நரம்பியல்
நிபுணரும் ஸ்டாண்ட்-ஆப் காமெடியனுமான சோஃபி ஸ்காட், பல்வேறு காரணங்களை விவரிக்கிறார்.
"நாம் மற்றவர்கள்
கூறுவதை ஆமோதிக்கும் போது, நாம் சிரிப்போம். இதற்கு காரணம், அவர்கள் கூறும்
விஷயத்தை நாமும் நினைவுப்படுத்தி கொள்வோம். மனிதர்கள் மற்ற உணர்வுகளை
மறைப்பதற்கும் சிரிப்பைப் பயன்படுத்துவார்கள். மனிதர்கள் தங்களின் கவலையையோ, வலியையோ
மறைப்பதற்கு சிரிப்பை பயன்படுத்துவார்கள். ஒருவரை தாங்கள் நினைத்த வேலைகளை
செய்யவைக்கவும், மனிதர்கள்
அவர்களை முதலில் சிரிக்க வைக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் ஒருவரை சிரிக்க
வைத்தால், அவர்கள் தங்களின்
ரகசியங்களை உங்களிடம் கூற அதிக வாய்ப்புண்டு.
சிரிப்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று, தன்னிச்சையாக
வரும் சிரிப்பு. இந்த சிரிப்பை உங்களால் கட்டுப்படுத்தமுடியாது. மற்றொரு வகை, இருவர்
பேசிக்கொண்டிருக்கையில் ஏற்படும் சிரிப்பு. உதாரணமாக, இருவர் ஒரு
குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் சிரிப்பு. இது
சிறிது நேரமே இருக்கும்" என்கிறார் சோஃபி.
சிரிப்பு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவ கூடிய ஓர் உணர்வு
- ஏன்?
சில சமயம் ஒருவர் சிரிக்கும்போது, அவர்கள் அருகில் இருப்பவர்களும் சிரிக்க
வாய்ப்புண்டு. இதனை நம் இயல்புடன் தொடர்புடைய பரவும் தன்மை (behaviourally contagious phenomena) என்று
அழைக்கப்படுகிறது. ஒருவர் ஒரு செயலை செய்வதனாலே, மற்றவர்கள் அதை
செய்வார்கள். இதை நமக்கு கொட்டாவி ஏற்படும் போது, நாம்
கவனித்திருக்கலாம். ஆனால், சிரிப்பும் அப்படிதான்.
முதலில், ஒரு குழந்தை தன்
பெற்றோரைப் பார்க்கும்போது சிரிக்காது. ஆனால், பெற்றோர்கள் குழந்தைகளை சிரிக்க வைக்க முயற்சி செய்வார்கள்.
இப்படிதான் குழந்தைகள் சிரிக்க தெரிந்துக்கொள்ளும். மேலும், நாம் ஒன்றாக
சிரிக்கும் இயல்பையும் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கிறோம்.பொதுவாக சிரிப்பு என்பது
மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு உணர்வு என்று நாம் நினைத்துக்கொள்கிறோம்.
ஆனால், அது மனிதர்களுக்கு மட்டும் உள்ள உணர்வு அல்ல என்கிறார்
சோஃபி ஸ்காட். குரங்குகளின் இனம் அனைத்தும் சிரிப்பு உணர்வை வெளிப்படுத்துகின்றன.
கொரில்லா, சிம்பான்சி, ஒராங்குட்டான் - இவையனைத்தும் மனிதர்களைப் போலவே சிரிக்கும்.
அவையும் விளையாட்டுத்தனமாக சிரித்து மகிழும். இத்தகைய சிரிப்பை எலிகளிடத்தும், கிளிகளிடத்தும்
நாம் காணலாம்.
சிரிப்பின் மறுபக்கம் நம் உடலுக்கு சிரிப்பு சில தீங்கையும் ஏற்படுத்தலாம்
என்கிறார் சோஃபி ஸ்காட்.
"நீங்கள் தொடர்ந்து
மிகவும் அதிகமாக சிரிக்கும்போது, அதாவது உங்கள்
விலா எலும்பு வரை இழுத்து சிரிக்கும்போது, அது உங்களின்
இதயத்திற்கும், நுரையீரலுக்கும்
அழுத்ததை ஏற்படுத்தும். உங்களுக்கு இதயம், நுரையீரல், ரத்த நாளங்களில் ஏதேனும் நோய் இருந்தால், இதுபோன்ற தருணங்களில் மேலும் அழுத்தம் ஏற்படும்.
வரலாற்று பக்கங்களை பார்க்கும்போது, சிரிப்பால்
இறந்தவர்கள் பட்டியலும் உள்ளது. ஆனால், சிரிப்பதானால்
ஏற்படும் பல நன்மைகள் உண்டு. நீங்கள்
சிரிக்கும் போது, மிகவும் நிம்மதியாக
உணர்வீர்கள். நீங்கள் சிரிக்க தொடங்கும்போது, அட்ரினலின்
ஹார்மோன் குறையும். இயற்கையாகவே, எண்டோர்பின் ஹார்மோன் உடல் முழுவதும் சீராக பயணிப்பது
அதிகரிக்கும். நீங்கள் சிரிப்பதைப் போல் நடித்தாலும், இத்தகைய நன்மைகள்
உங்கள் உடலுக்கு ஏற்படும். அதனால், வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம் சத்தம் போட்டு நன்றாக சிரிப்பதை
மறந்து விடாதீர்கள்.
நன்றி: பி பி சி தமிழ்
No comments:
Post a Comment