'கதிர்' விமர்சனம்
தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ் அப்பாதுரை, சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார்.
வேலை தேடிச் சென்னை சென்ற வெங்கடேஷ் சரியான ஆங்கிலம் பேச வராததால் ஏமாற்றமடைந்து ஊருக்கு வருகிறார். காதலுடன் கலந்து,கூலிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சொல்லி, சொந்த ஊரிலேயே நண்பர்களுடன் ஆரம்பித்த தொழிலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ஒருமுறை பார்க்கலாம்.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' விமர்சனம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா பிரபு, கலா மாஸ்டர், உசேன், மாறன், கிங்ஸ்லி, பிரபு, சித்ரா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
பகலில் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும்போது நயன்தாராவையும், இரவு பப்பில் பவுன்சராக இருக்கும்போது சமந்தாவையும் ஒரே நேரத்தில் காதலிக்கிறார்; காதலிக்கப்படுகிறார் ராம்போ (விஜய் சேதுபதி). இதற்குக் காரணம் ‘டிஸ்சசோசியேட் ஐடிண்டிட்டி சிண்ட்ரோம் ’ எனப்படும் வினோத மன நோய்தான் என்றும் அவரை காதலிக்கும்போது இவரையும், இவரை காதலிக்கும்போது அவரையும் தெரியாது எனவும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையான காரணம் என்ன? நயன்தாராவையும் சமந்தாவையும் விஜய் சேதுபதி எப்படி காதலித்தார்? இருவருக்கும் உண்மை தெரிந்ததா? இருவரையும் எப்படி சமாளிக்கிறார்? யாரை திருமணம் செய்துகொள்கிறார்? இதுதான் படத்தின் கதை.
‘காலம் கிடக்கு நிறைய’ என்பவர்கள் ஜாலியாகப் போய் பார்த்து ரசிக்கலாம். அதைத்தாண்டி பெரிய முத்திரை எதையும் பதிக்கவில்லை.
'ஹாஸ்டல்' விமர்சனம்
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி ஷங்கர் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். ஆர்.ரவீந்திரன் தனது ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க,போபூ சசி இசையமைத்துள்ளார்.
சூழ்நிலை காரணமாக, ஒரு ஆண்கள் ஹாஸ்டலுக்குள் மாட்டிக் கொண்ட ஒரு இளம் பெண் எப்படி வெளியேறினார் என்பது தான் படத்தின் கதை
மலையாளத்தில் 2015 இல் வெளிவந்த வெற்றி படத்தின் தமிழ் ரீமேக்காக இருந்தாலும், இப்படம்
இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
'பயணிகள் கவனிக்கவும்' விமர்சனம்
ஷக்தி வேல் இயக்கத்தில் விதார்த், கருணாகரன், லட்சுமி பிரியா, மஸூம் ஷங்கர் என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். விஜயா ராகவேந்திர தயாரிக்க, சமந்த் நாக் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் 2019ம் ஆண்டில் வெளிவந்த 'விக்ரிதி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம். இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் எதையும் தீர விசாரிக்காமல் கண்ணால் பார்ப்பதை வைத்து எதை எதையோ பதிவிடும் ஆர்வக் கோளாறுகளால் அப்பாவி மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொன்ன படம்.
பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில், சோஷியல் மீடியா ஆர்வலர்களுக்கு பாடமாக ஒரு படம்.
'ஓ மை டாக்' விமர்சனம்
ஷரோவ் ஷண்முகம் இயக்கத்தில், அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
சர்வதேச அளவில் நாய்களை வைத்து நடத்தப்படும் போட்டிகளில் நம்பர்- 1 இடத்தில் இருக்கும் பிசினஸ்மேன் வினய். அவர், வளர்க்கும் நாய் பெற்றெடுத்த குட்டிக்கு பார்வை தெரியவில்லை என்பதால், அந்த குட்டியைக் கொன்று புதைக்க உத்தரவிடுகிறார். கொலைகாரர்களிடமிருந்து கதையின் ஹீரோ (பார்வை தெரியாத குட்டி நாய்) எப்படி தப்பிக்கிறார்? ‘சிம்பா’வாக வளர்ந்து, வில்லனுக்கு எப்படி சிம்ம சொப்பனமாக கர்ஜிக்கிறார் என்பதுதான் கதை.
போட்டி உலகத்தில் எப்படியெல்லாம் அச்சப்படாமல் பிரச்சனைகளை எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வெற்றிபெற வேண்டும் என்று ஊக்குவிக்கும் படம். அதற்காகவே பாராட்டலாம்.
👉👉👉👉தொகுப்பு: செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment