மனித இனத்தின் மூதாதையரின் குடல் பகுதியில் குடியிருந்த பாக்டீரியாக்கள் மனித
பரிணாம வளர்ச்சியில் முதன்மை
பங்காற்றியதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிய நிலப்பரப்புகளுக்கு மனித இனம் குடிபெயர்ந்த போது அங்கு தாக்குப்பிடித்து உயிர் வாழ இந்த நுண்ணுயிர்கள் உதவி இருக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள், மனிதக்குரங்குகள், இதர
பாலூட்டிகளின் குடலில் வெவ்வேறு வகைப்பட்ட பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றை ஒன்றுடன்
ஒன்று ஒப்பிட்டுக்கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது. அப்படி
ஆராய்ந்ததில் மனிதக்குடிலில் காணப் படும் பாக்டீரியாக்கள் புதிய சூழலுக்குத்
துரிதமாக தங்களைத் தகவமைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது.
மனித இனத்தின் மூதாதையர் புதிய நிலப்பரப்புக்குள் நுழைந்த போது புதிய உணவு
முறை மட்டுமின்றி புதிய நோய்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதனால் உணவை
பதப்படுத்த அவர்கள் வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தினார்கள். அப்போது அவர்கள்
குடலில் இருந்த பாக்டீரியாக்கள் புதியவகை உணவு பண்டங்களை ஜீரணிக்கவும் ஒவ்வாமையைச்
சரி
செய்யவும் கற்றுக்கொண்டன. இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியானது
மனிதர்களுக்கு வளர்ந்தது.
மனித குடலில் குடிகொண்டிருந்த பாக்டீரியாவின் உதவியால்தான் மனிதர்கள்
வெற்றிகரமாக வெவ்வேறு பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்தார்கள். சொல்லப்போனால் மனிதக்
குலம் உலகம் முழுவதும் பரவித் தழைத்தோங்கியது இந்த பாக்டீரியாவினால் தான்
என்பதுஇந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
உடலுக்குள் இருந்தபடி மனிதர்கள் உதவியது மட்டுமல்லாமல் உணவு பண்டங்களை
பதப்படுத்தவும் இந்த பாக்டீரியாக்கள் உதவுகின்றன. உதாரணத்துக்கு, மனித உடலுக்குள்
குடியிருந்த பாக்டீரியாக்களை கை வழியாகப் பரிமாறமுடியும் என்பதை கண்டுபிடித்ததன்
மூலம்தான் உரைமோர் கொண்டு பாலை தயிராக்கும் வித்தையை மனிதர்கள்
கண்டுபிடித்தார்கள். மொத்தத்தில் மனிதர்கள் உணவைச் சேமிக்கவும் ஒரே இடத்தில்
நெடுங்காலம் தங்கி வாழ்க்கையை நடத்தவும், குழுக்களாக
இணைந்து கூடி வாழவும் வழி வகைசெய்தது இந்த பாக்டீரியாக்கள் என்றால் மிகையாகாது
என்கிறது இந்த ஆய்வு.
-பிடிஐ
No comments:
Post a Comment