வெளிவந்த படங்கள் எப்படி?

 


‘’இடியட்’’ விமர்சனம்         Idiot Cinema Movie Review

முக்கிய நடிகரான மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிக்கும் திகில் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தில்லுக்கு துட்டு புகழ் இயக்குனர் ராம்பாலா இயக்குகிறார்.

பாழடைந்த பங்களா, பழிவாங்கத் துடிக்கும் ஆவிகள், அந்த வீட்டுக்குள் சிக்கும் அப்  பாவிகள், பேயை  விரட்டும் மந்திரவாதி என காலம் காலமாக தமிழ் சினிமாவில் வரும் அதே கதைதான்.

இடியட் யாரென்று உங்களுக்குப் புரியும்.

 

‘’செல்ஃபி’’ விமர்சனம் -Selfie Cinema Movie Review

 மதி மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் மேனன், வர்ஷா பொல்லம்மா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம்.  கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க,  இப்படத்தின் நாயகன்  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார். முதலில் சிறியதாக சம்பாதிக்கும் ஜி.வி.பிரகாஷ், பின்னர் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

இறுதியில் ஜி.வி.பிரகாஷ் சிக்கலில் இருந்து விடுபட்டாரா? இல்லையா? சிக்கலை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பணம் பறிக்கும் கல்லூரிகள் , அதன் பின்னணி மற்ரும் மாஃபியா கும்பல் பற்றியும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மதிமாறனுக்கு ஒரு பூங்கொத்து பார்சல்.

 

மன்மத லீலை விமர்சனம்-  Manmatha Leelai Movie review

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன், ஜெய பிரகாஷ் என  பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை  முருகானந்தம் தயாரிக்க,  பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

பெண் பித்தனான  அசோக்செல்வன் 2010 மற்றும் 2020 இல் சந்திக்கும் பெண்கள் தொடர்புச்  சம்பவங்களில் சிக்கிக்கொண்டு  அதில் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை

இளைஞர்களை மட்டுமே குறி வைத்து இப்படம் [வயது வந்தோருக்கு மட்டும்] எடுக்கப்பட்டிருப்பதால் எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

 

‘’அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’’ விமர்சனம்- 

Achcham Madam Naanam Payirppu Review

 ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அக்ஷரா ஹாசன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்.

திருமணத்திற்கு முன் தனது காதலனுடன் உறவு வைத்துக்கொள்ள ஆசைப்படும் அக்ஷரா ஹாசன் தனது இரு தோழிகளிடம் ஆலோசிக்கும் அவர், தோழிகள் ஆலோசனைப் படி நடந்தரா, அவரின் வாழ்க்கையில் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்ற குணங்கள் அணுகப்படுவது எப்படி என்பதையே இப்படம் பேசுகிறது.

கதை சொல்லல் பாணியால் மனதில் நிற்காமல் செல்கிறது.

 

‘’ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்)’ விமர்சனம் - Raththam Ranam Rowthiram Review

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலாற்று நிகழ்வை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம்.  தனய்யா தயாரிக்க கீரவாணி இசையமைத்து,தெலுங்கு திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, கன்னடம், மற்றும் மலையாளம்மொழிகளில் வெளிவந்தது.

1900 ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வரும் போது, பழங்குடியின மக்களில் ஒரு சிறுமியை ஆங்கிலேயர்கள் அரண்மனைக்கு இழுத்து வருகின்றனர். ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் நட்பாகிறார்கள். இறுதியில் ஜூனியர் என்டிஆர் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறுமியை மீட்டாரா? ஜூனியர் என்டிஆரை, ராம் சரண் தடுத்தாரா? இவர்களின் நட்பு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சுதந்திர தாகத்துடன் களத்தில் போராடியவர்களின்  இரத்தங்கள், ரணங்கள், ரௌத்திர செயல்களே இந்த இரத்தம் ரணம் ரௌத்திரம்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment