01.
ரமணன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன்
.. ..
வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்.
02.
காதலன் : அன்பே!
இந்த கடற்கரை,
குளிர்ந்த காற்று,
தனிமை இதெல்லாம்
என்ன தோண்றது
?
காதலி : வாய்க்கு
ருசியா சாப்பிட
ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது.
03.
நெப்போலியன் : - என்னுடைய
அகராதியில் ‘முடியாது’
என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி : - இப்போ சொல்லி என்ன பிரயோசனம், அகராதி வாங்கும்போதே பார்த்து
வாங்கியிருக்கணும்.
04.
ஜோ : போன வாரம் போலீஸ்
என்னை அரெஸ்ட்
பண்ணிட்டாங்க.
நண்பர் : நீ என்ன தப்பு செய்தே?
ஜோ : கடைக்குப்
போய் ஷாப்பிங்
செய்தேன்.
நண்பர் : ஷாப்பிங்
செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க?
ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்.
05.
வடிவேலு : தம்பித்
தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர்
எங்க ஒட்டுவாங்க தெரியுமா?
பார்த்திபன் : ட்யூப்ல
எங்க ஓட்டை இருக்கோ, அங்கதான்
ஒட்டுவாங்க!!
வடிவேலு : ?!?!
06.
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு
வந்திருந்தா இவரைக்
காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர்
ஊருக்குக் கிளம்பிப்
போயிருப்பார் !
07.
நண்பர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ்
படங்கள்லேயே கடைசியா
எடுத்ததுதான் ரொம்ப பயங்கர சஸ்பென்ஸ்னு சொல்றீங்களே .. .. ஏன் ?
டைரக்டர் : கடைசிவரைக்கும் கதை என்னன்னு
எனக்கே புரியலையே.
08.
இயக்குனர் : படத்தோட
முடிவுல ஹீரோவான
நீங்க, வில்லனா
மாறிடறீங்க.
நடிகர் : பேசின சம்பளத்தை உடனே தரல்லேன்னா, இப்பவே
வில்லனா மாறிடுவேன்.
09.
ஆசிரியர் : உலகத்தை
முதலில் சுத்தி
வந்தது யாரு?
மாணவன் : விடுங்க
சார்! ஊர சுத்துன வெட்டிப்
பயல பத்தி என்ன பேச்சு
வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!
10.
டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக்
குடுங்க.
ஜோதி: ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?
11.
தணி : முன்னே
உங்க பையன் லா-காலேஜ்
போறான்னு சொன்னீங்க,
இப்ப மெடிக்கல்
போறான்னு சொல்றிங்களே ?
ஓமப்பா : ஆமா முன்னே லா காலேஜ் பெண்கள்
பின்னாடி சுத்தினவன், இப்ப மெடீக்கல்
காலேஜ் பொண்ணுங்க
பின்னாடி சுத்துறான் !
12.
ஆசிரியர் : "டேய் ராமு, இன்னும்
பத்து நாளில்
உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ.
அப்போ கடவுள்
கிட்டே என்ன வேண்டிக்குவே?"
ராமு : "அன்னிக்கு
ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"
13.
காதலி : நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன் : அப்பதான்
உனக்கு வேற இடத்தில் சீக்கிரம்
மாப்பிள்ளை பார்ப்பார்.
14.
அப்பா : டேய் அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?
மகன் : கடிகாரம் நின்னுப் போச்சுப்பா?
அப்பா : சாவி கொடுடா
சரியாகிடும்.
மகன் : அதான்பா ரொம்ப நேரமா கொடுத்துக்கிட்டு இருக்கேன். அது வாங்கவே மாட்டேங்குதுப்பா...
15.
நோயாளி : டாக்டர்
டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!
டாக்டர் : எங்கப்பா
கடிச்சுச்சு?
நோயாளி : வீட்டுக்கு பக்கத்துக்கு தெருவில்
டாக்டர்!
16.
வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து
வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
17.
ரமனன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன்
.. ..
வேலு : எப்படியோ
.. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா
இருக்கே, ஹும்.
18.
ராமு: சொந்த ஊரு எது ?
ஜோதி : அந்த அளவுக்கு நமக்கு
வசதி இல்லீங்க,
சொந்த வீடுதான்
இருக்கு!
தொகுப்பு:-செ.மனுவேந்தன். comedy , jokes , siri நகைச்சுவை nakaichchuvai sirippu சிரிப்பு
No comments:
Post a Comment