சுருக்கமான பார்வை
''வீட்ல விசேஷம்'' விமர்சனம் (Veetla Vishesham Movie Review)
ஆர் ஜே பாலாஜி, என் ஜே சரவணன் இணைந்து இயக்கியுள்ள நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ராகுல் இணைந்து தயாரிக்க, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார்.
50 வயதில் தனது அம்மா கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த பாலாஜிபல இடங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். இதனால், அம்மா அப்பாவிடம் கடுமையாகவும் நடந்துகொள்கிறார். இந்த விஷயத்தினால், குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுகிறது. பிள்ளைகளாலும், சமுதாயத்தினாலும் ஒதுக்கப்படும் ஊர்வசி பல கஷ்டங்களையும் தாண்டி எப்படிக் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்பதே கதை.
மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படமாக அமைந்துள்ளது வீட்ல விசேஷம். (2.75 / 5)
''ஓ2 (O2)'' விமர்சனம்
(O2 Movie Review)
இயக்குனர் ஜி எஸ் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, ரித்விக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரீர் பிக்சர்ஸ்' மூலம் தயாரிக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
தனது மகனுக்கு இருக்கும் மருத்துவ கோளாறுக்கு கொச்சின் சென்று தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற நெருக்கடியில் விதவை நாயகி நயன்தாரா. எனவே தனது மகனுடன் பேருந்து ஒன்றில் கொச்சின் செல்லும் நயன்தாரா, எதிர்பாராத விதமாக அந்த பேருந்து ஒரு இடத்தில் மாட்டிக்கொள்கிறது. இதன்பிறகு ஒக்சிசன் இல்லாத நிலையில் பேருந்தில் உள்ளவர்கள் என்ன ஆனார்கள்? யார்?,எவர்?, எப்படி? மீண்டு வந்தார்கள், என்பதே கதைச்சுருக்கம்.
இந்த பூமிக்கு நாம் செய்யும் தீங்குகள் சற்றும் குறைவில்லாமல் நமக்கு வந்து சேர்ந்தே தீரும் என்கிற அபாய எச்சரிக்கை படத்திற்கு சுவையினை அளித்திருக்கிறது. (2.5/5)
.....📽📽📽.....
‘’விஷமக்காரன் விமர்சனம்’’ (Vishamakaran movie review)
வி (விஜய் குப்புசாமி)இயக்கத்தில் , கவின் ஆதித்யா இசையில் ,வி (விஜய் குப்புசாமி). நடிகை: அனிக்கா விக்ரமன், சைத்ரா ரெட்டி உட்பட பலர் நடிப்பில் வெளிவந்த படம்.
அக்னியின் முன்னாள் காதலியான தரங்கிணி ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார். ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்துக்கொள்ள விதி விளையாட ஆரம்பிக்கிறது. அக்னியையும், தரங்கிணியையும் இணைத்து அக்னியின் மனைவி ஐகிரி சந்தேகிக்கிறாள். கணவரை உளவு பார்க்கிறாள். அவளுடைய சந்தேகத்தின் விளைவு, எதிர்பாராத முடிவு.
தமிழ் படமா என்ற சந்தேகம் வருமளவுக்கு ஆங்கில மொழி புகுந்து விளையாடியுள்ளது. ஓமோம்.இனி ,இனி தமிழ்நாட்டுக்காரருக்கு தமிழ் மொழி புரியாது தானே! பணம் மட்டுமே முக்கியம்.
‘விஷமக்காரன்’ கிளைமாக்சில் மட்டும் சிறந்தவன்.
தொகுப்பு: செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment