சிரிக்க...சில நிமிடம்

 


சர்தார்ஜி ஒருவர் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?" எனக் கேட்டார்.

அதற்கு சர்தார்ஜி: போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான் கழட்டிக்கிட்டு இருக்கேன் என்றார்.

😄😄😄

போனில்…

காதலி : ஹெலோ எங்க இருக்க?

சர்தார்ஜி : உன்னை பார்க்கத்தான் பைக்ல வந்துகிட்டிருக்கேன்!

காதலி : எதுக்கு வர்ற? வீட்ல யாரும் இல்லை!!

சர்தார்ஜி : !! யாரும் இல்லையா? (இதுக்கு மேல பேசினா வர வேண்டாம்னு சொல்லிடுவா!) ஹெலோ ஹெலோ! போனை கட் செய்துவிடுகிறார்.

!!! வீட்ல யாரும் இல்லையாம்! இதுதான் சரியான சமயம்! உடனே போறோம்! பைக் 100KM-SPEED இல் வீட்டை அடைகிறார்.

வீட்டில் யாருமே இல்லைகாதலி உட்பட!

😄😄😄

ஒரு நாள் சர்தார்ஜி ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார்.

அவரைப்பார்த்து அவர் மனைவி " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, சர்தார்ஜி " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!!!

😄😄😄

சர்தாரும் அவர் மணைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர்.

நீதிபதி : உங்களிடம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.

சர்தார் : சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.

😄😄😄

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

 

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

😄😄😄

சர்தார் இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார். சர்தார் கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.

நகல்:செ.மனுவேந்தன் (jokes , comedy , nakaichchuvai , siri )

0 comments:

Post a Comment