கடந்த வாரம் வெளிவந்த திரைப்படங்கள் எப்படி? எப்படி?

 


'கள்ளன்' விமர்சனம்

 வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரின் தயாரிப்பில்,  இசை – கே யின் இசையில் , கரு.பழனியப்பன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜா, நிகிதா, மாயா, வேலா ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்த படம்.

தெரிந்த தொழிலை செய்ய முடியாததால், தெரியாத தொழிலை செய்து மாட்டிக் கொண்டு அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கை போராட்டமே இந்தப் படம்.

அனைத்துமே வித்தியாசமாக இருந்தது .பார்க்கலாம்.

 

'யுத்த சத்தம்' விமர்சனம்

 எழில் இயக்கத்தில் பார்த்திபன், கவுதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் மற்றும் நகைச்சுவை திரைப்படம். விஜய்குமரன் தயாரிக்க, இமான் இசையமைத்துள்ளார்.

காவல் நிலையத்தின் வெளியே கொலைசெய்யப்பட்ட பெண்ணின் விசாரணையில் அவள் காதலன் மேல் விழும் சந்தேகம் கொள்ளும் போலீஸ் பார்த்திபன் ,உண்மையான கொலையாளி யார் என்பதனை கண்டுபித்தலே கதை.

சத்தமே இல்லாத யுத்தம்

 

'குதிரைவால்' விமர்சனம்

 மனோஜ் லியோனில் ஜஹ்ஸன் மற்றும்  ஷியாம் சுந்தர் இணைந்து இயக்கும் திரைப்படம். பா.ரஞ்சித் தயாரிக்க, பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.  கலையரசன், அஞ்சலி பாட்டீல், ஆனந்த்சாமி, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி, ஆதிரா  KSG வெங்கடேஷ், SD பாலகுமாரன், அன்னபூரணி உட்படப் பலர்  கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

நாயகன் கலையரசன் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது அவருக்கு பின்னால் வால் முளைத்து விடுகிறது. இதனால் பல இடங்களில் அவமானப்படும் கலையரசன், வால் முளைத்ததற்கான காரணத்தை தேடி அலைகிறார். இறுதியில் நாயகன் கலையரசன் வால் முளைத்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மொத்தத்தில் ‘குதிரைவால்’ புதிய அனுபவம்.

 

தொகுப்பு:மனுவேந்தன் -செ

No comments:

Post a Comment