மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? /
[Origin of Language: When Did It Start and How
Did It Evolve?]
மொழி எப்போது
தோன்றியது பற்றி இன்று பல்வேறு விதமான
கருத்துக்கள் மொழியியலாளர்கள், மானிடவியலாளர்கள், மற்றும் அறிவியல்
ஆய்வாளர்கள் மத்தியில். அவரவர்களின் பண்பாட்டை
பொறுத்தும் மற்றும் அவர்களின் ஆய்வுகளை பொறுத்தும் மாறுபடுகின்றன. எனவே
உறுதியான முடிவு இது தான் என்று உறுதியாக தெரியவில்லை. மேலும் பலருடைய ஆராய்ச்சி
முடிவுகளும் மொழியின் வடிவத்தை இறுதி செய்ய முடியவில்லை. அது குழப்பமாகவே உள்ளது.
அதாவது நமது மொழி அல்லது பேச்சாற்றல் என்பது மனித இனத்தின் பண்பாட்டு பரிணாம
வளர்ச்சியின் ‘கண்டுபிடிப்பா’? அல்லது உயிரியல் பரிணாமத்தின் ‘மரபணுக் கொடையா’? என
சர்ச்சைக்குரிய சந்தேகங்கள் இன்னும் நிலவுகின்றன.
புராண அல்லது மத கருத்துக்களை தவிர்த்து, சுருக்கமாக நாம் கூறுவதாயின், அங்கு நாலு
குழப்பமான கேள்விகள் [puzzling questions] எழுகின்றன. மொழி ஆற்றல் மனிதனின் உள்ளார்ந்த
[பிறப்புடன் ஓட்டிய] ஒன்றா ? அல்லது அவன் கற்றுக் கொண்ட ஒன்றா? மற்றும் இது
தொடர்ச்சியின் அல்லது தொடர்ச்சியற்ற அணுகுமுறையின் அடிப்படையிலா ? என்பது ஆகும் [whether language is either innate or
learned and whether it is based on a discontinuity approach or rather a
continuity approach].
மொழி என்பது எங்கிருந்தோ திடீரென்று மனித இனத்தில் தற்செயலாக வந்தது அல்ல. அது
படிப் படியாக பாலூட்டிகளின் பெரும் பிரிவில் முதன்மையான பாலூட்டி இனங்களின்
காலத்திலிருந்து [From
our primate ancestors / உதாரணமாக பேரினக்குரங்குகள்], இருக்கக் கூடிய
பல்வேறு அடிப்படையான தகவல் அல்லது உணர்வுப் பரிமாறல் முறைகளின் வளர்ச்சி அடைந்த
நிலை தான் பேச்சு மொழி என்கிறது. அதாவது மொழி என்பது தொடர்ந்து உருமாற்றமும், வளர்ச்சியும்
அடைந்து வந்துள்ளன என்று கூறுகிறது. இதை
மொழியின் தொடர்ச்சி கோட்பாடு [continuity theory of language] என்பர். இது எமது மனித மொழிக்கும் விலங்குகளின்
மேம்பட்ட தகவல் தொடர்புக்கும் இடையில் ஒரு இணைப்பை ஏற்படுத்த முயல்கிறது. இந்தக் கருதுகோளின் மறுதரப்பு, மொழியின்
தொடர்ச்சியின்மை கோட்பாடு [discontinuity theory of language] எனப்படும். இது, மொழி என்பது வேறு
எந்தப் பண்போடும் அல்லது மனிதனல்லாத வேறு எந்த உயிரினத்தின் பண்போடும் தொடர்பு படுத்திப்
பார்க்க முடியாதது என்றும், இதற்கு அடிப்படையாகவும், இணையாகவும்
இன்னொரு பண்பு இல்லை என்றும், எனவே மனித உடலின் சில பாகங்களில் ஏற்பட்ட
மாற்றங்களும் மற்றும் மரபியல் மாற்றமுமே
முக்கிய காரணம் என்கிறது.
மொழி ஆற்றல் என்பது மனிதர்களுடன் ஒட்டிய திறமை என்பதை பல சான்றுகள் ஆதரவு
தருகின்றன. உதாரணமாக, மனித சூழலில் பல ஆண்டுகளாக மனிதக் குரங்குகள் [chimpanzees] வளர்க்கப்
பட்டாலும், அவை மொழி ஆற்றலை
பெறவில்லை என்று மானிடவியலார்கள் [Anthropologists] மார்கஸ் G.E. [George Emanuel Marcus is an American professor of anthropology
] மற்றும்
பிஸ்சேர் M.M.I. [FISCHER, M.M.I.] இருவரும்
சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், குறைந்த
மொழியியல் உள்ளீடு கொண்ட , காது கேளாத குழந்தைகள் தாங்களாகவே சிக்கலான மொழியை
உருவாக்குகின்றன என மேலும் கூறுகிறார்கள் [However, deaf children with limited linguistic input
can still create a complex language on their own, clearly not from something
they heard, but rather something that is within them, something that they were
born with and already understand how to do]. இது அவர்கள்
கட்டாயம் வெளியில் இருந்து கேட்டு அதை செய்யவில்லை, ஏன் என்றால்
அவர்கள் செவிடர்கள்,
எனவே அது அவர்களுடன் பிறந்த அல்லது ஒட்டிய ஆற்றல் மூலமே
செய்தார்கள் என்பதற்கு ஒரு நல்ல எடுத்து காட்டாக உள்ளது குறிப்பிடத் தக்கது.
இன்னும் ஒரு ஆய்வில், மனிதக்குரங்குகள் [apes] காட்டில் மொழி ஆற்றலை
பாவிக்க விட்டாலும்,
ஒரு ஆய்வு கூட சூழலில், அதனால் கற்றுக்
கொள்ள முடிவதுடன்,
அடையாளங்கள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியதாக உள்ளது [apes do not use language in the wild
but are still able to learn and use signs to communicate]. என்றாலும்
குரங்குகள் உண்மையில் கற்றுக் கொள்வது மிக சொற்ப அளவே என்பதால், மொழியின் ஆற்றலை
சிறிதளவே கற்றலால் விருத்தியடைய செய்யாலாம் என்கிறார்கள்.
Ib உல்பேக், ஓய்வு பெற்ற
பேராசிரியர் [Ib ulbaek professor emeritus,
Department of Nordic Studies and Linguistics] அவர்கள் தொடர்ச்சியின்
அணுகுமுறை அடிப்படையையும் மற்றும்
மொழியின் உள்ளார்ந்த தன்மையையும்
[மனிதனுடன் ஒட்டிய / பிறந்த] வலியுறுத்துகிறார் [defending his position of continuity
and the innateness of language]. மொழி ஆற்றல் விலங்குகளின்
தொடர்புகளில் [animal communication] இருந்து வரவில்லை
என்றும் அது மனிதனின் உள்ளார்ந்த அறிவாற்றலில் இருந்து வந்ததும் என்கிறார். மொழி
என்று ஒன்று வரும் முன்பே, நமது மனித மொழியை
உருவாக்க தேவையான எல்லா அறிவாற்றல் செயல்பாடுகளும் எம் உடலில் உண்டாகியது
என்கிறார் [all of
the cognitive functions that cooperate to create our human language were all
established well before language ever
arose]. அது மட்டும் அல்ல அவர் எப்படி மொழி ஆற்றல் உடற்தகுதிக்கு [fitness] நன்மையாக அல்லது
தீமையாக இருந்தது பற்றியும் கூறுகிறார். உதாரணமாக, நாம் மொழியை வைத்திருக்கவும் பாவிக்கவும், மற்ற இனங்களிலும்
பார்க்க எமக்கு அதிக மூளை திசு இருக்க
வேண்டும், அத்துடன் சுவாச
அமைப்பிலும் [respiratory
system] ஏற்புடைய மாற்றம்
வேண்டும், ஏனென்றால், நாம் ஒலிகளை சரியாக எம் மொழிக்கு ஏற்றவாறு
உச்சரிக்கவும் வேண்டும். ஆகவே, இவையால் ஏற்படும்
அதிகரிக்கும் நிறையும் மற்றும் சுவாச அமைப்பில்
புதிதாக ஏற்பட்ட சில தடைகளும் எங்கள் தடகள திறன்களில் [athletic abilities] ஒரு தடங்களை
ஏற்படுத்துகிறது என்கிறார். என்றாலும் மொழி ஆற்றல் எம்மை ஒத்துழைப்புடன் வேலை செய்யவும்
இறுதியில் மிகவும் திறமையாக வேலை செய்யவும் [to work cooperatively and ultimately
more efficiently] ஆதரவு கொடுக்கிறது. குடும்ப சூழலை எடுத்து கொண்டால், தனிப்பட்ட முறையில் நன்மை இல்லை என்றாலும் [உடல் தகுதி]
அங்கு செய்திகளை பகிர்வது மூலம், குடும்பம் தப்பிப்பிழைத்து செழித்தோங்க [the family survives and continues to
thrive is in some respects] வழிவகுப்பதை
காண்கிறோம் என்கிறார்.
மேலும் Ib
ulbaek, பல உறுப்புகளின் சிக்கலான திறன் / தொழிற்பாடு எல்லாம் ஒரு
படிப்படியாக பரிணாம வளர்ச்சி போல் மாறாமல், திடீரென வினோதமான பிறழ்வு ஒன்றால் வந்தது என்பது தன்னால் ஏற்க முடியவில்லை என்கிறார் [It is inconceivable to think that
this complex capability, requiring the function of many organs is just due to
one freak mutation in our body.] இந்த தொடர்ச்சி கோட்பாட்டை
மொழியியலாளர் ஸ்டீவன் பிங்கர் (செப்டம்பர் 18, 1954) ஒரு கனடிய
உளவியலாளர் மற்றும் எழுத்தாளர் [Steven Pinker, Professor of Psychology] அவர்களும்
ஆதரிக்கிறார்.
மனிதர்கள் எவ்வாறு மொழியைப் பெற்றார்கள் என்பதை விளக்குவதற்கு பல மாறுபட்ட
விளக்கங்கள் இவைகளுக்கு முன்னரும் முன்வைக்கப் பட்டுள்ளன. இவையை பழமையான மற்றும்
பொதுவான ஐந்து கோட்பாடுகள் என்பர். ஆனால் இவை எல்லாம் கற்பனையான சில
விளக்கங்களுக்கு புனைப் பெயர்கள் கொடுக்கப் பட்டன எனலாம். உதாரணமாக, பறவைகள், விலங்குகள்
எழுப்பும் ஒலிகளை அடியொற்றி மனிதனின் மொழி வந்திருக்கும் என 'பௌ-வௌ' கோட்பாடு [The bow-wow or cuckoo theory] கூறுகிறது. இங்கு
முதல் பேச்சு ஓனோமடோபாயிக்
[ஒலிக்குறிப்பு / ONOMATOPOEIA] - போன்ற எதிரொலி சொற்களால் குறிக்கப் பட்டது. [early words as imitations of the cries of beasts and birds] எனினும் இதில் உள்ள தவறு என்னவென்றால், இந்த வார்த்தைகள் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு வேறுபடுகின்றன. உதாரணமாக, ஒரு நாயின் குரைக்கும் சத்தம் 'au au' , 'ஹாம் ஹாம்', 'wang, wang' இப்படி நாட்டுக்கு நாடு வேறு படுகின்றன. இரண்டாவது 'பூ-பூ' கோட்பாடு [The pooh-pooh theory] ஆகும். வலி, இன்பம், ஆச்சரியம் போன்ற மிகை உணர்வுகளின் போது எழும் இயல்பான ஒலிகளை வைத்து மொழி
வளர்ந்திருக்கும் என்று இது கூறுகிறது [the first words as emotional interjections and
exclamations triggered by pain, pleasure, surprise, etc], அப்படியே
மூன்றாவதான, 'டிங்-டாங்' கோட்பாடு [ding-dong theory], நாம் காணும்
எல்லாப் பொருட்களுக்குள்ளும் இயற்கையாகவே இருக்கும் ஒலி அதிர்வுக் குறிப்புகளைத்
தான் மனிதன் தன் ஆதி மொழியில் எதிரொலித் தான் என்கிறது. இப்படி மற்ற இரண்டு 'யோ-ஹி-ஹோ' கோட்பாடு [Yo-he-ho.] மற்றும் 'தா – தா' கோட்பாடு [Ta-ta.] தோன்றின.
மனித குரங்குக்கு மனித மொழியின் சில கூறுகளை படிப்பிக்க எடுத்த முயற்சி
பெரிதாக சொல்லுமளவு வெற்றியளிக்கவில்லை. எனவே இதுவும் மற்றும் இவை போன்ற பல
ஆய்வுகள், மனித மொழியின் பண்புகள்
ஒரு தனித்துவம் என்பதை காட்டுகிறது. இது வரை கண்டு பிடிக்கப் பட்ட புதைபொருள்
ஆய்வில் இருந்து, மனித மொழியின்
எழுத்துக்கள் ஆகக் குறைந்தது 6000 - 5000 ஆண்டு வரலாற்றை
கொண்டுள்ளன. [25 பகுதிகளை கொண்ட,
'Story or History of writing' / 'எழுத்தின் கதை
அல்லது வரலாறு' என்ற என்
கட்டுரையை பார்க்கலாம்.
இது எனது வலைத் தளத்திலும் மற்றும் தீபம் மின் சஞ்சிகையிலும் ["A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam மற்றும் THEEBAM.COM] பார்க்கலாம். Thursday, September 07, 2017 இல் இருந்து ஆங்கில கட்டுரையும், Friday, September 08, 2017 இல் இருந்து தமிழ் கட்டுரையும் கிழமைக்கு ஒரு தரம் வெளியிடப் பட்டுள்ளன] மனித மொழி காலத்துடன் படிப்படியாக மாற்றம் அடைந்ததுடன், சிலவேளை பண்பாடு அல்லது வாழ்க்கை பாணியின் [culture and fashion] மாற்றத்தாலும், சிலவேளை மற்ற மொழிகளின் தொடர்பாலும் மாற்றம் அடைந்துள்ளன. ஆனால், அடிப்படை கட்டமைப்பு மற்றும் மொழியின் வெளிப்படுத்தும் ஆற்றலில் [basic architecture and expressive power of language] மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. அது அப்படியே இதுவரை இருக்கிறது. ஆகவே எம்மிடம் இன்று எழும் கேள்வி, அதன் கட்டமைப்பு எப்படி ஆரம்பித்தது என்பதாகும். கட்டாயம் சில குகை மனிதர்கள் ஓரிடத்தில் கூடி மொழி ஒன்றை கட்டமைக்க முடிவு எடுத்திருக்க மாட்டார்கள். ஏன் என்றால் அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்றால், அவர்களுக்கு ஏற்கனவே மொழி இருந்து இருக்க வேண்டும் !. எனவே, உள்ளுணர்வால், ஹோமினிட்கள் [உயர்நிலை விலங்கினம் / hominids / human ancestors] மொழியை தம் முணுமுணுத்தல் அல்லது கூக்குரலிடுதல் அல்லது அழுதல் [by grunting or hooting or crying out] போன்றவற்றில் இருந்து ஆரம்பித்து, படிப்படியாக இன்றைய நிலைக்கு வந்திருக்கலாம் என்று ஒருவர் ஊகிக்கலாம். இப்படியான ஊகங்கள் தான் மேலே கூறிய ஐந்து கோட்பாடுகள் தோன்றவும் வழிவகுத்து இருக்கலாம்?.
தற்போதைய சிந்தனையின் படி, மொழி ஆற்றலை பெறுவதற்காக மனிதனில் ஏற்படவேண்டிய
மாற்றம், மூளையின் அளவு
மட்டும் அல்ல, அதன் இயல்பும்
ஆகும். எனவே மொழியின் தோற்றம் என்பது மனித
மற்றும் சிம்பன்சிகளின் மூளையின் வித்தியாசத்திலும், குறிப்பிடத்தக்க
இந்த மாறுபாடு எப்ப முதல் முதல் தோன்றியதிலும் மற்றும் எந்த பரிணாம வளர்ச்சி அழுத்தங்களில் என்பதிலும் [differences between human and
chimpanzee brains, when these differences came into being, and under what
evolutionary pressures] அவை முக்கியமாகிறது. இனி தொடர்ச்சியின்மை கோட்பாட்டை பார்ப்போம்.
[Marcus, Gary F. and Fisher, Simon E. (2003). FOXP2 in focus: what can genes tell us about speech and language? TRENDS in Cognitive Sciences. 1-6.Pinker, S. (1994). Natural Language and natural selection. Behavioral and Brain Sciences, 13, 707-784.Ulbaek, Ib. (1998) The origin of language and cognition. In James R. Hurford, Michael Studdert-Kennedy, Chris Knight (eds), Approaches to the Evolution of Language: Cambridge University Press, Cambridge, UK.]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 07 வாசிக்க அழுத்துக👉Theebam.com: மொழியின் தோற்றம்: – 07:
No comments:
Post a Comment