கடைசி வாரம் வெளிவந்த திரைப்படங்கள் எப்படி?






சுருக்கமான பார்வை

 ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம் [Tamil Movie ‘Rocketry-nambi effect’  review]

 ஆனந்த் மஹாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இயக்கியுள்ள  இப்படத்தில் மாதவன், சிம்ரன், மோகன் ராமன், கார்த்திக் குமார் எனப்  பலர்  நடித்துள்ளனர்படத்தினை மாதவனின் 'திரி கலர் பிலிம்ஸ்' மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கசாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

நாடே கொண்டாட வேண்டிய விஞ்ஞானி நம்பி நாராயணன். இந்தியாவின் சொந்த ராக்கெட்டை விண்ணில் ஏவும் கனவை சுமந்த விஞ்ஞானி, இவர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். அவரின் குடும்பம் சமூகத்தால் அவமானப்படுத்தப்படுகிறது. அதற்கு முன்பு என்ன நடந்தது? அடுத்து என்ன நடக்கப் போகிறது? இறுதியில் நம்பி நாராயணன் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.[4/5]

ராக்கெட்ரி, நம்பி விளைவு - உச்சம்

 

D ப்ளாக் - விமர்சனம் [Tamil Movie ‘D block’ review]

யூ டியூப் எருமை சாணி சேனல் புகழ் விஜய் குமார் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தில் அருள்நிதி, அவந்திகா, இயக்குநர் கரு.பழனியப்பன், சரண்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ், ஆதித்யா கதிர் எனப்  பலர் நடிக்கின்றனர். திரில்லர் திரைக்கதை.   ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

காட்டுக்குள் இருக்கும் ஒரு இன்ஜினியரிங்  கல்லூரியில் முதலாமாண்டு மாணவனாக  அருள்நிதி. கல்லூரியின்  ஹாஸ்டலில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து போக, சுற்றி காடாக இருப்பதால் சிறுத்தை அடித்து இறந்திருக்கலாம் என கூறி கேஸை மூடிவிடுகின்றனர். ஆனால் இதற்கு பிறகும் மர்மமான சில விஷயங்கள் அங்கு நடக்க, இதற்கு காரணம் பேயா? இல்லை வேறு யாரும் மனிதரா? என்பதை கண்டறிய களத்தில் இறங்குகிறார் கதாநாயகன். இறுதியாக அந்த மர்மத்தை கண்டறிந்தாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.[2/5]

கோட்டைவிடப்பட்ட திரைக்கதை.

 

'யானை' - விமர்சனம் [Tamil Movie yaanai review]

 ஹரி இயக்கத்தில் அதிரடி- திரில்லர் - குடும்பத் திரைப்படம்அருண் விஜய்பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், புகழ், கங்கை அமரன் எனப்  பலர் இணைந்து நடித்துள்ளனர்வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தனது 'ட்ரும்ஸ்டிக் புரோடுக்ஷன்' மூலம் தயாரிக்கஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வழக்கமான அரிவாள் வெட்டு குத்து., இறால் பண்ணை, செல்வாக்கான பெரிய குடும்பம் அவர்களின் பகையாளி, பகையைத் தீர்க்கும் ஹீரோ என ஹரி இதுவரை அரைத்த அதே மசாலாவை தனது மச்சானை வைத்து மீண்டும் ஒரு முறை அரைத்திருக்கிறார்.

 சில இடங்களில் சலிப்பு ,தேவையில்லாத சில நகைச்சுவை காட்சிகள், பாடல்கள் [2.75 / 5]

தொகுப்பு:-செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment