'அன்பறிவு'
விமர்சனம்
இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில்
ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா, நெப்போலியன், விதார்த், சாய்குமார் எனப் பலர் நடித்திருக்கும் திரைப்படம். டி.ஜி. தியாகராஜன் தனது சத்யா ஜோதி பிலிம்ஸ்
நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க,
ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைக்கிறது.
விதார்த் தனக்கு பதவி கிடையாத ஆத்திரத்தில் நெப்போலியனின் குடும்பத்தை சதி செய்து பிரித்து
விடுகிறார். அவர்களின் இரட்டையர்களான ஒரு குழந்தை மதுரையில் அம்மாவிடம் வளருகிறது.
இன்னொரு குழந்தை கனடாவில் அப்பாவிடம் வளர்கிறது. இறுதியில் பிரிந்து போன குடும்பம்
ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் கதை.
ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம்.
'தீர்ப்புகள்
விற்கப்படும்' விமர்சனம்
இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ்
நடிக்கும் அதிரடி திரைப்படம். படத்தினை சஜீவ் மீராசாஹிப் ரவ்த்ர் தயாரிக்க, பிரசாத்
இசையமைத்துள்ளார்.
சத்யராஜ் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர். இவர் திருமணமான தனது மகளுக்கு
ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையைத் தட்டிக்கேட்கக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத்
தண்டிக்கிறார். அப்படி என்ன குற்றம் நடந்தது? அதைச்செய்தவர்கள்
யார்? என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீரன்.
‘தீர்ப்புகள் விற்கப்படும்’ காலத்தின் தேவை.
'இ.பி.கோ-302'
விமர்சனம்
இயக்குனர் சலங்கை துரை இயக்கத்தில்
நடிகை கஸ்தூரி காவலராக நடிக்கும் அதிரடி திரைப்படம். மேலும் இத்திரைப்படத்திற்கு புது முக
நடிகர்களான நாகா சக்தி, வர்ஷிதா இவர்களுடன் துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும்
ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.
இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு
இடமே இல்லை. குறிப்பாக காதலர்கள் அனைவரும் இப்படத்தைப் பார்க்கவேண்டும். எது காதல்
என்பதை இப்படம் பேசியுள்ளது
'வேலன்'
விமர்சனம்
கவின் எம் இயக்கத்தில் முகேன் ராவ், மீனாட்சி
கோவிந்தராஜன், சூரி, பிரபு,தம்பி ராமையா என
தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்க, கோபி சுந்தர்
இசையமைத்த திரைப்படம்.
நாயகனின் பள்ளிக்காதல் ஒருபுறம், தந்தையின்
திருமணப்பேச்சு மறுபுறம், வில்லனின்
நெருக்கடிகள் இன்னொருபுறம். மூன்றையும் எப்படி சமாளித்தார்கள்..? என்பதே படத்தின்
கதை.
மொத்தத்தில் வேலன் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க தகுந்த படம்.
'பிளான் பண்ணி பண்ணனும்'
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ
ராஜ், ரம்யா நம்பீசன்,எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பால சரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர் எனப்
பலர் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம்.
ராஜேஷ் குமார் தயாரிக்க, யுவன் ஷங்கர்
ராஜா இசையமைத்துள்ளார்.
நடனமாடிய நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து காணாமல் போகிறது.
மேலும், பால சரவணனின் தங்கையும் தொலைந்து விடுகிறார்.நாயகன்
ரியோவும், பால சரவணனும், தொலைந்த
பணத்தையும், தங்கையையும் தேடும்
நிலையில், தொலைந்த பணத்தை
ரியோ, பால சரவணன்இருவரும் கண்டுபிடித்தார்களா? பால சரவணனின்
தங்கைக்கு என்ன ஆனது? என்பதே படத்தின்
மீதிக்கதை.
மொத்தத்தில் படம் குட் பிளான்.
தொகுப்பு:செமனுவேந்தன் (Tamil cinema review)
No comments:
Post a Comment