மொழியின் தோற்றம்:-08

மொழி எப்போது தொடங்கியது?

எவ்வாறு உருவானது?

[Origin of Language: When Did It Start and How Did It Evolve?]


 

நாம் தொல்லுயிர்ப் படிமம் மற்றும் மரபியல் பங்கு பற்றிய  ஆதாரங்களை விரிவாக பார்க்க முன்பு, நோம் சாம்ஸ்கியின் மொழியியல் குறித்த கருத்துக்களை பார்ப்போம்.


பொதுவாக ஒரு மொழி என்பது சாதனமாகவும் (tool), அதே சமயம் பொறியியக்கமாகவும் (Mechanism) செயல்படுகிறது;  அதுவே உலகுடனும் பிறருடனும், நமக்குள்ளும் எவ்வாறு தொடர்பு  ஏற்படுத்திக் கொள்கிறோம்  என்பதைத் தீர்மானிக்கிறது. அதாவது மொழியே நம்மை மனிதராக்குகிறது எனலாம். அது மட்டும் அல்ல, மொழி என்பது கற்றவரோ அல்லது அகராதி  தயாரிப்பாளரோ (Dictionary)  கட்டும்  கருத்தியல் கட்டுமானமல்ல. மனித குலத்தின் நீண்ட தலைமுறைகளின் வேலைகள், தேவைகள், பந்தங்கள், குதூகலங்கள்,  பாச நேசங்கள், ரசனைகள் அனைத்திலிருந்தும் உதித்தது அது.  மண்ணில் ஆழப்  பதிந்த அகண்ட அடித்தளம் கொண்டது ஆகும். எனவே மண்ணில் தோன்றிய காலம் முதல்  மனித குலம் பெற்றுள்ள அனுபவங்களின் ஒட்டு மொத்தமே மொழி. எனவே அப்படியான ஒரு மொழி இல்லை என்றால்,  மனிதர்களால் தம்  உணர்வுகளை, எண்ணங்களை மனவெழுச்சிகளை , விருப்பங்களை, நம்பிக்கைகளை  வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கும். மொழியின்றி மனித சமூகமும், அதன் நம்பிக்கையும் கூட  இன்று வரை பிழைத்திருக்க  வாய்ப்பில்லை. அப்படியான மொழியை பற்றிய ஒரு  ஆய்வில் தான் நோம் சாம்ஸ்கியும் ஈடுபட்டு, 1960 இல் அவர் தனது உலகளாவிய [யுனிவர்சல்] இலக்கணம் என்ற கோட்பாடை வெளியிட்டார்.

 

நோம் சாம்ஸ்கியின் ஆராய்ச்சியின் படி, குழந்தைகள் பேச்சுக்கு, ஒரு உள்ளார்ந்த திறனுடன் பிறக்கிறார்கள். தகவல் தொடர்பு மற்றும் மொழியியல் கட்டமைப்புகளை அவர்கள் கற்றுக் கொள்ளவும் ஒருங்கிணைக்கவும் முடிகிறது. அதனால், மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து மொழிகளும் அவற்றின் சொந்த கட்டமைப்பில் பொதுவான குணாதிசயங்களைக்  கொண்டுள்ளன. அது தான்  "உலகளாவிய  இலக்கணம்" என்கிறார். அதாவது  மொழியின் இலக்கணத்தைப் புரிந்து கொள்ளும் உள்ளார்ந்த திறனை குழந்தைகள் கொண்டிருக்கிறார்கள்,  குழந்தை பிறக்கும் போதே மூளைக்குள் அனைத்து இயற்கை மொழிகளுக்குமான பொது இலக்கணம் ( Universal Grammar - UG) ஒன்று உள்ளது. குழந்தை மூளைக்கு உள்ள இந்த மொழியறிவு  மனித இனத்திற்கே உரிய  ஒன்று ( species-specific). மனித இனத்தின் உயிரணுவால் அளிக்கப்படுகிற ஒன்று. genetically given - biological endowment.  இந்தப் பொது இலக்கணத்தைப் பயன்படுத்தி,   தனது சூழலில் பேசப்  படுகிற மொழியின் தரவுகளையும் கொண்டு, குழந்தை தனது தாய் மொழிக்குரிய இலக்கணத்தையும் அகராதியையும் உருவாக்கிக் கொள்கிறது.  எனவே தான் மூன்று வயதுக்குள், தனக்குக் கிடைக்கிற குறைந்த அளவிலான மொழியனுபவத்தைக் கொண்டு (poverty of stimulus) , குழந்தை தன் தாய் மொழியில்

திறமையைப் பெறுகிறது என்று அவர் வாதாடுகிறார்.

 

இது சாம்ஸ்கியின் ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும். - மனிதனின் இயற்கை மொழித்திறன், மனித இனத்திற்கே உரிய ஒன்று. வேறு எந்த ஒரு உயிரினத்திற்கும் இந்தத் திறன் மூளையில் கிடையாது. மேலும் மொழி என்பதைக் குழந்தை கற்றுக் கொள்ளவில்லை. (not learned) பெற்றுக் கொள்கிறது (comes to it). அல்லது மற்ற திறன்களைப் போல (தவழுதல்,நடத்தல் ... )  குழந்தையிடம் வளர்கிறது / மனித மூளைக்குள் மொழி வளர்கிறது - Language grows inside the human brain - என்பது அவரின் அடிப்படை கருத்து. எனவே தான் குழந்தைக்கு தவழுதல் வந்து  விட்டதா என்று கேட்பது போல, பேச்சு ' வந்து விட்டதா' என்று கேட்கிறோம். பேச்சைக் கற்றுக் கொண்டதா என்று நாம் கேட்பதில்லை என்கிறார்.

 

இது மொழி கையகப் படுத்தல் ஆய்வில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது காலாவதியானது என்று இன்று கருதப்படுகிறது, மேலும் இந்த விடயத்தில்  சாம்ஸ்கியே தனது  நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டார். உலகளாவிய  இலக்கணத்தின் யோசனையுடன், சாம்ஸ்கி தனது இடுகைகளில் தவறு செய்தார் என்று விமர்சன நீரோட்டங்கள் இன்று  வாதிடுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. [In the 1960s, the US linguist and philosopher Noam Chomsky argued that children don’t in fact learn their mother tongue – or at least, not right down to the grammatical building blocks.   He concluded that they must be born with a rudimentary body of grammatical knowledge – a ‘Universal Grammar’ – written into the human DNA. and explains how a child can pick up a native language   in such a short time.   It’s brilliant. Chomsky’s idea dominated the science of language for four decades. And yet it turns out to be a myth. A welter of new evidence has emerged over the past few years, demonstrating that Chomsky is plain wrong]

 

ஆனால் ஒன்று உண்மை, அனைவரும் ஒப்புக் கொள்ளும் கருத்து ஒன்று அங்கு உள்ளது. மொழிக்கான ஒரு தெளிவான உயிரியல் தயார் நிலை ஒன்றை எம் இனம் வெளிப்படுத்துகிறது [our  species exhibits a clear biological preparedness for language]. உதாரணமாக, பின் வரும் வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் நமது மூளை உண்மையில் 'மொழிக்குத் தயாராக உள்ளது'. வாக்கிய  அமைப்பு ஒன்றை செயலாக்க, அது [மூளை] சரியான வகையான வேலை நினைவகத்தைக் [working memory] கொண்டுள்ளது. மேலும் எமது மூளையின் பெரிய ப்ரீஃபிரன்டல் கார்டெக்ஸ்  [an unusually large prefrontal cortex] குறியீடுகளைப் பயன் படுத்துவதற்கான துணை கற்றல் திறனை முதலில் நமக்கு வழங்குகிறது. மீண்டும், நம் உடலும் மொழிக்கு தயாராக உள்ளது.  அப்படியே மற்ற மனித இனங்களை [hominid species] விட, எமது குரல்வளை [larynx] காற்றை வெளியேற்றவும் கட்டுப்படுத்தவும் எங்களை அனுமதிக்கிறது. அதே போல, எமது சிறிய  தொண்டை எலும்பின் [tiny hyoid bone] நிலை, வாயிலும் நாக்கிலும் ஒரு நுணுக்கமான தசை கட்டுப்பாடு [muscular control] ஒன்றை ஏற்படுத்தி, பேச்சொலி பலவற்றை, உதாரணமாக சில  மொழிகளில் காணப்படும் 144 வரையான பேச்சொலிகளை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. இதை  முற்றிலும் பிறவியில் வந்தது இல்லை என்று யாரும் இதுவரை மறுக்கவில்லை .  மற்றும் இது மொழிக்கு மிக முக்கியமானதும் ஆகும் [No one denies that these things are thoroughly innate, or that they are important to language],

 

ஆகவே, மொழி பற்றிய அவரின்  கருத்து தான் இன்று உலகளாவிய சர்ச்சையில் உள்ளது. அதாவது மொழி மென்பொருள் [the language software] என அவர் வர்ணிக்கும் அந்த உள்ளார்ந்த  அடிப்படை மொழி அறிவு அல்லது உலகளாவிய இலக்கணம் என்று அவர் அழைக்கும் அந்த அறிவு பிறக்கும் பொழுதே குழந்தைக்கு பெற்றோரில் இருந்து கடத்தப் பட்டு, அதனுடன்  பிறக்கிறது என்ற அவரின்கூற்று / நம்பிக்கை தான் சர்ச்சையில் உள்ளது.  நாம் தனித்துவமான மனித உறுப்புகளை வளர்ப்பதைப் போலவே, உதாரணமாக - இதயங்கள், மூளைகள்,  சிறுநீரகங்கள், கல்லீரல்கள் - , அவ்வாறே மனதில் மொழியை வளர்க்கிறோம் என்பதே நோம் சாம்ஸ்கியின் கொள்கை, அதாவது ஒரு மொழி உறுப்புக்கு அதை ஒப்பிடுகிறார் [ just as we grow distinctive human organs , so we grow language in the mind, which Chomsky likens to a ‘language organ’.].


அனைத்து உலக மொழியின் சாத்தியமான இலக்கண விதி தொகுப்புகளுக்கு இது ஒரு வரை படத்தைக் கொண்டுள்ளது என்கிறார் [It contains a blueprint for all the possible sets of grammar rules in all the world’s languages].  எனவே இயற்கையாக நிகழும் எந்தவொரு மனித மொழியையும் எடுப்பது குழந்தைகளின் ஒரு விளையாட்டு என்கிறார் [And so it is child’s play to pick up any naturally occurring human language]. அல்லது அது குழந்தைகளின் இயற்கை மொழித்திறன் என்கிறார். உதாரணமாக, டோக்கியோவில் பிறந்த குழந்தை ஜப்பான் மொழி பேசக் கற்றுக் கொள்கிறது, அதே  போல தமிழகத்தில் பிறந்த குழந்தை தமிழ் பேச கற்றுக் கொள்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், இந்த மொழிகள் மிகவும் வித்தியாசமாகத் தெரிகின்றன. ஆனால், ஆழமாக நோக்கினால், அவை அடிப்படையில் ஒரே மாதிரியானவை,  ஏனென்றால், அவை பொதுவான இலக்கண அமைப்பு  முறைமையில் இயங்குகிறது. இதைத் தான் நோம் சாம்ஸ்கி [Avram Noam Chomsky]  உலகளாவிய இலக்கணம் என்கிறார். இதையே கனடிய அறிவாற்றல் விஞ்ஞானி [cognitive scientist], ஸ்டீவன் பிங்கர் (செப்டம்பர் 18, 1954 / Steven Pinker), எமது மொழி உள்ளுணர்வு' [‘language  instinct’] என்கிறார்.

 

இலக்கியம் கற்பதற்கு எங்கள மூளை ஒரு மன வார்ப்புருவுடன் நிலையிணைப்பில் உள்ளது [The idea that we have brains hardwired with a mental template for learning grammar] என்ற நோம்  சாம்ஸ்கியின் ஜோசனை  கிட்டத் தட்ட அரை நூற்றாண்டு காலம் மொழியியலில் ஆதிக்கம் செலுத்தியது. என்றாலும் அண்மையில், அறிவாற்றல் விஞ்ஞானிகள் மற்றும்  மொழியியலாளர்கள் [cognitive scientists and linguists], புதிய ஆய்வுகளின் அடிப்படையில்  அவரின் உலகளாவிய இலக்கணம் என்ற  கோட்பாட்டை கைவிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.  குழந்தை தனது தாய் மொழியை கற்பதில், உள்ளார்ந்த இலக்கிய தொகுதியில் சார்ந்து இருக்க வில்லை என்று  இன்றைய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன [learning of a child’s first language does not rely on an innate grammar module]. மாறாக புதிய ஆராய்ச்சி, இளம் பிள்ளைகள் பல விதமான சிந்தனைகளை பாவிப்பதாகவும், அவை கட்டாயம் திட்ட வட்டமாக மொழியுடன்  இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் [various types of thinking that may not be specific to language at all] கூறுகிறது. உதாரணமாக SCIENTIFIC AMERICAN NOVEMBER 2016,  "Evidence Rebuts Chomsky's Theory of Language Learning  Much of Noam Chomsky’s revolution in linguistics—including its account of the way we learn languages—is being overturned By Paul Ibbotson, Michael Tomasello" என்ற கட்டுரையை குறிப்பிடலாம்.


இனி நாம் தொல்லுயிர்ப் படிமம் மற்றும் மரபியல் பங்கு பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] / பகுதி: 09 வாசிக்க அழுத்துக👉 Theebam.com: மொழியின் தோற்றம்: 09:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉 Theebam.com: மொழியின் தோற்றம்: - 01

No comments:

Post a Comment