"கொண்டாட்டம்
என்பது
வெறும் சொல்லல்ல
மண்ணின் வாசனையை
வீசும் விழா
கண்டதையும் பொறுக்கி
கருத்து புரியாமல்
பண்பாட்டுக்கு இழுக்காக
கொண்டாடாதே தமிழா !"
"தன்னை கொன்றதை
தீபாவளியாக கொண்டாடுகிறாய்
தரமற்ற தலைவர்களை
போற்றி கொண்டாடுகிறாய்
தகுதியை காட்டிட
ஏதேதோ கொண்டாடுகிறாய்
தந்தை தாயை
மூலையில் அமர்த்துகிறாய் !"
"உண்மையை புரிந்து
கொண்டாடு தமிழா
உயர்ந்த கருத்துக்கள்
அங்கு உதிக்கட்டும்
உயிரில் கலந்து
உறவுகளுடன் மலரட்டும்
உரிமையுடன் பரம்பரை
அதை தொடரட்டும் !"
"கொண்டாட்டம் என்பது
கற்பனையல்ல தமிழா
கொழுந்துவிட்டு எரியும்
ஆனந்த உணர்வே
கொடி கட்டி
பறக்கும் பண்பாடே
கொழித்து எடுத்த
பாரம்பரிய முத்துக்களே !"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment