கொரோனா தொற்றுபாதிப்புக்குப் பிறகு, எம்மில் பலரும் புதிதாக
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தையும் மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.
எம்
உடலில் உள்ள கணையத்தில் அமையப்பெற்றிருக்கும் ஐஸ்லெட் எனும் செல்களில்
இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்கள் உள்ளன.
ரத்த சக்கரையின் அளவை சீராக பராமரிப்பது இன்சுலினின் பிரதான செயற்பாடாகும்.பல்வேறு காரணங்களால் பீட் டா செல்கள் சேதமடைவதால் இன்சுலின் சுரப்பில் தடை ஏற்பட்டு வகை
1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
பீட்டா செல்கள் எண்ணிக்கை குறைவு காரணமாகவும், இன்சுலின் சுரப்பில் சமச்சீரற்ற தன்மை ஏற்படுவதாலும், வகை 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.
கொரோனா தொற்று
பாதிப்பின் போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த சர்க்கரையின்
அளவு கட்டுப்பாடு இன்மையால் அவை பாதகமாக மாற்றம் பெறுகிறது.
அதே தருணத்தில் கொரோனா தொற்றின் காரணமாக, உடலில் அதிக அளவில், சைட்டோகைன்
எனப்படும் புரதத்தை உற்பத்தி அதிகரிக்கின்றது.
இதனால் சர்க்கரையின் அளவு இயல்பான அளவைவிட கூடுதலாக உயர்வடைகிறது. மேலும் சிலருக்கு கோரணா தொற்றுப்
பாதிப்பு ஏற்பட்ட தருணத்தில் 'ஸ்டீராய்டு' மருந்துகளைப் பயன்படுத்தி முழுமையான நிவாரணத்தை பெற்றிருப்பார்கள்.
இதன் காரணமாகவும் ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு அதிகரிக்கும். இவ்விரண்டு காரணங்களினால் கொரோனா
பாதிப்பிலிருந்து மீண்டவர்களில் பலருக்கு, புதிதாக சர்க்கரை நோய் ஏற்பட்டிருக்கிறது. இது
ஆய்வின் மூலம் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக தொற்றுப் பாதிப்புகளின் பின் அதிகமாக சிறுநீர் கழித்தல், அதிக தாகம், அதிக பசி, திடீர் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அவர்களின் பரிந்துரையின் பேரில் ரத்த அளவை குறைக்க பரிசோதனைகளை மேற்கொண்டு ரத்த சர்க்கரையின் அளவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
டொக்டர்:ராஜேஷ் கிருஷ்ணன் /தொகுப்பு: அனுஜா
0 comments:
Post a Comment