01.😂
நோயாளி : பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ?
டாக்டர் : பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?
02.
வேலு : "பாகவதர் ஏன் பாடும்போது கண்ண மூடிக்கிறார்?"
பாக்கி : "எதிர்த்தாப்ல பாட்ட கேக்கறவங்களோட முகபாவம் பாக்க சகிச்சலயாம்."
03.
நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
மருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி
04.
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா,
டாக்டர்?
05.
டாக்டர் வாத்தி : தேள் கொட்டினதுக்கு இப்ப தானே மருந்து வாங்கிட்டு போனிங்க ,மறுபடியும் ஏன் கேக்குறிங்க ?
நோயாளி: மருந்து கொட்டிருச்சி டாக்டர் !
06.
பாக்கி : என் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .
ரமனன் : என்னாச்சு ?
பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா
07.
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும்,
நோயாளி மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
08.
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் home work செய்யலை சார்!
09.
நண்பர் 1 : எதுக்கு எல்லாப் பேஷண்டுகளும் ஜாலியா இருக்காங்க ?
நண்பர் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் ஆச்சே, அதான்!
10.
ரமனன் : "பேண்ட் வாத்தியக் காரங்க ஏன் நடந்துண்டே
வாசிக்கறாங்க?"
வேலு : "பேண்ட் சத்தம் பொறுக்க முடியாமத்தான்."
11.
ரமனன் : வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன்.
வேலு : வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா
வெளியிலே போய் நில்லு... போதும்.. .
12.
ஆசிரமத்தில் :
கோல்ட் : குருவே பெண்ணாசை அறவே ஒழிய தாங்கள் அருள் புரிய
வேண்டும்
சார்லஸ் : பின்ன எதுக்கு இந்த ஆசிரமத்துக்கு வந்தாய் சிஷ்யா
?
13.
ஒருவர் : பக்கத்து தியேட்டரிலே ‘ஆட்டுக்கார அலமேலு’ படத்தை
ஏன் எடுத்துட்டாங்க?
மற்றொருவர் : நம்ம தியேட்டரிலே ‘பாயும் புலி’ ஓடுதுல்லே.
14.
பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத
பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
பாக்கி : ஏன்?
பாஸ்கி : ஸ்ட்ராவுக்கு (strow) 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
15.
காதலன் : கலா நல்லவேளை! 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல
பாலை வார்த்தே!
காதலி : இல்லாட்டி ?
காதலன் : 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்!
ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே!
16.
வேலு : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ?
பாக்கி : யரோ ஒரு பாராசூட் வீரர் விமானம் பறந்துகிட்டு
இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. ..
17.
பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குடுத்தீங்கன்னா
நல்லா இருக்கும்.
18.
வேலு : வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ரமனன் : ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!
19.
லல்லி : நான் என் கணவரும் வீட்டுவேலையப்பங்கு போட்டு செய்வோம்
!
மல்லி : நிஜமாவா ?
லல்லி : ஆமாம் பத்துப்பாத்திரம் தேய்ச்சாக்கூட ஆளுக்கு
ஐந்து தேய்ப்போம்
20.
வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது
தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட
பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
😂தொகுப்பு:செ.மனுவேந்தன் [jokes, comedy, siri,nakachchuvai]
0 comments:
Post a Comment