பிரதமரும் ,ஞான அக்காவும்

பிரதமர் மகிந்தாவும், அவரின் ஆஸ்தான ஜோசியர் ஞான அக்காவும்!

எங்கள் மகிந்தா மாமா என்ன செய்யதாலும் சாத்திரிமார்களிடம் நல்ல நேரம் பார்த்துத்தான் செய்வார்.

அதற்காக பல சாத்திரிமார்களின் 'அறிவுரை' களைக் கேட்டு, அதன்படி பூசைகள் செய்து, திருப்பதி ஈறாகச் சென்று வணங்கி, புத்த பிக்குமாரின் ஆசீர்வாதமும் பெற்று, வேண்டும் என்றால் தான் வெல்வதை உறுதிப்படுத்துவதற்காக, அரசைக் கலைத்து, முன்னதாகவே நல்ல நாளில் தேர்தல் வைத்து, வென்று கோலாகல ஆட்சி செய்து வந்தார்.

இவரின் ஆஸ்தான ஜோசியர்தான் ஞான அக்கா.

இவருக்கு, நம்ம மாமா,சொகுசு விடுதி, சொகுசு வண்டி என்று எல்லாம் செய்து கொடுத்திருந்தார்.

இந்த அக்கா, காலி முகப் போராட்டக்காரர்களை வசியப்படுத்தி, அந்த இடத்தை விட்டு ஓடப்பண்ணுவதற்காக, இந்தியாவில் இருந்து வரவழைத்த சில பூக்களைக் கொண்டு, அதனால் வசியம் செய்யப்பட்ட குடி தண்ணீரை அவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தாராம்.

அந்த வசீகர நீரைக் குடிப்பவர்கள் அடங்கிவிடுவார்கள் என்றும், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான போராட்டத்தை இறுதியில் கைவிடுவார்கள் என்றும் ஞான அக்கா உறுதியளித்திருந்தார்.

கடைசியில் ஓடியது...?

இப்போது மாமாவுடைய சொத்துக்களுடன், அக்காவின் சொத்துக்களையும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டன!

பாவம், அக்கா சாத்திரத்தில், எதோ கணக்கில் பிழை விட்டு விட்டார் போலும்!

அல்லது காலிமுகப்  போராட்டத்தைத்தான் பிழையாக கணக்குப் போட்டாவோ  தெரியவில்லைஇப்பொழுதுவரையில் போராட்டக்காரரினால் தேடப்படும் நபராக ஞானா அக்கா விளங்குகிறார்.

கவலை: செ.சந்திரகாசன்

No comments:

Post a Comment