பழமொழி
[புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது]
புலிகள் காப்பக அதிகாரிகளின் கூற்றுப்படி, புலிகள் தங்கள் செரிமான செயல்முறையை பராமரிக்க மென்மையான புல்லை சாப்பிடுகின்றன. புலிகள் புல்லை உண்ணும் காரணத்தை நியாயப்படுத்த பல உயிரியலாளர்களும் இதே விளக்கத்தைக் கூறியுள்ளனர்.
குமரிக்கண்டம்
குமரிக்கண்டம் (kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகவும் பின்னா் இழந்தாகவும் கருதப்படும் ஒரு புனைவுக் கண்டத்தைக் குறிக்கிறது. இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது.
பல
கோடி ஆண்டுகளுக்கு முன் தற்போது உள்ள அனைத்துக் கண்டங்களும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன
என்றும் அதன்பின்பு, பூமியின் மேற்பரப்புக்கு அடியில் இருக்கும் புவியத் தட்டுகளின்
நகர்தல் காரணமாக வெவ்வேறு கண்டங்கள் உருவானதும் பின்னாளில் நிரூபணமானது.
புவியத்
தட்டுகள் நகர்ந்து உண்டாக்கிய கண்டப் பெயர்ச்சி காரணமாகவே இந்தியா மற்றும் மடகாஸ்கர்
இடையே இடைவெளி, மனித குலத்தின் வரலாறு தொடங்கும் முன்னரே, உண்டானது; அந்த இடைவெளியே
இந்து சமுத்திரம்.
அதாவது
குமரிக்கண்டம் உண்மையல்ல.
கோபுரத்தில் தானியம்
கோயில் கோபுரத்தின் கலசம் மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் அந்த தானியங்கள் மிகவும் பத்திரமாக இருக்கும் என்றும், இயற்கைச் சீற்றங்கள், படையெடுப்பு, பஞ்சம் உள்ளிட்ட காலங்களில் இவை வேளாண்மை செய்ய பயன்படுத்தப்பட்டு, மக்களின் பசிப்பிணியைப் போக்க உதவும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
கேள்வி01:உயரத்தில் மூடியநிலையில், காற்றும்
படாது, வெயில் வெக்கையில் அவிந்த தானியம் முளைக்குமா?
கேள்வி02: தானியம் பஞ்சகாலத்தில் பயிரிட்டு
அது விளைந்து வரும்வரையில் பசி காத்திருக்குமா?
கேள்வி 03:அச்சிறுதொகை தானியம் ஒரு ஊருக்கே போதுமானதா?
அனைத்துக்கும் இல்லை என்பதே பதில் என்பது இக்காலக்
குழந்தைகளுக்கே புரியும் விடையமாகும்.
அப்போ எப்படி இப்பழக்கம் வந்தது?
ஆரம்ப காலங்களில் அரசர்களே ஆலயங்களை அமைத்தனர். கோவினுள்
நெற்களங்சிய அறைகளையும் அமைத்தனர். இயற்கைச் சீரழிவு, முற்றுகை, பஞ்சம், போர் உள்ளிட்ட காலத்தில் அந்த நெற்களஞ்சியங்களில் இருந்து மக்களுக்கு தானியங்களை கடனாக கொடுத்து உதவி இருக்கிறார்கள். இதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன.
இந்தப் பழக்கங்களே பின்னர் குறுகிக் கோபுரத்தில் அமர்ந்து கொண்டன.
ஜெனிவாவில் நடராஜர்
ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) இந்து கடவுள் நடராஜர் சிலை
யானது, அணு அமைப்பை விளக்குவதை கண்டறிந்து, அதிசயித்த விஞ்ஞானிகள் ஒரு மிகப் பெரிய நடராஜர் சிலையை இந்த விஞ்ஞான மையத்தில் நடுவில்
ஆய்வுக்காக வைத்துள்ளனர்
மேலும் இலுமினாட்டிகள்
இந்த சிலையை வழிபட்டு சிலைக்கு முன் நரபலி கொடுத்ததாக ஒரு பொய்யான வீடியோ பதிவு உலவுகிறது.
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது. ஒட்டு மொத்த அண்டத்தின் குறியீடாக நடராஜர் அமைந்துள்ளார்," என்பதை குறிப்பிடவே சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஆராய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு கூற்று.
உண்மையான காரணம் என்ன?
இந்தியா மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் இடையில் 1960களில் ஏற்பட்ட தொடர்பு பல்லாண்டுகளாக நீடித்து வருவதைக் கொண்டாடும் வகையில் இந்தியா அளித்த பரிசுதான் அச்சிலை. அவர்களை பொறுத்தவரையில் அது ஒரு அழகுசாதனம்.
புரளி:சமஸ்கிருதம், கம்ப்யூட்டர் கோடிங் செய்ய ஏற்ற மொழி
உண்மை:
சமஸ்கிருத மொழியின் குறியீடுகள் மூலம் உருவாக்கப்பட்ட மென்பொருள் என்றோ, சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டு மென்பொருட்கள் நிரல் செய்யப்படுவதற்கான வழிமுறை என்னவென்றோ இதுவரை யாரும் தெளிவுபடுத்தவில்லை.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment