"மீண்டும் வருமா? &"ஊர்த் திருவிழா"

"மீண்டும் வருமா? [மாட்டு வண்டி]"

 

"மீண்டும் வருமா? விசித்திரமான கேள்வி

காலச் சக்கரம் சுழலும் போது

இன்று இருப்பது நாளை இருக்காது

நேற்று கண்டது மறுபடி தோன்றும்

மாட்டு வண்டி பயணம் செய்வோம்!"

 

"காடு அழித்து பசுமை தொலைத்து

காற்று எல்லாம் மாசு படுத்தி

கண்ட கண்ட நோய்கள் பெற்று

சுற்றுச் சூழல் மாற்றம் நெருக்கடியாக

திரும்பவும் காண்பாய் வண்டி ஓடும்!"

 

"சின்ன வயதில் சந்தைக்கு போனது

ஊர்த்  திருவிழாவில் பந்தயம் செய்தது

பட்டணம் வந்ததும் ஞாபகமாக போயிற்று

விலைவாசி கூடி வரிசையில் நிற்க

திரும்பவும் ஓடும் சவாரி வண்டி !"

↠↠↠↠↠↠↠

 

"ஊர்த் திருவிழா"

 

 

"பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா

பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா!

 

பொம்மை கடையில் குழந்தை அழுகுது

பொறுமை இழந்து இழுத்து போறாள்!

 

குட்டி எலியில் தொந்தி பிள்ளையார்

முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை!

 

வளையல் எல்லாம் கையில் போட்டு

வடிவு பார்க்கிறாள் ஆசை தீர!

 

ஊர் மக்கள் திரண்டு கொண்டாட

ஊர்த் திருவிழா மனதை தொடுகுது!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment