"இழிவூட்டும் இன்னல்களை
நேற்றோடு அகற்றி
இதயத்தோடு நிம்மதியை எல்லோருக்கும் அளித்து
இதழோடு முத்தமிட்டு அன்பாக அணைத்து
இனிதாய் வாராயோ மலரும் புத்தாண்டே !"
“மலரும் 2022 இல் மகிழ்வாக இருக்க
அலறும் கோவிட்டே விலகி போகாயோ ?
நிலவின் ஒளியில் இன்பம் பொழிய
புலரும் புத்தாண்டே மகிழ்வாக வாராயோ ?”
"கழனி எங்கும் கதிர்கள்
ஆட
கயவர் கூட்டம் உளறுவதை நிறுத்த
கருத்து சுதந்திரம் பாது காக்க
கடந்த ஆண்டு அனுபவமாக மாறட்டும்!"
"பட்டிதொட்டி எல்லாம்
மங்களம் ஒலிக்க
மட்டு மரியாதையுடன் மேள தாளத்துடன்
வாட்டசாட்டமாக புது ஆடை உடுத்து
பட்டாசு வெடிக்க வருக புத்தாண்டே!"
✍[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment