'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படுத்தும்....

சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

👂 

எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்

கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்

சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,

கூறல்லவற்றை விரைந்து!  👉[1]

எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச் சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே.

 👂 

பறை பட வாழா, அசுணமா; உள்ளம்

குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து

நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச்

சொல் பட்டால், சாவதாம் சால்பு.  👉 [2]

கேகயப் பறவைகள் பறையோசையைக் கேட்டால் இறந்துவிடும். சான்றோர்கள் தன்மானக் குறைவு ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள். நெல்லுண்டான முதிர்ந்த மூங்கில் உடனே பட்டுப் போவது போல சான்றோர் தன் மீது பழி ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள்.

 👂 

மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்து

ஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச்

சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிப

கேளிரான் ஆய பயன்.   👉[3]

மாணிக்கம் முதலான உயர் மணிகளின் நல்லியல்பை அதைக் கழுவிய பின் அறிவார்கள். குதிரையின் நல்லியல்பை அதன் மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள். பொன்னின் தரத்தை அதனை உருக்கிப் பார்த்து அறிவார்கள். உறவினர்களின் இயல்பைத் தன் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற போது அறிவார்கள்.

 👂 

கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று

ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்

பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,

நல் ஆள் பிறக்கும் குடி?👉 [4]

ள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முடியாது.

 👂 

கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி

சொல்லில் பிறக்கும், உயர் மதம் - மெல்லென்

அருளில் பிறக்கும், அற நெறி, எல்லாம்

பொருளில் பிறந்துவிடும்.   👉[5]

ஒளியுள்ள உயர்ந்த மணிகள் எல்லாம் மலையில் உண்டாகும். காதலியின் இனிய மொழிகள் மிகுந்த களிப்பை ஏற்படுத்தும், மென்மையான அருளுள்ளம் கொண்டவர்களிடத்து அறநெறி தோன்றும். இவை எல்லா இன்பமும் செல்வத்தினால் உண்டாகிவிடும்.

'நான்மணிக்கடிகை' தொடரும்.... 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, பிறக்கும், நான்மணிக்கடிகை, ஒக்கும், ஒத்திருக்கும், அறிவார்கள், அறிப, இலக்கியங்கள், பதினெண், கீழ்க்கணக்கு, எல்லாம், அவனது, நலம், பின், நல்லியல்பை, அகில், கடலுள், அரிதாரம், மான், உயர், வயிற்று, உயிர், கதிர், சிறந்த, நான்கு, சங்க, ஞாயிறு, மலர், மாட்டார்கள், ஏற்பட்டால், கொள்ளாதே, பொன்னின்

👐👐👐👐👐👐👐👐👐👐👐👐👐👐

No comments:

Post a Comment