சிரிக்க.... சில நிமிடம்

 






01.😂

நோயாளி : பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ?

டாக்டர் : பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?

 

02.😂

வேலு : "பாகவதர் ஏன் பாடும்போது கண்ண மூடிக்கிறார்?"

பாக்கி : "எதிர்த்தாப்ல பாட்ட கேக்கறவங்களோட முகபாவம் பாக்க சகிச்சலயாம்."

 

03.😂

நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!

மருத்துவர் : என்னாச்சி?

நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

 

04.😂

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க

மாயான்டி : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா, டாக்டர்?

 

05.😂

டாக்டர் வாத்தி : தேள் கொட்டினதுக்கு இப்ப தானே மருந்து வாங்கிட்டு போனிங்க ,மறுபடியும் ஏன் கேக்குறிங்க ?

 நோயாளி: மருந்து கொட்டிருச்சி டாக்டர் !

 

06.😂

பாக்கி : என் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .

ரமனன் : என்னாச்சு ?

பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா

 

07.😂

நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும், நோயாளி மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

 

08.😂

கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?

ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?

கோபால் : நான் home work செய்யலை சார்!

 

09.😂

நண்பர் 1 : எதுக்கு எல்லாப் பேஷண்டுகளும் ஜாலியா இருக்காங்க ?

நண்பர் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் ஆச்சே, அதான்!

 

10.😂

ரமனன் : "பேண்ட் வாத்தியக் காரங்க ஏன் நடந்துண்டே வாசிக்கறாங்க?"

வேலு : "பேண்ட் சத்தம் பொறுக்க முடியாமத்தான்."

 

11.😂

ரமனன் : வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன்.

வேலு : வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .

 

12.😂

ஆசிரமத்தில் :

கோல்ட் : குருவே பெண்ணாசை அறவே ஒழிய தாங்கள் அருள் புரிய வேண்டும்

சார்லஸ் : பின்ன எதுக்கு இந்த ஆசிரமத்துக்கு வந்தாய் சிஷ்யா ?

 

13.😂

ஒருவர் : பக்கத்து தியேட்டரிலே ‘ஆட்டுக்கார அலமேலு’ படத்தை ஏன் எடுத்துட்டாங்க?

மற்றொருவர் : நம்ம தியேட்டரிலே ‘பாயும் புலி’ ஓடுதுல்லே.

 

14.😂

பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!

பாக்கி : ஏன்?

பாஸ்கி : ஸ்ட்ராவுக்கு (strow) 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!

 

15.😂

காதலன் : கலா நல்லவேளை! 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே!

காதலி : இல்லாட்டி ?

காதலன் : 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்! ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே!

 

16.😂

வேலு : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ?

பாக்கி : யரோ ஒரு பாராசூட் வீரர் விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. ..

 

17.😂

பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.

ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?

பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.

 

18.😂

வேலு : வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?

ரமனன் : ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!

 

19.😂

லல்லி : நான் என் கணவரும் வீட்டுவேலையப்பங்கு போட்டு செய்வோம் !

மல்லி : நிஜமாவா ?

லல்லி : ஆமாம் பத்துப்பாத்திரம் தேய்ச்சாக்கூட ஆளுக்கு ஐந்து தேய்ப்போம்

 

20.😂

வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"

ரமனன் : "ஏன்?"

வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."

 

😂தொகுப்பு:செ.மனுவேந்தன் [jokes, comedy, siri,nakachchuvai]

No comments:

Post a Comment