சர்தார்ஜி ஜோக்ஸ் !!!
நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...
முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...
காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...
இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...
சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...
சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?
சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...
அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...
சி.இ.ஓ : ஙயே !!
காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..
சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!
மேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க ?
சர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..
மேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட்
சர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...
சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...
முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...
சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது சர்தார்
2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...
இண்டர்வியூவில்...தேர்வாளர் : ஒரு எலக்ட்ரிக் மோட்டார் எப்படி இயங்கும்...சொல்லுங்கள்...
சர்தார்ஜி : ட்ட்ட்ருருருருருருருருர்ரூரூருரு
தேர்வாளர் : யோவ் நிறுத்துய்யா நிறுத்துய்யா
சர்தார்ஜி : ரூரூரூருரு ட்ட்டு டுடு டுடு டுடு.
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்..
அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்கஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய
மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்தலேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னுகோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரியஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!
சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டேதிரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்பஅதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்குமனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்தெரியலே...!!
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்ததுஅவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர்[spare]எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்புடிச்சுருச்சு.
போலீஸும் சர்தார் தான்.எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்..
உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..?
( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து நீட்ட.. )அட.. நீயும் போலீஸ் தானா..?
இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?
😄😅😆😍
நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாகதிருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார்.
இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே..
தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்கொண்டார்.
வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..
ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?
நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது.
நண்பர்சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.அதனாலே தங்கிட்டு காலேல போ..சர்தாரும் ஒப்புக்கொண்டார்.
சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்துகொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..
கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டேதிரும்பினார்..
நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி..
அதான் என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!
தொகுப்பு:செ. மனுவேந்தன்
No comments:
Post a Comment