கடந்த வாரம் வந்த திரைப்படங்கள் எப்படி?

 


‘'ஊமை செந்நாய்'’ விமர்சனம்

நடிகர்: மைக்கேல் தங்கதுரை, நடிகை: சனம் ஷெட்டி, டைரக்ஷன்: அர்ஜுனன் ஏகலைவன், இசை : சிவா, ஒளிப்பதிவு : கல்யாண் வெங்கட்ராமன்.

தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்யும்  கதாநாயகனிடம், அரசியல்வாதியை பற்றிய ஒரு ரகசிய சி.டி.  சிக்குகிறது. அதனைக் கைப்பற்ற வந்த ரவுடிக் கூட்டத்துடன் ஏற்பட மோதலை தொடர்ந்து, கதாநாயகியைக்  கொன்று விடுகிறார்கள். அவர்களை கதாநாயகன் எப்படி பழிதீர்க்கிறார்? என்பது கதை.

முன் பாதியில் கொஞ்சம் சோர்வைக் கொடுத்தாலும் பின் பாதியில் தேறி விடுகிறது படம்.

 

''ஜெயில்’  விமர்சனம்''

நடிகர்: ஜி வி பிரகாஷ்குமார் நடிகை: அபர்ணதி டைரக்ஷன்: வசந்த பாலன் இசை : ஜி.வி.பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு : கணேஷ் சந்திரா

திருடன் கதாநாயகனும் தவறான வழி செல்லும் நண்பர்களும் ,அவர்களுக்கு எதிராக, காவல் துறையும், அரசியல்வாதிகளும்  சிலரை  ஊக்குவிக்கிறார்கள். அப்படி பெரிதாக வெடிக்கும் ஒரு பிரச்சனையில் நாயகனின்  நண்பர்  இறந்துவிடுகிறார். அவரின் இறப்பிற்குப் பின்னால் இருக்கும் சதி வேலைகளை நாயகன்  எப்படிக்  கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

பெரிய எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுச் சென்றால் இந்த ‘ஜெயில்‘ படம் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

 

‘'ஐந்து உணர்வுகள்’'  விமர்சனம்

நடிகர்: சுஜிதா நடிகை: ஸ்ரேயா அஞ்சான், ஸ்ரீரஞ்சனி, சத்யப்ரியா டைரக்ஷன்: ஞான ராஜசேகரன் இசை : ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு : சி.ஜே. ராஜ்குமார்

ஆர்.சூடாமணி எழுதிய 5 கதைகளின் திரைவடிவம், இது. ஆண்-பெண் உறவை மனோதத்துவ ரீதியில் சித்தரிப்பதுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம், தொகுப்புத்  திரைப்படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. திருப்தியான கதைகள்.

 

''புஷ்பா : தி ரைஸ்''  விமர்சனம்

நடிகர்கள்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ், ஃபஹத் பாசில், சமந்தா, தனஞ்சய், சுனில், அனுசூயா பரத்வாஜ், மைம் கோபி, அஜெய் கோஷ்; இசை: தேசி ஸ்ரீ பிரசாத்; இயக்கம்: சுகுமார்.

முதலாம் பகுதியாக வெளிவந்த இப்படம், செம்மரக் கடத்தல் தொழில் செய்யும் நாயகன்முன்,  உருவாகும் எதிரிகளையும், புதிதாக வரும் காவல்துறை அதிகாரிகளையும் அவர்  எப்படி எதிர்கொள்கிறார் என்பதில், ஒரு பகுதி கதையோடு இந்தப் படம் முடிவுக்கு வருகிறது. ஃபஹத் பாசிலின் அறிமுகத்திற்குப் பிறகு வரும் காட்சிகள், முதலில் இருந்த  சலிப்பைப் போக்கி மீண்டும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. இரண்டாம் பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

தொகுப்பு: செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment