😁😀😁😃😁😃😁😃
01.
சோமு : எதுக்கு
நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?
ராமு :
பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக்
கூடாதுல்லே..
02.
அமலா : நேத்து
என் வீட்டுக்கு திருட வந்தவன் ரொம்ப நல்லவன்.
விமலா : எத வச்சு
சொல்ற?
அமலா : பீரோ
சாவிய குடுக்க மாட்டேன்னு சொன்ன என் மாமியார அடி பின்னிட்டானே
03.
அமலா : உன்
வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?
விமலா : யார்
சொன்னா?
அமலா : என்
வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.
04.
அமலா : ஏண்டி, உன்னைப் பெண்
பார்க்க திடீரென்று 40 பேர் வந்தாங்கனு சொல்றியே, பையன் பெயர் என்ன
?
விமலா : அலிபாபா
05.
அமலா : என்னடி
இது அநியாயம் .. ..உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும்
லீவு போடறாரா,,,,,,
இதென்ன கூத்து ?
விமலா :
சும்மாயிருடி ,,, நான்தான் அவரை
வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?
06.
ஜோன்ஸ் : பெண்
பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
பீன்ஸ் : துன்பம்
வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.
07.
சுரேஷ் :
பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்...
ரமேஷ் :
"காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்...'
08.
நிருபர் : உங்க வருங்காலக்
கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை :
நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
09.
ஆசிரியர் :
"டேய் ராமு, இன்னும் பத்து
நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"
ராமு :
"அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"
10.
இவர் : டாக்டர்
ஏன் கோபமா இருக்காரு..?
அவர் : ஆபரேஷன்
தியேட்டர் வாசல்ல யாரோ "ஒன்வே'(oneway) ன்னு எழுதி வச்சுட்டாங்களாம்...
11.
காதலன் : கண்ணே
உனக்காக இமயமலையையும் தாண்டுவேன்.
காதலி : அதுக்காக
ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?
காதலன் : உங்க
வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.
12.
அம்மா :
எதுக்குடா, குளிக்கும்போது
முதல் செம்புத் தண்ணீரை கீழே ஊத்தறே?
மகன் : முதல்
செம்பு தண்ணீரை ஊத்தும்போதுதான் ரொம்பக் குளிரும்னு, நீங்கதானே அம்மா சொல்வீங்க... அதான் கீழே ஊத்தறேன்...
13.
பாக்கி : நேற்று
ஏன் லீவு ?
ரமனன் : ஒரு
சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்!
14.
தளபதி : போர்
தொடங்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு... ஏன் இன்னும் நமது ஆயுதக் கிடங்கை
திறக்கவில்லை?
வீரன் : நமது
அரசர் அதுக்குள்ளேதான் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு... எப்படித் திறப்பது?
15.
நண்பர் : என்ன
ஜோஸியரே, கிளிக் கூண்டு
ரொம்பச் சின்னதாயிருக்கு ?
ஜோசியர் : உள்ளே
இருக்கிறது, வெட்டுக்கிளிங்க
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment