சங்ககால
இலக்கியங்களில்,
பதினெண்
கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது
நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு
சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப்
பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு
முன்னர் ஆகும்.
தொடர்ச்சி..
31: 👇👇👇
பிணி
அன்னர் பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்கு
அணி
அன்னர், அன்புடைய மக்கள்; பிணி
பயிலும்
புல்
அன்னர், புல் அறிவின் ஆடவர் கல் அன்னர்,
வல்லென்ற
நெஞ்சத்தவர்.
அடுத்து வருவதையுணர்ந்து நடந்து கொள்ளாத பெண்டிர் நோய்க்கு ஒப்பாவர். அன்புடைய
மக்கள் அணிகலனுக்கு நிகராவர். சிற்றறிவுடைய ஆடவர் புல்லுக்கு நேராவர். வன்மையான
நெஞ்சம் உடையவர் கல்லுக்கு இணையாவர்.
32: 👇👇👇
அந்தணரின்
மிக்க பிறப்பு இல்லை; என்
செயினும்,
தாயின்
சிறந்த தமர் இல்லை; யாதும்
வளமையோடு
ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின்,
இளமையோடு
ஒப்பதூஉம் இல்.
அருள் குணம் கொண்ட அந்தணரைப் போன்ற உயர்பிறப்பு இல்லை. தாயை விடச் சிறந்த உறவு
வேறு இல்லை. செல்வ வளத்துடன் கூடிய வாழ்க்கைக்கு ஒப்பான அழகு வேறு இல்லை. இளமையைப்
போன்று இன்பமானதும் வேறு இல்லை.
33: 👇👇👇
இரும்பின்
இரும்பு இடை போழ்ப; பெருஞ்
சிறப்பின்
நீர்
உண்டார் நீரான் வாய் பூசுப; - தேரின்,
அரிய
அரியவற்றால் கொள்ப; பெரிய
பெரியரான்
எய்தப்படும்.
இரும்புக் கருவிகளைக் கொண்டே இரும்பை வெட்டுவர். பாயசம் முதலான சிறந்த
நீருணவுகளை உண்டோர் நீரினாலேயே வாயைக் கழுவுவர். அரிய செயல்களை அரிய
முயற்சியினாலேயே செய்து முடிப்பர். பெறற்கரிய பெரிய பேறுகளையும் பெரியோரே அடைவர்.
34: 👇👇👇
மறக்
களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த
அறக்
களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்;
வியக்
களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக்
களி
ஊரில்
பிளிற்றிவிடும்.
அரசனுக்கு முன்னால் போரிடும் போது வீரர்களுக்கு வீரக்களிப்பு உண்டாகும்.
வறியார்க்கு ஒன்றீவதே செல்வர்கட்கு உண்மையான ஈகைக் களிப்பாம். ஒன்றைப் பெற்று வியக்கும்
களிப்பு ஏழைகட்குண்டு. கீழ்மகனது கீழ்மையாலான களிப்பு ஊரெல்லாம் தெரிவித்து
ஆரவாரம் செய்தலேயாகும்.
35: 👇👇👇
மையால்
தளிர்க்கும், மலர்க்கண்கள்; மால்
இருள்,
நெய்யால்
தளிர்க்கும், நிமிர் சுடர்; பெய்ய
முழங்கத்
தளிர்க்கும், குருகிலை; நட்டார்
வழங்கத்
தளிர்க்குமாம், மேல்.
குவளை மலர் போன்ற கண்கள் மையிடுதலால் விளங்கும். விளக்கு நெய்விடுதலால்
நிமிர்ந்தெரியும். குருக்கத்தி மழை முழக்கத்தால் இலை தளிர்க்கும். சான்றோர்
பிறருக்குக் கொடுப்பதால் தளிர்ப்பர்.
நான்மணிக்கடிகை தொடரும்…..
Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், சிதைக்கும், நலம், நன்மை, செய்வது, நான்மணிக்கடிகை, செயலைச், கீழ்க்கணக்கு, பதினெண், நட்டார்கண், அளவு, தோன்றும், கோடி, பொருள், கூடாது, வேண்டும், செய்ய, விட்ட, நண்பர், செய்யும், பாலின், பொய், இன்மை, கல்வி, ஏற்படுத்தும், செல்லும், வினை, சங்க, ஒற்றுமைஅன்னர், தளிர்க்கும், அரிய, கீழ்க்கணக்கு, வேறு, பதினெண், நான்மணிக்கடிகை, முன், களிப்பு, தோன்றும், பெரிய, புல், பிணி, சங்க, பெண்டிர், அன்புடைய, மக்கள், ஆடவர்
No comments:
Post a Comment