👳சடலங்களை தேடி.. சர்தார்ஜிகள்
இரண்டு சர்தார்கள் ஜாலியாக தனித் தனி
விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு விமானக்களும் மோதிக் கொண்டு பஞ்சாபிலுள்ள இடுகாட்டில் விழுந்து இறந்து விட்டனர். உள்ளூர் சர்தார்கள் அவர்களின் சடலங்களை தேடி, மண்ணைத் தோண்டி வருகின்றனர். இதுவரை 500 சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
👳நீயும் போலீஸ் தானா..? - சர்தார்ஜி
நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ் புடிச்சுருச்சு. போலீஸும் ஒரு சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து நீட்ட.. )
(கண்ணாடியில் தெரிந்தது போலீஸ் சர்தாரின் முகம் )
அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..?
👳எத்தனை இட்லி? - சர்தார்ஜி
ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர்.
நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார்.
அதற்கு சர்தார் ,'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.
உடனே நண்பர் , 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி
''ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன்'' என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.
👳வேலை வாய்ப்பகத்தில்... - சர்தார்ஜி
அரசு பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு முறை' குறிப்பிட்டார்.
இதை கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார், 'ஆண்/பெண் no problem ' என்று திருத்தி எழுதினார். விண்ணப்பத்தின் கீழ் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன் என்னாச்சு, கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார் சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார். அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill The Application In
Capital" என்று எழுதியிருந்தது..
தொகுப்பு:செ.மனுவேந்தன் (sarthaji jokes, siri, comedy, nakaichchuvai)
0 comments:
Post a Comment