந்தவர் : பாத்திரங்களை ‘வீசி’ எறியறாளே என் மேல
டாக்டர் : ???
06.
ஒருத்தி : ஆபீஸ்ல நடந்த பார்ட்டில என்னோட வீட்டுக்காரர் சின்ன பிள்ளையாட்டம், புது சட்டைல காப்பிய கொட்டி கறையாக்கி அதோடு வீட்டுக்கு வந்தாரு!
மற்றொருத்தி : அடக் கடவுளே! நல்லா அடிச்சு துவைச்சியா?
ஒருத்தி : பின்னே.. விடுவேனா? ஆள் மூச்சு பேச்சில்லாம ஆஸ்பத்திரில கிடக்குறாருன்னா பார்த்துக்கோயேன்!
07.
ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
பாபு : சொத்தையோட போகணும்.
08.
இராமு : கோபம் வந்துட்டாஎன் மனைவி காளியாயிருவா….
நண்பன் : நீ என்னாவாய்???
இராமு : நான் காலியாயிடுவன்.
09.
காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
10.
நண்பன் 1 : டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா....
நண்பன் 2 : அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....
11.
இராமு : அந்த டாக்டர் போலி என்று எப்படி கண்டு பிடிச்சீங்க?
நண்பன் : தையல் போடறதுக்கு Tailor கடைக்கு போக சொல்லுறாரு!!
12.
பெண் : ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?? ?
கஸ்டமர் கேர் : ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண் : என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர் : அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்
பெண் : இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்?
கஸ்டமர் கேர் : ?????
13.
ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!
14.
ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.
15.
நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...
டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....
16.
நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.
17.
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
18.
சர்தார் : தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன் : பி.எ.
சர்தார் : அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
19.
நபர் 1 : ப்ச் ! வர வர காய்கறி கடையில் நாம் தேடுவது கிடைக்க மாட்டேன் என்கிறது. டாக்டருங்க எதையாவது சொல்லி நம்ம உயிரை வாங்குறாங்க...
நபர் 2 : ஏன் என்ன ஆச்சு?
நபர் 1 : காரட்டை பச்சையா சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்லிட்டார். நானும் கடை கடையா ஏறி இறங்குறேன். ஒரு கடையில கூட கிடைக்கல...
நபர் 2 : !!!!?????!!!!
20.
பாபு : என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்!
கோபு : ம்ம். நீ கொடுத்து வைத்தவன்!
பாபு : போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment