ஒரு சுருக்கமான பார்வை..
''3:33'' விமர்சனம்
நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் பிரபல தமிழ் திரைப்பட நடன ஆசிரியர் மற்றும்
பிக்பாஸ் புகழ் சாண்டி அவர்கள் நடிகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் ஸ்ருதி
செல்வம், ரேஷ்மா,கெளதம் மேனன்
எனப் பலர் நடிக்கிறார்கள்.
தந்தையை இழந்த சாண்டி,கணவனை பிரிந்த
அக்கா,குழந்தை ,இவர்களுக்காக
வேலைதேடும் சாண்டி சந்திக்கும் ஏமாற்றங்களுக்கு மத்தியில் ஒரு அமானுஷ்ய சக்தி
அவர்களைப் படுத்தும் பாடு அச்சிக்கல்களில் இருந்து சாண்டி எப்படி மீள்கிறார்
என்பதே கதை.
வழக்கமான த்ரில்லர் கதை, சொல்லப்பட்ட விதம் அசத்தல்.
''க்'' விமர்சனம்
இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் யோகேஷ் ,அனிகா, ஒய் ஜி
மகேந்திரன், நரேன், எனப் பலரின் நடிப்பில் வெளியானது.
நாயகன் யோகேஷ் தலை , காலில் காயம்
காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது ஜன்னல் வழியாக ஒரு கொலை
நடப்பதை பார்த்ததாக போலீஸ் மற்றும் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்களோ
அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் யோகேஷுக்கு உளவியல்
ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இறுதியில் உளவியல் பிரச்சனையிலிருந்து யோகேஷ் மீண்டாரா? கொலைக்கும் யோகேஷுக்கு சம்மந்தம் இருக்கிறதா? கொலை செய்தது யார் என்பதை யோகேஷ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.சிக்கலான கதை.பார்க்கக்கூடிய
படம்.
''ஆன்டி
இண்டியன்''விமர்சனம்
ப்ளூ சட்டை இளமாறன் தானே திரைக்கதை
வடிவமைத்து, இயக்கி, இசையமைத்து, முன்னணி
கதாபாத்திரத்தில் நடித்திருக்க, முத்துராமன், உதய் மகேஷ், சார்லஸ் வினோத், ராதாரவி, ஆடுகளம் நரேன், மாறன், பாலா, சுரேஷ்
சக்கரவர்த்தி, ரமணா உடபடப் பலர்
நடித்த படம்.
பாட்ஷாவை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். பாட்ஷாவின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்
பாட்ஷாவை அடக்கம் செய்வதில் சிக்கல் உருவாகிறது. அது தேர்தல் சமயமாகவும் உள்ளது.
பாட்ஷாவின் சவத்தை வைத்துக் கொண்டு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் ஆதாய
அரசியலே இப்படத்தின் திரைக்கதை.நம்பிப் பார்க்கலாம்!
''முருங்கைகாய்
சிப்ஸ்''விமர்சனம்
ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்ய ரவி, மனோபாலா, பாக்கியராஜ், யோகிபாபு எனப் பலர்
நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க, தரன் குமார்
இசையமைத்துள்ளார்.
முதலிரவுக்கு நாயகனின் தாத்தாவின் தடையும், சாதகப்படி அதை நிறைவேற்ற தூண்டும் மாமனாரும் ஒரு
இரவுக்கதையினை கொச்சைத்தனமான மிகப்பழமையான வெறுப்பூட்டும் நகைச்சுவைகளுடன், மோசமான அறிவுரைகளுடன் பிற்போக்குத் தனமான கருத்துக்களுடன்
வெளிவந்த படம்.
'' ஊமைச்
செந்நாய்'' விமர்சனம்
அர்ஜுனன் ஏகலைவன் இயக்கத்தில், சிவா இசையமைப்பில், மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, சாய் ராஜ்குமார், கஜராஜ், அர்ஜுனன் ஏகலைவன்
சிவா, பிரகாஷ் பாஸ்கர், கல்யாணராமன் எனப் பலர் நடித்துள்ளனர்.
நகரின் முக்கியஸ்தர்களை பின் தொடரும் ஒரு டிடக்டிவ் குழு அதில் வேலை செய்யும்
நாயகன், அரசியல்வாதி, காவல்துறை அதிகாரி என
கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்குள் நடக்கும் வன்முறை, துரோகம் என ஒரு சஸ்பன்ஸ் சினிமாவாக காதலுடன் இது
உருவாக்கப்பட்டிருக்கிறது.
சரியான திரைக்கதை அமையவில்லை.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment