சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக்கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.
…..தொடர்கிறது....
⇴⇴⇴⇴⇴⇴⇴46:
மழை
இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும்
தவம்
இலார் இல்வழி இல்லை; தவமும்
அரசு
இலார் இல்வழி இல்லை; அரசனும்
இல்
வாழ்வார் இல்வழி இல்.
மழையில்லா விட்டால் உலக மக்கட்கு நலமில்லை. அம் மழையும்
தவமுடையவரில்லாதவிடத்துப் பெய்தலில்லை. அத்தவம் செய்தலும், முறையான
அரசனில்லாத நாட்டில் நிகழ்தலில்லை. அவ்வரசனும் குடிகளில்லாத இடத்தில்
இருப்பதில்லை.
⇴⇴⇴⇴⇴⇴⇴47:
போதினான்
நந்தும், புனை
தண் தார்; மற்று
அதன்
தாதினான்
நந்தும், சுரும்பு
எல்லாம்; தீது
இல்
வினையினான்
நந்துவர், மக்களும்; தம்தம்
நனையினான்
நந்தும், நறா.
மாலை பூவினால் விளங்கும். வண்டுகள் அப்பூவில் உள்ள தேனாற் பொலியும்.
நற்செயல்களால் மக்கள் பொலிவர். தேன் தாமிருக்கும் மலர் வகைக்கு ஏற்பப் பெருகி
இனிக்கச் செய்யும்.
⇴⇴⇴⇴⇴⇴⇴48:
சிறந்தார்க்கு
அரிய, செறுதல்; எஞ்
ஞான்றும்
பிறந்தார்க்கு
அரிய, துணை
துறந்து வாழ்தல்;
வரைந்தார்க்கு
அரிய வகுத்து ஊண்; இரத்தார்க்கு ஒன்று
'இல்' என்றல்
யார்க்கும் அரிது.
சிறந்த நண்பர் தம்முள் ஒருவரையொருவர் சினந்து கொள்ளமாட்டார்கள். உயர்
குடிப்பிறப்பினர் தன் இனத்தாரை நீங்கி வாழமாட்டார்கள். தமக்கே செலவு செய்து
தன்னலம் கருதி வாழ்வோர் பிறர்க்குப் பகுத்துண்டு வாழும் பண்பறிய மாட்டார்கள்.
அருளுடையவர்கள் இரந்தவர்களுக்கு இல்லை என்று கூற மாட்டார்கள்.
⇴⇴⇴⇴⇴⇴⇴49:
இரை
சுடும், இன்புறா
யாக்கையுள் பட்டால்;
உரை
சுடும், ஒண்மை
இலாரை; வரை
கொள்ளா
முன்னை
ஒருவன் வினை சுடும்; வேந்தனையும்,
தன்
அடைத்த சேனை சுடும்.
பிணியுள்ள உடம்பில் சேரும் உணவு, செரிக்காமல்
துன்புறுத்தும். அறிவில்லாரை அவர் வாய்ச் சொல்லே வருத்தும். முன் செய்த தீவினைகள்
இம்மையில் வந்து துன்புறுத்தும். நீதி வழியில் நடத்தப்படாத சேனைகள் அரசனையே
கொல்வர்.
⇴⇴⇴⇴⇴⇴⇴50:
எள்ளற்பொருளது, இகழ்தல்; ஒருவனை
உள்ளற்பொருளது, உறுதிச்
சொல்; உள்
அறிந்து
சேர்தற்பொருளது, அற
நெறி; பல்
நூலும்
தேர்தற்பொருள, பொருள்.
பிறரை இகழுதல் என்பது இகழக்கூடிய செயலாகும். ஒருவனது உறுதியான சொல்லைக் கொண்டு
அவனை நண்பனாகத் தேர்ந்தெடுக்கலாம். உண்மையறிந்து அறவழிகளைக் கடைப்பிடிக்க
வேண்டும். பல நூல்களையும் ஆராய்ந்து தேடுதற்குரிய பொருள்கள் மெய்ப் பொருள்களாம்.
'நான்மணிக்கடிகை' தொடரும்....
Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, சுடும், இலக்கியங்கள், இல்லை, இல்வழி, நந்தும், அரிய, பதினெண், நான்மணிக்கடிகை, கீழ்க்கணக்கு, மாட்டார்கள், துன்புறுத்தும், மழையும், சங்க, இலார்
No comments:
Post a Comment