இறுதி வாரம் வந்த திரைப்படங்கள் எப்படி?

'கிளாப்விமர்சனம்

பிரித்வி ஆதித்ய இயக்கத்தில் ஆதி முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்ஐபி கார்த்திகேயன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.  பிரவீன் குமார் மற்றும் படத்தொகுப்பாளர் ராகுல் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஒர் ஓட்டப்பந்தய வீரனாக சாதிக்க விரும்பும் கதிருக்கு (ஆதி) ஒரு விபத்தில் கால் அகற்றப்பட்டு விடுகிறது. இதனால் வாழ்வில் பிடிப்பில்லாமல் இருக்கும் கதிர், வேறு காரணங்களால் முடங்கிப் போயிருக்கும் பாக்கியலட்சுமி (கிரிஷா குரூப்) என்ற வீராங்கனையை எப்படி தேசிய சாம்பியனாக்குகிறான் என்பதுதான் கதை.

திரைப்படம் மெதுவான ஓட்டம்.

 

'ராதே ஷ்யாம்' விமர்சனம்

 ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம்.  வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்கஅமித் திரிவேடி இசையமைத்துள்ளார்.

காதலும் காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகில், ஜோசியத்தால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும்; நோயினால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும் காதலிக்கிறார்கள். என்ன நடந்திருக்கும் என நீங்கள் யூகிப்பததுதான் 'ராதே ஷ்யாம்' படத்தின் ஒன்லைன்.

டெக்னிக்கலாக சிறப்பாக இருக்கும் 'ராதே ஷ்யாம்', சுவாரஸ்யமற்ற திரைக்கதையாலும், நம்ப முடியாத காட்சி அமைப்புகளாலும் நம்மை ஈர்க்க மறுக்கின்றன.

 

'எதற்கும் துணிந்தவன்' விமர்சனம்

  பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் குடும்பத் திரைப்படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கடி. இமான் இசையமைத்துள்ளார்.

வழக்கறிஞர் கண்ணபிரானாக சூர்யா நடித்துள்ளார். இளம் வயதிலேயே தனது தங்கையை சிலர் பலாத்காரம் செய்து விட அவரை காப்பாற்ற போராடி முடியாமல் போக தங்கையின் போட்டோவை சுவற்றில் மாட்டி சூர்யாவின் குடும்பமே சாமியாக கும்பிட்டு வருகிறது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுக்கும் வினய்யின் வலையில் சூர்யாவே ஒரு கட்டத்தில் சிக்க அதிலிருந்து எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றி பெண்களுக்கு அட்வைஸ் சொல்லும் படமாக எதற்கும் துணிந்தவன் அமைந்திருக்கிறது.

 துணிச்சலான வெற்றி.

 

'மாறன்' விமர்சனம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோஹனன்  எனப்பலர் நடிக்கும் திரைப்படம்.   சத்யா ஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தேர்தல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்மூலம் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளை அம்பலப்படுத்தும் சமுத்திரக்கனிதான், தனது தங்கையை கடத்தி கொலை செய்த என சந்தேகிக்கும் தனுஷ் விசாரணையில் உண்மையைக் கண்டுபிடித்தாரா என்பதே கதை.

பொழுதுபோக்கிற்காக சென்று இப்படத்தினை பார்த்தாலும் பொழுது போகுமா என்பது சந்தேகமே!

 

'ஹே சினாமிகா' விமர்சனம்

பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, கோவிந்த் வசந்த்  இசையமைத்துள்ளார்.

நாயகன் துல்கர் சல்மானும், நாயகி அதிதி ராவ்வும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் துல்கர் சல்மானின் குணம், அதிதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பாதிக்கிறது. இதனால், சைக்காலஜிஸ்ட்டான காஜல் அகர்வாலிடம், தனது கணவரை காதலிப்பது போல நடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார் அதிதி ராவ். 

துல்கர் காதலில் விழுந்தால் அதை காரணமாக வைத்து அவரைப் பிரிந்துவிட நினைக்கிறார் அதிதி. முதலில் தயங்கும் காஜல் அகர்வால், துல்கர் சல்மானை நெருங்க ஆரம்பிக்கிறார். இறுதியில், துல்கர் சல்மானை அதிதி ராவ் பிரிந்தாரா? காஜல் அகர்வால் துல்கர் சல்மானை காதலித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மொத்தத்தில் படம்  இளமைத்  துள்ளல்.

:தொகுப்பு -செ .மனுவேந்தன்



No comments:

Post a Comment