கடந்த வாரம் வந்த திரைப்படங்கள் எப்படி?



''83'' விமர்சனம்

 இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் நடிகர் ஜீவா, ரன்வீர் சிங் தீபிகா படுகோனே எனப் பலர் நடித்துள்ள கிரிக்கெட் வரலாற்று உண்மைத் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மது மாட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரித்து வெளியானது. கிரிக்கெட் அபிமானிகள் பார்க்கக்கூடிய படம்.

 

''ரைட்டர் ''விமர்சனம்

 இயக்குனர் ஃபிராங்க்ளின் ஜகோப் இயக்கத்தில் சமுத்திரக்கனி உடன் ஹரி, இனியா, மகேஸ்வரி உட்பட பல நடிகர்கள் நடிக்கும் திரைப்படம். தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.

இரண்டு மனைவிகள்.  குடும்ப சிக்கல்கள் . பின் ரிட்டயர்மென்ட் ஆகும் நேரம் வருகிறது. இருந்தாலும் அதை சமாளித்து நேரம் கடைமைகளையும் நேர்த்தியாக செய்யும் ஒரு எழுத்தாளர் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை மையமாக கொண்டு கதை நகர்கிறது. இன்றைய சமுதாயம் பார்க்க வேண்டிய படம்.

 

''தள்ளிப் போகாதே'' விமர்சனம்

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா,   ஆடுகளம் நரேன், காளி வெங்கட் உட்பட பலர் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளராக இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதர்வா, அனுபமா இருவரும் காதலர்கள். அனுபமா பெற்றோர்கள் நிச்சயித்த மணமகனை திருமணம் செய்துவிடுகிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு அதர்வாவும் அனுபமாவும் சந்தித்து கொள்கிறார்கள். அப்போது “நீ இன்னும் என்னை மறக்கவில்லை” என அனுபமாவிடம் அதர்வா கூறுகிறார். பிறகு இருவருக்கும் விவாதம் ஏற்படுகிறது. இந்த விவாதத்தின் முடிவில் அனுபமா வீட்டுக்கு 10 நாட்கள் தங்க முடிவு செய்கிறார் அதர்வா. அதற்கு அனுபமாவின் கணவரும் சம்மதிக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. படம் ரசிக்கும்படி இல்லை.விறுவிறுப்பும் இல்லை

 

''மின்னல் முரளி'' விமர்சனம்

பசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடிக்கும்  இப்படத்தினை  சோபியா பால் தயாரிக்க, ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஒரு நாள், நாயகன் ஜெய்சன் மனமுடைந்து அவதிப்படுகிறார், மேலும் ஒரு மின்னல் அவரையும்,  ஒரு தேநீர் கடையில் வேலை செய்யும் செல்வனும் மின்னலால் தாக்கப்படுகிறார்கள் . இருவரும் superpower பெறுகின்றனர். அவர்களில் ஒருவர் மாஸ் messiah மாறும்போது, மற்றவர் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது நடக்கும் பல  ஆச்சரியங்களைக் கொண்ட திரைக்கதை.  மனதுக்கு நெருக்கமான சொந்த சூப்பர் ஹீரோ படம்.

 

''ஆனந்தம் விளையாடும் வீடு'' விமர்சனம்

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷிவாத்மிகா ராஜசேகர், சேரன், சரவணன், ராஜேந்திரன்,சிங்கம் புலி  என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்த,,சித்து குமார் இசையமைத்த. அண்ணன் தம்பி பாச கதையாக வெளியான குடும்பத்திரைப்படம்.

அண்ணன், தம்பிகள் என ஓட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக வசிக்கும் படி ஒரு பெரிய வீட்டை கட்ட ஆரம்பிக்கிறார் சரவணன். இதனால் அண்ணன், தம்பிகள் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. மேலும், அண்ணன்– தம்பி பகையை பெருசாகி பிரிக்க நினைக்கிறார் டேனியல் பாலாஜி. கடைசியில் அண்ணன் தம்பிகள் ஒன்றாக இருந்தார்களா? வீடு கட்டினார்களா? இணைந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.

விறுவிறுப்பான திருப்புமுனை எதுவும் இல்லை.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment