கடைசிவாரம் வந்த திரைப்படங்கள் எப்படி?



  



↭↭↭

'777 சார்லி' (charlie Review)  விமர்சனம்

கிரன்ராஜ் கே இயக்கத்தில் பாபி சிம்ஹா, ரக்ஷித் ஷெட்டி நடித்து   தமிழ்,  கன்னட மொழிகளில் வெளிவந்த கன்னடப் படம்..

சிறு வயதிலிருந்தே அனாதையாக,  வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாத இளைஞராக வரும் ரக்ஷித் ஷெட்டி  தனியே வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இவர் வீட்டிற்கு  அடைக்கலம் தேடி வரும் நாயுடன் ஒன்றாகிவிடும் வேளையில்  அந்த நாய்க்கு கேன்சர் நோய் ஏற்பட மனமுடைந்த ரக்ஷிட் ஷெட்டி நாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற போராடுகிறார். அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் நீளத்தை மறந்தால்  பார்க்கக்கூடிய படம். (3/5)

 ↭↭↭

'விக்ரம்' (vikram Review) விமர்சனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா  எனப் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை நடிகர் கமல் தனது ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர்  இசையமைத்துள்ளார்.

காவல் அதிகாரிகள், ஒரு குழுவால் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். பொதுவெளிக்கு தெரியாமல்,  கொலைகளுக்கான காரணம், பின்னணி என்ன? கொலைகளைசெய்தவர்களின் மூளையாக செயல்பட்டது யார் என்பதையெல்லாம் புலனாய்வில் அமர் குழுவினர் கண்டுபிடித்தனரா, இல்லையா என்பது கதை.

ஹொலிவுட் தரத்தில் மிரட்டல் நிறைந்த வித்தியாசமான நடிப்பினை இரசிக்கலாம்.(3.5/5)

 ↭↭↭

'அடடே சுந்தரா' (Adade sundhara Review ) விமர்சனம்

  விவேக் அத்ரேய இயக்கத்தில் நானி, நஸ்ரியா நசீம், நதியா, ரோகினி எனப்பலர்  நடித்திருக்கும் திரைப்படம். நவீன் எர்னெனி தயாரிக்க,  விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.

இந்து  சுந்தரும், கிறிஸ்துவ பெண்  லீலாவும் காதலிக்கிறார்கள்.  தங்கள் குடும்பத்தில் திருமணத்தில்  சம்மதிக்கமாட்டார்கள்  என்பதற்காக  சொல்லும் இரண்டு பொய்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதையொட்டி நிகழும் சம்பவங்கள் என நீண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது .

குடும்பமாக நகைச்சுவைகளை ரசிக்கலாம்

 ↭↭↭

'வாய்தா' விமர்சனம் (vaaitha Review)

 மஹிவர்மன் இயக்கத்தில் நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் மற்றும் பலர் நடித்த இப்படத்தினை  வினோத் குமார் தயாரிக்க, லொஸ்ஷ்வரன் இசையமைத்துள்ளார்.

வாகன விபத்தில் கை இழக்கும் ஒரு தொழிலாளியின் வழக்கு  ,அரசியல் வாதிகளின் தலையீடுகளின் மத்தியில், இறுதியில் அந்த சலலைத் தொழிலாளிக்கு நீதி நியாயம் கிடைத்ததா? இழப்பீடு வாங்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வாழ்க்கையில் வழக்கை எதிர்கொள்ளும் வலியைச்   சொல்லும் படம்.(2.5/5)


தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment