குறும் கவிதைகள்

 

[குறும் கவிதை]"உவகை"


"உவகை கொள்ள துடிக்கும் மனமே

உப்பரிகையில் நிலவின் அழகை ரசிக்கிறாய்

உணர்வு தரும் சுகத்தை தேடுகிறாய்

உன்னை அறிய எனோ மறுக்கிறாய்?"

--ந்தையா தில்லைவிநாயகலிங்கம்.


[குறும் கவிதை]“புலரும் புத்தாண்டே”

மலரும் 2022 இல் மகிழ்வாக இருக்க

அலறும் கோவிட்டே விலகி போகாயோ?

நிலவின் ஒளியில் இன்பம் பொழிய

புலரும் புத்தாண்டே மகிழ்வாக வாராயோ?”

--கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.

 

 [வெண்டுறை வெண்பா] ‘’முகநூல்’’

முகநூலிலிட்ட முகங்களின் உளவரிகள் அவரவர்

அகவடிவம் அகிலமும் பரப்புமே -இவ்வுலகில்

நல்லோர் நண்பராய் நாடியே பழகிடில்

வல்லோராய் வளர்தல் திடம்.

-✍-செ.மனுவேந்தன்.

No comments:

Post a Comment