"நீங்காதக் கனவுகள் நீளமாக போகுது
ஏங்காதக் நாட்கள் குறுகி வருகுது
தூங்காதக் இரவுகள் கூடி செல்லுது
தாங்காமல் நெஞ்சம் என்றும் துடிக்குது!"
"இலங்கை எம் தாய்த் திருநாடு
இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த தேசம்
இராவணன் ஆண்ட சைவ பூமியில்
இயக்கரை புத்தன் வெருட்டி கலைத்தான்!"
"பிறந்த மண்ணில் நிம்மதியாக வாழ
பிணக்கு இன்றி சமமாக இருக்க
பிரித்து ஆளுதல் அழிந்து போக
பித்தம் பிடித்து மனத்தில் எண்ணுகிறேன்!"
"சொந்த வாழ்விடம் பறியாது போக
சொந்த பந்தங்கள் ஒன்றாக சீவிக்க
சொல்ல முடியாத கவலைகள் தீர
நல்ல தீர்வை கனவு காண்கிறேன்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment