"புண்ணியம் என்று
ஒன்றும் இல்லை
புரிந்த
உணர்வுடன் உலகை அணுகு
புசித்த வாய்க்கு
உணவு கொடு
புலுடா மத
கொள்கைகளை நம்பாதே"
"தவறு செய்யாதே
பாவம் வரும்
தடுமாறி நீ நரகம்
போவாய்
தருமம் செய்
புண்ணியம் வரும்
தடை இன்றி
சொர்க்கம் செல்வாய்"
"புளுகிவிட்டான்
சொர்க்கம் நரகம் என்று
புராண கதையும்
ஏமாற்ற இயற்றிவிட்டான்
புற்றுநோய் போல்
அது பரவி
புவியில் உள்ளோரை
வலைக்குள் வீழ்த்திவிட்டது"
"நீச செயல்களை
என்றும் செய்யாது
நீதி செய்தால் உலகம்
வரவேற்கும்
நீங்காமல்
உன்புகழ் இங்கு நிலைக்கும்
நீர்க்குமிழி
வாழ்க்கைக்கும் பெருமை உண்டு"
"மனம்
நற்குணங்களுடன் கூடும் பொழுது
மதிக்கப்
படுகிறான் போற்றப் படுகிறான்
மகிழ்ச்சியுடன் சுகம், இன்பம் பிறக்கிறது
மனிதா இதுதான்
உண்மையில் புண்ணியம்"
"பிறரை மதி
உணர்வில் மலர்
பிரதியுபகாரம்
இன்றி கடமையை செய்
பிச்சை போட்டு
புண்ணியம் வராது
பிறந்தவர்
எவருக்கும் மறுபிறப்பு இல்லை"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
நீசம் = இழிவு, பிரதியுபகாரம் = கைம்மாறு
No comments:
Post a Comment