01.
சாது: போய்
செடிகளுக்கு தண்ணீர் ஊற்று
பணியாளர்:
ஏற்கெனவே மழை பெய்து கொண்டிருக்கிறது
சாது: அதனால்
என்ன? குடை கொண்டு போ!!
02.
கணவன்:ஏன்டி.. நல்ல
பையன பெத்து வச்சிருக்கடி.
மனைவி:ஏங்க இப்போ
தானே நல்ல விதமா பேசிக்கிட்டு இருந்தீங்க..
கணவன்:ஆமாம் 100க்கு 90 எடுக்கச் சொல்லி
அறிவுரை சொன்னேன்.
மனைவி: அதுக்கென்ன
இப்போ..?
கணவன்:என் பாக்கெட்ல
வச்ச 100 ரூபாய காணோம், வெறும் 10 ரூபாய் தான்
இருக்கு.
03.
தந்தை: ஏன்டா தூங்கும்போது
கூட ஸ்கேல பக்கத்துல வச்சிக்கிட்டு தூங்குற?
மகன்: எங்க ஆசிரியர்தான்பா
சொன்னாரு..
தந்தை:என்னான்னு
சொன்னாரு..
மகன்:அளவோடு தூங்குங்கன்ன
04.
பேரன்: தாத்தா
இனிமே எது படிச்சாலும் வேஸ்ட்தான்.
தாத்தா: ஏன்டா அப்படி
சொல்ற?
பேரன்:கம்ப்யூட்டர்
படிச்சாதான் வேலை கிடைக்கும்.
தாத்தா: அப்போ
நீ படிச்சா கிடைக்காதா...?
05.
தாய்: ஏன்டா நல்ல
சட்டையக் கிழிச்சி அத துவச்சிக்கிட்டு இருக்க?
மகன்: எங்க
சார்தானம்மா சொன்னாரு... கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.
06.
கவுண்டன்: பையன
வக்கீலுக்கு படிக்க வச்சது ரொம்பத் தப்பாப் போச்சு
செந்தில்: ஏன்னே
அப்படி சொல்றீங்க
கவுண்டன்:
படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ்
அனுப்பியிருக்கான்.
07.
ஆசிரியர்: என்னடா
இது கணக்கு நோட்டுல பால் கணக்கு, மளிகை கணக்கு எல்லாம் எழுதிக்கிட்டு வந்திருக்க?
மாணவன்: நீங்க
தானே டீச்சர் சொன்னீங்க!
ஆசிரியர்:நான் எப்படா
சொன்னேன்?
மாணவன்:நேத்து
சாயந்திரம்.. எல்லோரும் வீட்டுக் கணக்கை ஒழுங்கா எழுதிக்கிட்டு வாங்கன்னு
சொன்னீங்களே மறந்துட்டீங்களா!
08.
மகன்: அப்பா நம்ம
பக்கத்து வீட்டுக்காரருக்கு கணக்கேத் தெரியலப்பா?
தந்தை: ஏன்டா
அப்படி சொல்ற?
மகன்: பின்ன
என்னப்பா? அவரோட 6வது பொண்ணுக்கு
அஞ்சுன்னு பெயர் வச்சிருக்கார்.
09.
ஆசிரியர்:
பாக்டீரியா படம் வரைஞ்சி பாகம் குறிக்க சொன்னேனே நீ ஏன் செய்யல?
மாணவன்: என்ன
மிஸ் இப்படி சொல்றீங்கள், பாக்டீரியாவ நான் வரைஞ்சுதான் இருக்கேன், ஆனால்
பாக்டீரியாவ கண்ணால பாக்க முடியாதுல்ல! அதான் உங்களுக்குத் தெரியல!
10
ஆசிரியர் :
காந்திஜீ வாழ்நாள் முழுதும் சட்டை அணியவில்லை.
இதிலிருந்து என்ன
தெரிகிறது?
மாணவன் : அவர்
உடம்பு தெரியுது சார்
11
தாய்: ஏன் பையனப்
போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?
தந்தை: தமிழுக்கு
தெலுங்குல என்னனு கேக்கறான்
12
(போனில் தன் தந்தையைப் போல். . )
சிறுவன் : என்
பையனுக்கு உடம்பு சரியில்ல அதனால இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான்.
ஹெட்மாஸ்டர் : நீங்க
யார் பேசறது?
சிறுவன் :
நான்தான் என்னோட அப்பா பேசறேன்.
13
அப்பா : பரீட்சைல
கேள்வி எல்லாம் எப்படி இருந்தது?
மகள் : ரொம்ப ஈசிப்பா!
அப்பா : அப்றம்
ஏன் வருத்தமா இருக்காய்
மகள் : கேள்வி எல்லாம்
ஈசிதான், ஆனா இந்த
பதில்தான். .
14
ஆசிரியர் :
யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.
மாணவர் : சரிங்க
சார். ஆனா நீங்க தூங்கிட்டு இருந்தா யார் கிட்ட சொல்றது
15
ஆசிரியர்
:துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்சிருந்தான்.
மாணவன் : அதென்ன
பெரிய விஷயமா?
ஆசிரியர் : இதவிட
பெரிய விஷயம் வேற ஏதாச்சும் இருக்கா என்ன?
மாணவன் : ரவி
அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
16
ஆசிரியர்:
உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற. இப்போ
உன்கிட்ட மொத்தம் எவ்வளவு இருக்கும்?
மாணவன்: ஒரு ரூபா
இருக்கும்.
ஆசிரியர்: உனக்கு
கணக்கு தெரியல?
மாணவன்:
உங்களுக்கு, எங்க அப்பாவை பத்தி
தெரியல!
17.
கவுண்டன்: ஏன்டா
அந்த லைட் கம்பத்துல என்னடா தடவுற?
செந்தில் : நாய்
கடி மருந்து
கவுண்டன்: அத
ஏன்டா அங்க தடவற
செந்தில்: நாய்
கடித்த இடத்துல இந்த மருந்தைத் தடவுன்னு டாக்டர்தான் கொடுத்தாரு.
18
சரளா: குழாயில தண்ணி
அடிக்க சொன்னன், நீங்க இப்படி சும்மா
உட்கார்ந்திருக்கீங்க!
கவுண்டன்: குழாயிலயா? அத மொதல்ல சொல்லக்
கூடாதா?
சரளா: ஏன்?
கவுண்டன்: நீ
சொன்னியேன்னு உன் செயின கொண்டு போய் வச்சிட்டு இப்பத்தான் குடிச்சுட்டு
வர்றேன்.
19
ராமு: ஏண்டா...
அந்த பஸ் ஸ்டாண்ட் நிக்கிற பஸ்ல ஏறாம நீ பாட்டுக்கு நடந்து போற?
வேலு: அந்த பஸ்
ஓடுமா?
ராமு: ம்ம் நல்லா
ஓடுமே...
வேலு: அதான்
ஏறல.. எங்க அப்பா சொல்லியிருக்காரு.. ஓடுற பஸ்ல ஏறாதன்னு,,
20
ஆசிரியர் : ஏன்டா
உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க
உட்கார்ந்திருக்க?
மாணவன் :நீங்க
தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
தொகுப்பு :செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment