மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? /Origin of Language: When Did It Start and How Did It Evolve?
பேச்சு, எழுத்து, வாசிப்பு, புரிந்துகொள்ளல் ஆகியவையை பொதுவாக
மொழி ஆற்றல் என்ற ஒரு சொல்லால் அழைக்கலாம். மொழி முற்றிலும் மனித இனத்தின் பண்பாட்டு பரிணாம
வளர்ச்சியின் தோன்றலா அல்லது உயிரியல் பரிணாமத்தின் தோன்றலா ? அல்லது இரண்டின் கூட்டா? என்பது மானுடவியலாளர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவும்
கேள்விகள் ஆகும்.
இந்த கேள்விகளுக்கு விடை காண, தேடுதல் நடந்து கொண்டு இருக்கும் அதே வேளையில், 1861ல் பால் புரோக்கா (Paul Broca, a French neurosurgeon) என்னும் ஃபிரெஞ்சு நரம்பு அறுவை
சிகிட்சையாளர், மொழியை புரிந்து கொள்ள முடிந்த ஆனால் தொடர்ச்சியாக ஒரு வாக்கியத்தை பேசவோ எழுதவோ செய்யும் திறனை இழந்த [he could neither speak a complete sentence nor express his thoughts in writing], ஆனால், தான் [tan] என்ற அசை [syllable] மட்டும் தெளிவான ஒலியில் கூறுபவராக இருந்த, ஒரு நோயாளியின் மூளையை அவரின் இறப்பிற்குப் பிறகு ஆய்வு
செய்த போது, நோயாளியின் மூளையின் இடது அரைக் கோளத்தின் முன்பகுதியில் ஓரிடத்தில் சதையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார் [found a sizable lesion in the left inferior frontal cortex].
இதை
தொடர்ந்து, அதேமாதிரியான குறைபாடு உள்ள மற்ற எட்டு நோயாளிகளிடம் அவர் மேற் கொண்ட ஆய்வில், எல்லோருமே மூளையின் அதே இடத்தில் அவ்வாறே பாதிக்கப்
பட்டிருந்ததைக்
கண்டறிந்தார். இது அவரது புகழ் பெற்ற அறிக்கையான "நாம் இடது அரைக்கோளத்தால் பேசுகிறோம்" [“we speak with the left hemisphere”] என்பதை வெளியிட வழிவகுத்தது.
எனவே, மூளையின்
இந்தக் குறிப்பிட்ட பகுதியே “மொழியின் மையம்” [“language centre”] என்ற கோட்பாட்டை அவர் முன்வைத்தார். இப்பகுதி தான் பின்னர், கண்டு பிடித்தவரின் பெயரில் “புரோக்காவின் பகுதி”
[Broca’s area] என்று பெயரிடப்பட்டது.
புரோக்காவிற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து கார்ல் வெர்னிக் (Carl Wernicke, a German
neurologist) என்னும் ஜெர்மன் நரம்பியலாளர், பேச முடிந்த ஆனால் தொடர்பற்ற, பொருள் கொள்ள
முடியாத பேச்சைக் கொண்ட நோயாளிகளின் மூளையைச் சோதனை செய்தபோது, அதே இடது அரைக் கோளத்தில் பின் பகுதியில் இருக்கும் பாதிப்பைக் கண்டறிந்தார். மூளையின்
இப்பகுதி “வெர்னிக்கின் பகுதி” [Wernicke's area] என இன்று அழைக்கப் படுகிறது. [At the frontal end of this loop
lies Broca's area, which is usually associated with the production of language,
or language
outputs . At the other
end (more specifically, in the superior posterior temporal lobe), lies
Wernicke's area, which is associated with the processing of words that we hear
being spoken, or language inputs. Broca's area and Wernicke's area are connected by a large
bundle of nerve fibres called the arcuate fasciculus]
சமீபத்திய மூளையின் செயல் பாட்டினைப் படம் பிடிக்கும் உயர் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளில் புரோக்கா, வெர்னிக்கின் உட்பட இன்னும் சில பகுதிகள் மனிதனின் பேச்சு / மொழி சம்பந்தமான மூளைக் கட்டுப்பாட்டு மையம் என்பது உறுதி செய்யப்பட்டது. மொழி தொடர்பான சோதனைகளில், மூளையின் இந்தக் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே செயல் படுகின்றன எனவும், பிற அறிதல் செயல்பாடுகளின் போது இவை செயல்படுவதில்லை எனவும், அதனால் மூளையின் இந்தப் பகுதிகள் பேச்சு /மொழிக்கான தனிப்பட்ட மையப் பகுதிகள் என்பதும் மீண்டும் உறுதிசெய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. [In addition to Broca’s and
Wernicke’s areas, a third area of importance for language, located in the
parietal cortex, has been described
more recently] 2008 ஆம் ஆண்டு வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது (Rilling J.K., et al., 2008. The
evolution of the arcuate fasciculus revealed with comparative DTI.
Nature Neuroscience. 11,
426 – 428.). சிம்பன்ஸி,
மகாக் குரங்கு (Rhesus Macaque) மற்றும் மனித மூளைகளில், மொழி மையங்களின் செயல்பாட்டை ஒப்பிட்டு ஆராய்ந்த போது, மொழி /பேச்சின் தகவல்களை உள்வாங்கி, கடத்தி, புரோக்கா, வெர்னிக் மற்றும் இதர மொழி மையங்களைத் தொடர்புபடுத்தி, சிந்தித்து, வெளியிடும் பதில் தகவல் சமிக்ஞைகளைக் கடத்தும்
நரம்பிழைத் தொகுப்பு மனித மூளையில் அகன்று விரிந்தும், பெரிதாகவும் வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. மனித இனத்துக்கு நெருக்கமான மற்ற பேரினக் குரங்குகளில் இந்த நரம்பிழைத் தொகுதி மிகக் குறுகியதாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பரிணாமத்தில் மற்ற குரங்குகளை விட மூளையின் அளவு மனிதனுக்குப் பெரிதாக அமைந்ததும், அதனால் இந்த மூளையின் மொழி மையங்களின் விரிவும், இவற்றை இணைக்கும் நரம்பிழைத் தொகுதி செறிவாகவும், பெரிதாகவும் அமைந்ததுமே நாம் குரங்குகளை விட அதிக தகவல்களை கையாண்டு, சிந்தித்து, வெளிப் படுத்தும் உயர்தள தொடர்பு ஊடகமான மொழி என்னும் பண்பைப் பெறக் காரணம் என்பது தெளிவாகிறது [The arcuate fasciculus is a white-matter fiber tract that
is involved in human language. Here we compared cortical connectivity in
humans, chimpanzees and macaques (Macaca mulatta) and found
a prominent temporal lobe
projection of the human arcuate fasciculus that is much smaller or absent in nonhuman primates. This human
specialization may be relevant to the evolution of language].
எனவே, மொழியின் தோற்றுவாய், நவீன மனிதனின் மூளைக்கும் மனித குரங்குகளின் [chimpanzee] அல்லாது மற்ற மனிதப் பேரினங்களின் [hominids] மூளைக்கும் உள்ள வேறுபாடு, அவை எப்ப ஏற்பட்டான, எந்த பரிணாம அழுத்தத்தில் [evolutionary pressure] என்பது முக்கியமாகிறது. இவை தொல்பொருள் படிம ஆதாரங்களில் இருந்து ஓரளவு அடையாளம் காணக் கூடியவை. என்றாலும் முழுமையான விடையாக உறுதி படுத்த, நாம் மூளை என்பது என்ன என்று சற்று விரிவாக பார்க்க வேண்டும்.
மூளை என்பது உடல் செயல் பாடுகளை ஒருங்கிணைக்கும், கட்டளைகளைக் கடத்தும் கட்டுப்பாட்டு மையம் என்று சுருக்கமாக சொல்லலாம். எனவே, மூளையின் செயல்க்கட்டுப் பாட்டு மையங்களைத் தூண்டும் காரணிகள் எவை என பார்த்தால், அவை புரதங்களே. புரதங்களோ மரபணுக்களால் குறிக்கப் படுபவை. இதுவே
உயிரியல் பண்புகளைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் அடிப்படை அலகுகள் ஆகும். அப்படியானால் மூளையின் மொழிமையங்களின் வளர்ச்சிக்கும், தூண்டுதலுக்கும், இணைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமான மரபணுக்கள்
எவை என்பது முக்கியமாகிறது.
2001 ஆண்டு, மொழி / பேச்சுக் குறைபாடுள்ள, லண்டனில் வாழும் ஒருவரிடம்
செய்த ஆய்வின் மூலம்
FOXP2 (Forkhead box protein2) என்று பெயரிடப்பட்ட ஒற்றை மரபணுவில் ஏற்பட்டுள்ள
மாற்றம் தான் அவருடைய மற்றும் அவருடைய மூன்று தலைமுறையைச் சேர்ந்த, பாதிக்கும் அதிகமான பேர்களின், பேச்சு / மொழி குறைபாட்டிற்கான காரணம் என்று கண்டுபிடிக்கப் பட்டது.
மனித முதல் மொழியின் மரபணு என்று இன்று கருதப்படும் ஃபாக்ஸ்பி 2
செயலற்ற நிலையில் இருக்கும் போது, கடுமையான பேச்சு மற்றும் மொழி சிக்கல்களை ஏற்படுத்துகிறது
என்பது இந்த ஆய்வு மூலம் உறுதிசெய்யப் பட்டது. அது மட்டும் அல்ல, பல்வேறு நாடுகளிலும் பேச்சு / மொழிக் குறைபாடுள்ளவர்களில் இந்த FOXP2 மரபணு மாற்றம் கண்டு பிடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் இன்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த FOXP2 மரபணுவும், அதனால் குறிக்கப்படும் புரதமும் சிம்பன்ஸி,
போன்ற மனிதனுக்கு பரிணாமத்தில் நெருங்கிய பேரினக்
குரங்குகளிடமும் இருக்கிறது. ஆனால், மனிதனில் உள்ள ஃபாக்ஸ்பி 2 என்ற மரபணுவை,
சிம்பன்ஸியில் உள்ள ஃபாக்ஸ்பி 2 மரபணுவுடன் ஒப்பிடும்போது, மனிதனது வேறுபட்ட இரண்டு
அமினோ அமிலங்கள் இருப்பது தெரிய வந்தது. எனவே இவை அவைகளின் மூளையின் மீது மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்தது. இந்த வித்தியாசம் தான், மூளை எவ்வாறு அவைகளில் உருவாகிறது என்பதை பாதிக்கிறது / தீர்மானிக்கிறது. ஏன் மனிதன் மட்டும் மொழி பேசுகிறார் என்பதை இந்த வேறுபாடுதான் தீர்மானிக்கிறது அல்லது
விளக்கமளிக்கிறது எனலாம் [Experiments have now revealed that
the human version of FOXP2, which has two different amino acids compared with
the version carried by chimps, has differing effects on genes in the brains of the two species. These differences
could affect how the brain develops, and so explain why only humans are capable
of language]. பரிணாமத்தில் ஒரு புரதத்தில் இரண்டு அமினோ அமிலங்கள் மாற்ற
மடைவதென்பது எவ்வளவு பெரிய வியக்கத்தக்க உயிரியல் பண்பு / திறன். மற்றும் அந்த திறன் தான் இந்த வித்தியாசத்தை உண்டாக்க முடியு மென்பது இங்கு ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.
மேலும் நியாண்டர்தால்களின் புதைபடிவ எச்சங்களிலிருந்து (fossils) பிரித்தெடுக்கப் பட்ட மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு. அவைகளும் மொழி பயின்றிருக்கலாம் என்கிறது
( Krause J., et al., 2007. The Derived FOXP2
Variant of Modern Humans Was Shared with Neandertals. Current Biology 17:
1-5.). எலும்பால் செய்த புல்லாங்குழல் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம் நியாண்டர்தால் மனிதன் இசையறிவும் பெற்றிருந்திருக்கலாம் என்கிறது அகழ்வாராய்ச்சி சான்றுகள். இவை மொழிக்கான ஆதி மரபணுப் பின்புலத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
என்றாலும், ஒரு உயிரியல் பண்பும் அதற்கான மரபியல் காரணிகளும் சேர்ந்தே பொதுவாக பரிணாம வளர்ச்சி நடைபெறும் என்பதால், மற்றும் பேச்சு / மொழிக்கான மரபணு என்று கருதப் படும் FOXP2, மனித மொழி வளர்ச்சிக்கு முன்பே தோன்றி விட்டது என்பதால், மொழிக்கான காரணம் மரபியல் அல்ல கலாச்சாரப் பரிணாமம் தான் என்ற ஒரு கருதுகோளும் சில அறிஞர்களிடம் இன்னும் இருக்கிறது (Chater N., et al., 2008.
Restrictions on biological adaptation in language evolution. PNAS. 106 ( 4):
1015-1020)
சமகாலத்தின் முக்கியமான மொழியியல் அறிஞரான நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) இந்த மரபணுக் கண்டு பிடிப்புகள் வெளி வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே, மனிதனின்
மொழி எந்த தொல் / அடிப்படை மொழியிலிருந்தும் ‘பரிணமித்த’ தில்லை, மாறாக உயிரியல் பரிணாமத்தின் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மனிதனுக்கு நேரடியாகவே
கிடைத்த சிறப்புப் பண்பு என்று தொடர்ந்து வாதிட்டு வந்தார். இப்போது பெருகி வரும் மரபணு ஆய்வு முடிவுகள் அதைப் பெரிதும் ஆமோதிப்பதாகவே உள்ளது.
இறுதியாக, மனித குரங்கில் இருந்து மனிதனுக்கு ஃபாக்ஸ்பி 2 வில் ஏற்பட்ட மாற்றமும் மற்றும் குரல்வளையும் (Larynx) அதனுடன் தொடர்புடைய பாகங்களின் மாற்றமும், மற்றும்
மனிதனின் அன்றைய வாழ்க்கை சூழலும்
பேச்சு மொழியை தோற்றுவிக்க உறுதுணையாக இருந்து இருக்கும். எனவே இவ்வற்றை தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவங்கள் மூலம் கண்டறிந்து, அவை நிகழ்ந்த காலங்களை ஓரளவு தீர்மானிக்கலாம். இதன் படி, இன்றில் இருந்து 200,000 ஆண்டுகளுக்கும் 100,000 ஆண்டுகளுக்கும் இடையில் ஃபாக்ஸ்பி 2 மாற்றம்
ஏற்பட்டு இருக்கலாம் என அறிய முடிகிறது. மேலும் எல்லா காரணிகளையும் கவனத்தில் கொள்ளும் பொழுது, பேச்சு மொழி, இன்றில் இருந்து 50,000–150,000 ஆண்டுகளுக்கு இடைப் பட்ட பகுதியில், ஹோமோ சேபியன்கள் (homo sapiens, "அறிவுள்ள மனிதன்") பரிணமித்த காலத்தில், மொழி முதலில் உருவானது என இன்று பரிந்துரைக்கப்
பட்டுள்ளது [The results suggest that language
first evolved around 50,000–150,000 years ago, which is around the time when
modern Homo sapiens evolved]
"செம்மொழியே"
[அந்தாதிக் கவிதை]
"செம்மொழியே சுமேரியா தந்த பழம்தமிழே //
பழம்தமிழாய் இலக்கியம் சுவையுடன் தந்து //
தந்ததை மறந்து சிந்துவெளியில் மௌனமாகி //
மௌனமே பெரும் ஆற்றலைக் தந்திட //
தந்திட்டாய் சங்க இலக்கியம் தமிழகத்தில் //
தமிழகம் செழித்திட்ட வரலாறு செப்பி //
செப்பிய இலக்கியத்தில் பண்பாடு சேர்த்து //
சேர்த்த கருத்துத் தமிழை செழுமையாக்க //
செழுமையே உன்னைச் சிறப்பு மொழியாக்க //
மொழியில் உலகில் ஒன்பது முத்துக்களின் //
முத்துக்களில் முதிர்ந்த இலக்கிய மொழியே! //
மொழியில் மூத்த தமிழ் செம்மொழியே !"
எம் தாய் மொழியாம் தமிழுக்கு வணக்கம் கூறி இக் கட்டுரையை இத்துடன் தற்காலிகமாக முடிக்கிறேன்.
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment