கடந்தவாரம் வெளியான திரைப்படங்கள் எப்படி?

சித்திரைச் செவ்வானம் - விமர்சனம்

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதரிக்கும் திரைப்படம். இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் என பலர் நடித்துள்ளனர். ஆன்லைன் இணையதள ஓடிடி பக்கமான 'ஜீ 5' செயலியில் வெளியாகியது.

காணாமல் போகும் கிராமத்து சமுத்திரக்கனியின் மகளான மருத்துவ மாணவி  (நடிகை சாய் பல்லவியின் தங்கை) பூஜா கண்ணன் இறுதியில் என்ன நடந்ததென்பதே கதை.

கதை வலுவானதாக இருந்தாலும், க்ளைமாக்ஸில் சொல்லப்பட்ட முடிவுகள் ஏற்கும்படியாக இல்லாதது சற்று மன நெருடல். அதுமட்டுமல்லாமல், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வலி.. வலி.. வலி.. என பார்க்கும் கண்களிலும் வலி, மனதிலும் வலி என ஒரே லைனாக செல்வதால் இரண்டாம் பாதி மனதோடு ஒட்டாமல் நிற்கிறது.

 

மரக்கர்: விமர்சனம்

அரபிக்கடலின் சிம்ஹம் இயக்குனர் பிரியதர்சன இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், அர்ஜுன்,பிரபு, சுனில் ஷெட்டி உட்பட பலர் நடிக்கும் அதிரடி மலையாளம் &தமிழ் திரைப்படம்.  ஆன்டனி பெரும்பாவூர் தயாரிக்க, ரோனி ரபேல் இசையமைத்துள்ளார்.

16 ஆம் நூற்றாண்டு கோழிக்கோட்டில் ஜாமோரின் இராணுவத்தில் போரிட்டு போர்த்துகீசியர்களிடமிருந்து கடற்கரையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிய குஞ்சாலி மரக்கார் பற்றிய பிரியதர்ஷனின் லட்சிய திரைப்படமாகும்.

67வது தேசிய திரைப்பட விருதுகளில், திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த சிறப்பு விளைவுகள் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய மூன்று விருதுகளை வென்றது.

 

பேச்சிலர்: விமர்சனம்

இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி, பகவதிப் பெருமாள், முனீஷ்காந்த் ராமதாஸ் உட்பட பலர்  நடிக்கும் காதல் திரைப்படம்.  டில்லி பாபு தயாரிக்க,   திரைப்படத்தின் நாயகன் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

 உண்மை சம்பவத்தின் அடிப்படையில், இருவருக்கும் இடையே காதல்  அவர்களின் பிரிவு, பிரிவுக்கு பின் இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளையும், அதிலிருந்து தொடர்ந்து நடக்கும் அனைத்து விஷயங்களையும், இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள், அதிலிருந்து வெளியே வந்தார்களா..? கடைசியில் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா..? இல்லையா..? என்பதே படத்தின் மீதி கதை.. திரைக்கதை கொஞ்சம் சொதப்பல். மொத்தத்தில் இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார் இந்த பேச்சிலர்..

தொகுப்பு:செ.மனுவேந்தன்


No comments:

Post a Comment