எம் திருமணத்தின் பரிசாக எம்கையில் தவழும் அவன்மேல் பாசம் அத்தனையும் கொட்டிவளர்த்தோம். அது தன்னலம் என்று என்றுமே எண்ணவில்லை.
ஏன் -
பாசத்தை உணரவும், கொடுக்கவும் பெறவும் திறன் பெரும்பாலும் உயிரியல் ரீதியானது என்றுகூட சிந்திக்கவில்லை. இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்றுயாராவது
கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே பாசமும் ஆகும்.
அவனுக்கு எல்லா வசதியும் கொடுத்து, படிப்பில் ஒரு எல்லைக்கே கொண்டுபோனோம். நல்ல உயர்தர வேலையும் கிடைத்தது. அழகானபெண்ணும் காதலியாக வரவே, அவனின் விருப்பத்தின்படி, சிறப்பாக ஆடம்பரமாக திருமணமும் மகிழ்வாக நிறைவேறியது.
பாசத்திற்கு நாம் நாளாந்தவாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை
ஒரு அளவிடக்கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "பாசத்தை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய பாசம்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பது மெல்லமெல்ல புரியத்தொடங்கியது.
திருமணத்துக்கு முன் இருந்த அவனின் போக்கு இப்ப மாறத் தொடங்கி, நாம் இதுவரை புரியாததை ஒவ்வொன்றாக அளந்து காட்ட தொடங்கியது.
பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு
ஒரு குறிப்பிட்டஅளவு தன்னலம்
அவசியமாகிறது. அதுமாட்டு அல்ல, தன்னலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. பாசம்கூட அதற்கு
விதிவிலக்கல்ல!!
ஆனால், பெற்ற தாய் தந்தையரைகூட புறந்தள்ளும் அளவிற்கும் அதுபோகும் என்பது நாம் நினைக்கவே இல்லை. பணம், அந்தஸ்து எல்லாவற்றையும் மறைக்கும் என்பது உண்மைதான் !
தாயின் மறைவிற்கு கொள்ளிவைக்கவென வந்த பொழுது தான் நான் கடைசியாக அவனை பார்த்தேன்.
தமிழ் மூதாட்டி ஔவையாரின் ஒரு பாடல் எனக்கு ஞாபகம் வருகிறது
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு"
[இப்ப என்னைப் பாடையில்
கிடத்திவிட்டார்கள். எனக்கு இன்று இறுதிச்சடங்காம். நான் தீயில் சங்கமிக்கும் பொழுது, நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது, மகனை ஒருமுறை பார்க்க
தேடிப் பார்த்தேன். உறக்கம் துறந்த பாசங்களை கண்டேன். அவர்களுக்கிடையில் உரிமை காட்டிட
வந்த மகனையும் கண்டேன்!!]
கடைசியாக என் மகனிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன், என் பெயரை மறக்க வேண்டாம், என் பெயர் எம் அடையாளம், எங்கள் இருப்பு, இனத்தின் வாழ்வு!!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/அத்தியடி, யாழ்ப்பாணம்]
Great Expression! Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth& knowledge!
ReplyDeleteFrom Facebook-
ReplyDeleteManu Sella
தாயின் மறைவிற்கு கொள்ளிவைக்கவென வந்த பொழுது தான்
Reply2d
Manu Sella
எம் திருமணத்தின் பரிசாக எம்கையில்
Reply2d
Manu Sella
பெற்ற தாய் தந்தையரைகூட புறந்தள்ளும்
Reply2d
Parathakularani Shanmugaraja
Reply1d
Manu Sella
Parathakularani Shanmugaraja நன்றி,தொடர்வோம்
Reply1d
Ganesalingam Selvanayagam
சிறப்பு
Reply1d
Manu Sella
Ganesalingam Selvanayagam நன்றி,தொடர்வோம்
Reply1d
Yasodha Roger
Very nice 👍
Reply17h
Manu Sella
Yasodha Roger நன்றி,தொடர்வோம்