கடந்த வாரம் வெளிவந்த படங்கள் எப்படி?



 ''பன்னிகுட்டி'' விமர்சனம் (pannikkuddi movie review)

 அனுசரண் முருகையன் இயக்கத்தில்  கருணாகரன், யோகிபாபு, சிங்கம் புலி, ராமர், திண்டுக்கல் லியோனி  நடிக்கும் நகைச்சுவை திரைப்படம்லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

தெரியாமல் பன்டிக்குட்டியை இடித்த நாயகன் அதற்கு பரிகாரம் தேடி சாமியாரிடம் போகிறார்.சாமியார் கூறிய பரிகாரத்தினை நாயகன் எப்படி நிறைவேறுகிறார் என்பதே கதை.

வழக்கம்போல் சில இடங்களில் யோகிபாபு சொதப்பினாலும், ஓரளவு நகைச்சுவைக்காக பார்க்கலாம்.


''கிராண்மா'' விமர்சனம் (Grandma Movie Review)

ஷிஜின்லால் இயக்கத்தில் சோனியா அகர்வால், விமலா ராமன், சீதா சிவதாஸ்   உட்பட பலர்  நடித்திருக்கும் திரைப்படம்.   விநாயக சுனில் குமார் & ஜெயராஜ் இணைந்து தயாரிக்கஜெஸின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.

தொழிலில் பிஸியான வக்கீல் பிரியா  மகளிடம்  ,இறந்துபோன அவளின் தாய் ஆவியாக வந்து உரையாடுவதை கண்டு பீதிகொண்டு தொழிலினை கைவிட்டு போக முடிவெடுக்கிறார்.ஆனால் கிரான்மாவின் ஆவி சோனியா அகர்வாலை சந்தித்து சந்தித்து என்ன சொல்கிறது..வக்கீல் பிரியாவிற்கு அடுத்தடுத்து வரும் பிரச்சினைகள்.. சோதனைகள்..என்ன? அவற்றை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்பதே கதை.

இருந்தாலும் சமீபத்தில் பார்த்த சஸ்பென்ஸ், திரில்லர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பல படங்களில்கிராண்மாதான் பெஸ்ட்..!

 

''பெஸ்டி'' விமர்சனம் (Bestie Movie Review Tamil)

  ரங்கா இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், அசோக் குமார், சத்யன், மாறன், ரங்கநாதன், லொள்ளு சபா ஜீவா   எனப்  பலர் நடித்திருக்கும் திகில் திரைப்படம். இப்படத்தினை  சாரதி ராஜா தயாரிக்க, ஜே.வி இசையமைத்துள்ளார்.

 அசோக், யாஷிகா ஆனந்த் ஜோடி கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்குகிறார்கள். இருவரும் நெருக்கமாகும் போதெல்லாம் யாராவது வந்து அவர்களை தொந்தரவு செய்வதோடு, யாஷிகா ஆனந்தை அமானுஷ்ய சக்தி ஒன்று அச்சுறுத்தவும் செய்கிறதுயாஷிகாவுக்கு ஏற்கனவே நடந்த சம்பவங்கள், பார்த்த மனிதர்கள் மீண்டும் நடக்கிறது. திடீரென்று யாஷிகாவுக்கு நடந்தது போன்ற அமானுஷ்ய அச்சுறுத்தல் அசோக்கிற்கு நடக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? இருவரின் மனநிலைக்குமான காரணம் என்ன? என்பதை திகிலாக சொல்லியிருப்பது தான்பெஸ்டி

மாறனின் நகைச்சுவைக்காக சுமாரான படம்.

தொகுப்பு:செமனுவேந்தன்

 

No comments:

Post a Comment