வெளிவந்த திரைப் படங்கள் எப்படி?

''சில நேரங்களில் சில மனிதர்கள்'' விமர்சனம் (Sila Nerangalil Sila Manidhargal Movie Review)

 விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், அபி ஹாசன், அஞ்சு குரியன், மணிகண்டன், நாசர், ரவிக்குமார், பானுப்பிரியா, இளவரசு   எனப்  பலர் நடித்திருக்கும்  இப்படத்தினை  ரவீந்திரன் தயாரிக்க,  ரதன் இசையமைத்துள்ளார்.

வாழ்க்கையின் வெவ்வேறு தளங்களில் சில தவறுகளை செய்து கொண்டிருக்கும் நான்கு இளைஞர்கள் விபத்தால் மரணமடையும் ஒருவரது வாழ்க்கையில் எப்படி சம்பந்தப்பட்டு தங்களது தவறுகளை எப்படி உணர்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை

நீண்ட காலத்தின்பின் ஒரு பாடம் சொல்லப்பட்ட படம்.


''வீரமே வாகை சூடும்'' விமர்சனம் (Veeramae Vaagai Soodum Movie Review.)

 இயக்குனர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயத்தி, யோகி பாபு, ஜெயபாலன், ஆர்.என்.ஆர் மனோகர், ரவீனா ரவி, மாரிமுத்து, நந்தா, ரமணா, ஜோர்ஜ் மரியான்   எனப் பல நடிகர்கள் நடித்திருக்கும்  திரில்லர் திரைப்படம். இப்படத்தினை நடிகர் விஷால் லின்  பிலிம் பேக்டரி' தயாரிப்பு நிறுவனம்  தயாரிக்க,  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


எஸ்.ஐ ஆக தேர்வெழுதிவிட்டுக் காத்திருக்கும்  விஷாலின் தங்கை ரவீணா கொலை செய்யப்படுகிறார். தன் தங்கை ரவீணா கொலையில் வேறு ஏதோ விவகாரம் இருக்கிறது என சந்தேகப்படும் விஷால், போலீஸ் ஆவதற்கு முன் இந்த வழக்கை விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார். அதில் வாகை சூடினாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.

மொத்தத்தில் 'வீரமே வாகை சூடும்' வீரம் குறைவு.

 

''பன்றிக்கு நன்றி சொல்லி'' விமர்சனம் (Pandrikku Nandri Solli Movie Review.)

 பாலா அரண் இயக்கத்தில் நிஷாந்த், விஜய் சத்யா நடித்துள்ள நகைச்சுவை கலந்த திரில்லர் திரைப்படம். சுரேன் விகாஷ் இசையமைத்துள்ளார்.


கடத்தப்பட்ட பத்துகோடிக்கும் அதிகமான பெறுமதியுள்ள பன்றி சிலை ஒன்று,  வெவ்வேறு தரப்பு ஆள்களுக்கு நடுவே அந்த சிலைத் தேடல் படலம் தொடர்கிறது. பன்றியின் சிலை என்ன ஆனது அது யாருக்கு ஆதாயத்தைக் கொடுத்தது என்பதே திரைக்கதை.

கதை அழுத்தமாக இல்லை. காட்சிகளில் குழப்பம். நகைச்சுவை சுமார்.

 

''முதல் நீ முடிவும் நீ'' விமர்சனம்   (Mudhal Nee Mudivum Nee,Movie Review.)

 தர்புகா சிவா இயக்கத்திலும், இசையமைப்பில்   உருவான இப்படத்தினை  சமீர் பாரத் ராம் தயாரிக்க, அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், கே.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன்  எனப் பலரின் நடிப்பில் வெளிவந்த படம்.

 11 ஆம் வகுப்பு பள்ளி வாழ்க்கையில் தொடங்குகிறது கதை. பள்ளி சேட்டைகள், காதல், கொண்டாட்டம், ஜாலியாக பள்ளி வாழ்க்கை செல்கிறது. இதில் கிஷன் தாஸ், அமிர்தா மாண்டரின் இருவரும் காதலர்கள். அமைதியாக செல்லும் இவர்களது காதல் வாழ்க்கையில் மற்றொரு பெண் எட்டிப் பார்க்க பிரச்சனை ஆரம்பமாகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

முதல் பாதி எதார்த்தமாக செல்கிறது. இரண்டாம்பாதி சற்று மந்தமாக செல்கிறது.

 

''ஏ ஜி பி'' விமர்சனம் (AGP Movie Review)

ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கத்தில் நடிகை லட்சுமி மேனன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்.

ஒரு விபத்தில் மனநோயால் பாதிக்கப்பட்ட  நாயகி லட்சுமி மேனன் தொலைந்த தன் காதலனை கண்டுபிடித்தாரா? இல்லையா? அவருக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.

மொத்தத்தில் 'ஏஜிபி' சுவாரஸ்யம் குறைவு.


:-தொகுப்பு செ.மனுவேந்தன்

 

 


No comments:

Post a Comment