மொழியின் தோற்றம்: 09


மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது?

Origin of Language: When Did It Start and How Did It Evolve?

 


இன்றைய பல அறிஞர்களின் கருதுகோள்களின் படி, மொழியின் வருகை அதிகமாக, இன்றில் இருந்து 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கும் 32,000 ஆண்டுகளுக்கும் இடையில் ஏற்பட்டு  இருக்கலாம். அத்துடன் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்  மற்றொரு முன்மொழிவு [கருத்து] நியண்டர்டால்களின் மொழித்திறன் [Neanderthals’ language ability]  ஒரு மனித குரங்குக்கும் நவீன மனிதனுக்கும் இடைப்பட்டது என்பது ஆகும். எனவே இந்த மொழியின் தோன்றலை சரியாக அறிந்து விடை காண தொல்லியல் ஒரு முக்கியமாகிறது. நியாண்டர்தல் மனிதர்கள்   பரிணாமப் படி நமக்கு நெருங்கிய உறவினர்களாக நம்பப் படுகின்றார்கள்.  அவர்கள் நம்முடைய உடனடியான  மூதாதையர் என்று சில ஆய்வாளர்களால் கருதப்பட்டிருந்தாலும், இப்போது பெரும் பாலான ஆய்வாளர்கள் நியாண்டர்தல் மனிதர்களும் தற்காலத்திய மனிதர்களும் பொதுவான மூதாதையர்களை கொண்டிருக்கலாம் என்று ஒப்புக் கொள்கின்றனர்.  அதாவது, சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி, நம்முடைய மனித இனமாக [ஹோமோ சேபியன்ஸ்] பரிணாம வளர்ச்சி பெற்றது. இன்னொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் [Homo neanderthalensis] எனப்படும் நியாண்டர்தால்களாக [Neanderthal] பரிணாமம் அடைந்ததாகவும்,  430,000  ஆண்டுகள் பழமை வாய்ந்த நியாண்டர்தல் போன்ற புதைபடிவங்கள் இன்று கண்டு எடுக்கப் பட்டாலும், 130,000 ஆண்டுகளுக்கும்  40,000 ஆண்டுகளுக்கும் இடையிலேயே அவைகளின்வாழ்வு பெரும்பாலும் அமைந்ததாகவும்  காணப்படுகிறது.


மேலும்  24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் முற்றாக அழிந்துபோனது. அவர்கள் நம் முன்னோர்கள் அல்ல (சிறிதளவு கலப்பு இனப்பெருக்கம் நடந்தது மட்டும்  விதிவிலக்கு). சகோதர உயிரினக் குழுவாக நமக்கு இணையாக பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள் ஆகும். தற்கால நவீன மனிதன் அல்லது  ஹோமோசேபியன் சுமார் 2 லட்சம் வருடம் முன்பு ஆப்பிரிக்காவில் பரிணாமம் அடைந்ததாகவும் [தோன்றியதாகவும்] கருதப்படுகிறது. அதாவது நியாண்டர்தல்கள் மறைவதற்கு பல  காலங்களுக்கு முன்னராகவே தோன்றி விட்டார்கள்.  எனவே ஒரு நேரத்தில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து இருக்கலாம்? 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து போனதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் முன்னைய தற்கால நவீன மனிதன் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா வருவதும்,  நியாண்டர்தல்கள் அந்த காலத்தின் பின் மறைவதும் நிகழ்வதால், ஒருவேளை, நவீன மனிதனுடனான உயிர்வாழ தேவையான வளங்களுக்கான போட்டியை சமாளிக்க முடியாமல் போயிருக்கலாம் என நம்பப் படுகிறது [Perhaps Neanderthals were unable to cope with competition for resources from incoming groups of Homo sapiens] அல்லது  பரிணாம உயிரியல் வல்லுநர் நிக்கோலஸ் லாங்ரிச் [evolutionary biologist Nicholas Longrich]  தெரிவித்தது போல நவீன  மனிதனுடன் ஏற்பட்ட போரில் அவர்கள் அழிந்திருக்கலாம் ? பண்டைய காலத்தில் மனிதர்களைப் போன்ற எலும்பு அமைப்புகளுடனும், மரபணு கூறுகளுடனும்  வாழ்ந்த நமது  மூதாதையர்கள், ‘ஹோமோ எரக்டஸ்' [Homo erectus] என அழைக்கப்படுகின்றனர். இது 1.89 மில்லியன் மற்றும் 110,000  ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச்

சேர்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


விலங்குகள் மொழி பேசா விட்டாலும், அவை பலவிதமான வழிகளில், உதாரணமாக உடல் மொழி அல்லது சைகை அடையாள மொழி  அல்லது சத்தங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன,   மேலும் ஒரு அடிப்படை மட்டத்தில் [rudimentary level], மரங்களும் தொடர்பு கொள்கின்றன என இன்று சில ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களுக் கிடையில் மொழி இல்லாத தொடர்புகள் [Non-verbal communication or transmission of information], உதாரணமாக, முகம் மற்றும் உடல் சைகைகள்,  அல்லாது வேறு சொற்கள் அல்லாத தொடர்புகள் [நெருக்கனியல் & உடலசைவியல் / ப்ராக்ஸெமிக்ஸ் & அசைவியனியல் / proxemics and kinesics] இன்னும் பாவனையில் இருக்கலாம். என்றாலும் மனித பரிணாமத்தில் இவையின் பெரும் பகுதி பேச்சு   மொழியால் இன்று அகற்றப் பட்டுவிட்டது. எனவே பேச்சு மொழியின் மூலத்தை [origins of human language] கண்டறிய மனித இனத்தின் தனிப்பட்ட வளர்ச்சியையும் உயிரினங்களின்  வரலாற்று வளர்ச்சியையும் [Ontogeny or embryonic development and phylogeny or biological evolution] நாம் கண்டறிய வேண்டும். இங்கு தான் தொல்பொருள் எச்சங்கள் மற்றும் அவர்களின்  முன்னைய  வாழ்க்கை பாணி மிகவும் முக்கியம் பெறுகின்றன. [Proxemics is a type of nonverbal communication involving how we deal with the environment around us. For example, if someone were sharing personal secrets with a very close friend, their proxemics would be different than if they were attending a lecture at a school. A person would not be standing within a few inches of a professor while he is giving the lecture. /  Kinesics or kinesic communication is all about communication through body movements, such as gestures and facial expressions. It is all about non-verbal behavior using any part of the body]

 

மொழி ஏன் தோன்றியது என நாம் கவனித்தால், உதாரணமாக, மனித இனம் குழுக்களாக உருவாகி, சில தேவைகளின் அடிப்படையில், ஒன்றாக நகர்ந்த பொழுது, குழுக்களின் வேட்டையாடும் திறனும் அதிகரித்து இருக்க வேண்டும். எனவே குழுக்களை நெறிப்படுத்த, வேட்டையை வெற்றிகரமாக உருவாக்க, ஆயுதங்களைப் பற்றிய செய்திகளைப் பரிமாறிக் கொள்ள கட்டாயம் அவர்களுக்கு இடையில் ஒரு முறை தேவை பட்டு இருக்கும், அதுதான் மொழியின் தோற்றத்துக்கு வழிவகுத்தது எனலாம்.

 

எனவே, சிந்தனையில் எழும் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்தவும், மற்றவர்களின் எண்ணங்களை அறிந்துணரவும் பலவாறு பயன்பட்ட மொழியைச் செழுமையாக்க வேண்டிய   ஒருவகையான கட்டாயம் மனித மூளைக்கு ஏற்பட்டு இருக்கும். எனவே, மனித வரலாற்று வளர்ச்சியின் தொல்பொருள் தடயங்கள் படி, மொழியானது, சுமார் நூறாயிரம் ஆண்டுகளுக்கு   முன்னரே பேச்சு வழக்கினில் தோன்றியிருக்க வேண்டும், மூளையின் வளர்ச்சியும், மூளையின் செழுமையும் கைகோர்த்து நகர்ந்தன என்பதை நாம் மனத்தில் கொண்டால்,  மொழியின்   பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் மூளையின் அமைப்பினில் பதிந்து இருக்கும் என்று நாம் கருதலாம். எனவே தொல்பொருள் எச்சங்கள் மூலம், மூளை மற்றும் பேச்சுக்கு துணைபோகும்  பாகங்கள் மூலம், நாம் மொழி பற்றிய மர்மங்களை தீர்க்கலாம் என்பது வெளிப்படையாகும்.

 

பிறந்த கணத்தில் அழுகையில் ஆரம்பித்து, `அம்மாஎன்ற வார்த்தையில் தொடங்கி, இறுதி மூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு.  நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று, கழுத்தில் நிலை  கொண்டு பல், உதடு, நாக்கு, மூக்கு, அண்ணம் [மேல்வாய்] போன்றவற்றில் மூளையின் திட்ட மிட்ட உத்தரவின்படி சீரான அசைவைப் பெறும்போது, ஒரு சீரான பேச்சு  வெளிப்படுகிறது.

 

நமது மூதாதையர்களின் புதைபடிம எச்சங்களை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்கள் எப்போது பேசத் தொடங்கினார்கள் என்பதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன. ''பேச்சு என்பது ஒரு  வகையில் அழகான முறையில் சுவாசித்தல் என்பதாக இருந்திருக்கிறது,'' என்கிறார் பேராசிரியர் போலே [Robert Boley, professor of anthropology and anthropologist at the University of Cambridge.].   ''ஒலிகளை உருவாக்குவதற்காக நாம் அதிகமான கட்டுப்பாட்டுடன் சுவாசிக்கிறோம்,'' என்று அவர் குறிப்பிடுகிறார். ''அவ்வாறு செய்வதற்கு, நமது உடலில் மென்மையான தசைகளை  கட்டுப் படுத்த வேண்டியுள்ளது. சொல்லப் போனால், நமது உதர விதானமானது புதுமையாக பயன்படுத்தப்படுகிறது. பேசுவதில் தொடர்பில்லாத, பேச்சு இல்லாத மனித இனத்துக்கு  நெருக்கமானமற்ற உயிரினங்களின், மனிதக் குரங்குகளின் உதர விதானங்களைக் காட்டிலும், மனிதனின் உதர விதானத்தில் அதிக அளவில் நரம்புகள் செல்கின்றன.

[In fact, our canopy is used innovatively.  There are more nerves in the human abdomen than in ape-humans, which are close to non-speech-speaking, non-human species]''


பரிணாம வளர்ச்சியில் நமக்கு முந்தைய தொடர்பு முறையாகக் கருதப்படும், அழிந்துபோய் விட்ட நியாண்டர்தால் மனிதர்களின் [Neanderthal] தொன்மை படிமங்களை ஆய்வு செய்து   பார்த்ததில், அவர்களின் உதர விதானம் (The thoracic diaphragm, or simply the diaphragm), ஆதியில் இரண்டு கால்களில் நடந்து திரிந்த ஹோமோ எரக்டஸ் ["upright man" / Homo erectus / lived from 2   million years ago till about 100,000 years ago, possibly even 50,000 years ago]  எனப்படும் இனத்தவர்களில் இருந்து வேறுபடுவதை காண்கிறோம்.  எனவே, மனிதர்கள் [modern Homo sapiens, which have only been around for the last 200,000 years] எப்போது மொழியைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்கள் என்பதற்கான அடிப்படை கால வரையறை நமக்கு இதில் இருந்து கிடைக்கிறது என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.


மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த பொழுது அவனது தாடைப் பகுதி (Jaw) விரிவடைந்தது; இது நாக்கின் செயல்பாடுகளை அதிகரிக்கத் துணை புரிந்தது. உணவிற்கு ஒன்று, சுவாசத்திற்கு  ஒன்று என இரண்டு குழாய் அமைப்பு பொதுவாக பாலூட்டிகளுக்கு (Mammals) உள்ளது, ஆனால் மனித இனத்தின் தாடைப் பகுதியில் சில சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தால்   சரளமாகப் பேசும் திறனை மனிதர்களுக்கு இயற்கை கொடுத்துள்ளது, இவ்வகையான அமைப்பின் காரணமாக உண்ணும் உணவானது வாய்ப் பகுதியில் இருந்து உணவுக் குழாய்  [esophagus / the muscular tube that carries food and liquids from your mouth to the stomach] வழியாகச் செல்ல முடியும்; சுவாசப் பாதை [airway] வழியாகவும் செல்ல முடியும், சுவாசப் பாதை  வழியாக உணவு  செல்கையில் பெரும் அபாயம் (Risk for Aspiration) உள்ளது, இருப்பினும் பேசும் திறனை (Speech Capability) பரிசளித்ததால் இவ்வகையான அமைப்பை இயற்கைத் தேர்வின்  (Natural Selection) துணைகொண்டு மனிதர்கள் தக்க வைத்துக்கொண்டனர் என்கின்றனர்.

 

நுரையீரல்களிடையே காற்று செல்லும்பொழுது குரல் நாண்கள் (Vocal Cords) அதிர்வுருவதால் ஒலி உண்டாகிறது, மற்ற முதல் நிலை உயிரினங்களை ஒப்பிடுகையில் மனிதர்களின்  முதுகெலும்பின் [human spine] அமைப்பு மாறுபட்டுள்ளது, இது குரல்வளையின் செயல்திறனையும், குரல் நாண்களின் செயல்பாட்டையும் [function of the larynx and the vocal cords.]  மேம்படுத்தியுள்ளது. குரலை உண்டாக்கும் குருத்தெலும்பு சார்ந்த கட்டமைப்பைக் [cartilaginous structure] குரல்வளை (Larynx) என்று அழைப்பர்; குரல் வளைக்கும், மூச்சுக் குழாய்க்கும் [trachea] இடையே மூன்றாவது  முதல் ஆறாவது கழுத்து முள்ளெலும்பு [cervical vertebrae] நிலையில் இது அமைந்துள்ளது, இதில் மூச்சுக்குழாயின் மேல் முனையைச் சுற்றிலும் தனித்தனிக்  கூறுகளால் இணைக்கப்பட்ட ஏராளமான குருத்தெலும்புகள் அமைந்துள்ளன. ஏனைய முதல் நிலை உயிரினங்களோடு ஒப்பிடுகையில் இக்குரல் வளையானது மனிதர்களுக்குச் சற்றுத்  தாழ்வாக உள்ளதை நாம் கவனிக்க  வேண்டும். மொழியின் தோற்றத்தால் மனிதஇனத்தின் உருவ அமைப்பு மாறியுள்ளதை நாம் இதன் மூலம் அறியமுடியும். மேலும் இந்த மாற்றம் முதல்  முதல் எப்ப ஆரம்பித்தது என்பதை தொல்பொருள் எச்சங்களில் இருந்து காண்பது மூலம் பேச்சு மொழியின் தோற்றுவாயை காணலாம் என்பது புலப்படுகிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] /-பகுதி:10வாசிக்க அழுத்துக👉 Theebam.com: மொழியின் தோற்றம்: – 10:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: மொழியின் தோற்றம்: - 01

0 comments:

Post a Comment