சிரிக்க.. சில நிமிடம்...

 

😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

👳👴

ஒருவர் : உங்களுக்குத் தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.

மற்றொருவர் : ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.

 👦👨

கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு

பாபு : இதுவாடா முடியும்.

 👦👨

கோபு : ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்?ஏன்னா...

பாபு : அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்..

 👦👨

கோபு : உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?

பாபு : கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

 👳👴

ஜோன்ஸ் : ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?

பீன்ஸ் : அது வாயில்லா ஜீவன்.

 👯

தோழி 1 : உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.

தோழி 2 : ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.

 👦👱

வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?

ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

 👸👩

ஒருவர் : என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒண்ணுக்கு காசு தர்றீங்க?..யோவ்..

மற்றொருவர் : நாலு கால் ஒண்ணுதனேயா....

 👴👲

இட்லிக்கார் : என் மனைவி இட்லி பண்ணா மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்..

பச்ச : அப்படியா ?

இட்லிக்கார் : ஆமாம் , மீந்து போன இட்லிய தொடுத்து தலைல வெச்சிப்பாள்னா பாத்துக்கோங்க !

 👦👨

ரமணன் : லோ-பட்ஜெட் படம்கிறதுக்காக இப்படியா ?

பாக்கி : என்னவாம் ?

ரமணன் : கிளிசரினுக்குப் பதிலா நடிகர் நடிகைகளை அறை கொடுத்து அழவைக்கறாங்க.. ..

 👦👨

பாபு : உன் மனைவி யாருக்கு ஓட்டுப் போடுவாங்க?

கோபு : நான் யாருக்கு ஓட்டுப் போடுவேனோ, அவருக்குத்தான்

பாபு : யார் அவர்?

கோபு : அதை இன்னும் என் மனைவி முடிவு செய்யவில்லையே!

 👤👨

மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!

ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!

மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

 👩👤

ஆசிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?

மாணவன் (ரஜினி விசிறி) : மிஸ், பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும். சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.

 👳👦

தந்தை : எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.

மகன் : நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

 👴👵

அனல் சகோ : டாக்டர் , நாலம் நம்பர் பேஷண்டுக்கு முன்னாடி ஆப்ரேஷன் பண்ணிட்டிங்க

டாக்டர் வாத்தி : இதுக்கு போய் ஏன் இவ்ளோ பதற்றப்படறே ?

அனல் சகோ : இல்ல டாக்டர் முதுகுல ஆப்ரேசன் பண்ணுறதுக்கு பதிலா முன்னாடி வயித்துல பண்ணிட்டிங்க !

 👦👱

ரமணன் : அது என்ன கோல்டு சாம்பார்...?

வேலு : இதிலே 24 கேரட் போட்டிருக்கு அதான்

 👴👲

தொண்டன் 1 : எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

தொண்டன் 2 : எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.

 👭

ராணி : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!

வேணி: அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட்(sun light soap) சோப்பாம்.

 👴👳

வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா

பாக்கி : நீ என்னாவே....?

வேலு : காலியாயிருவேன்.

 👧👨

பட்டைய கிளப்பும் பாக்கி : "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?"

பேட்டை மாமா : "குறுக்கு விசாரணை பண்றாராம்".

 👭

ராணி : ஒஙக வீட்டு டி.வில ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வில படம் ஏன் சின்னதா தெரியுது

வேணி : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது !

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment