கடந்த வாரம் வெளிவந்த திரைப் படங்கள் எப்படி?

'ராஜ வம்சம்' விமர்சனம்

ராஜ வம்சம் இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நிக்கி கல்ராணி, தம்பி ராமையா, மனோபாலா, ராதாரவி, விஜயகுமார்,யோகிபாபு, ரமேஷ் கண்ணா, சதிஷ்  நடிக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம்.  தயாரிப்பாளர் டி.டி.ராஜா,  இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூட்டணியில் வெளியானது.

சசிகுமார் இவருடைய கம்பெனியின் மிகப்பெரிய பிராஜெக்ட் ஆன இதை தனது கனவு பிராஜக்ட்டாக அவர் செய்ய முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தார் அவருக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கின்றனர். கடைசியில் ப்ராஜக்ட்டா? திருமணமா? என்ற கட்டத்தில் வந்து நிற்கிறார் சசிகுமார். அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை.மொத்தத்தில் ராஜவம்சம் குடும்பங்களோடு பார்த்து கொண்டாட வேண்டிய படம்.

'மாநாடு' விமர்சனம்

மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம் ஜி, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, ,மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், வை.ஜி.மகேந்திரன்  என  பலர் இணைந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் அரசியல் மற்றும் அறிவியல் புனைவு சார்ந்த அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியானது.

திருமணத்திற்குச் செல்கிறார் அப்துல் காலிக். போகும்வழியில் நாயகியைச் சந்திக்கிறார். கூடவே சில பல பிரச்னைகளையும். அவை ஒரு முடிவே தெரியாத கால சுழற்சியில் அவரை சிக்க வைக்கின்றன. எதனால் திடீரென இப்படி நடக்கிறது? எப்படி நிறுத்துவது? இதனால் என்ன பயன் என நமக்குள்ளே குறுகுறுக்கும் கேள்விகளுக்கு அப்துல் காலிக் விடை கண்டுபிடித்துச் சொல்வதுதான் இந்த 'மாநாடு'. புதியதொரு சிம்பு வெர்ஷனை பார்த்த திருப்தி.

'வனம்'விமர்சனம்

இயக்குனர் ஸ்ரீகாந்தன் ஆனந்தன் இயக்கத்தில் வெற்றி, ஸ்ம்ருதி வெங்கட், அணு சித்ரா, வேலராமமூர்த்தி  எனப் பலர் நடிக்க,ரோன் எத்தன் யோஹன் இசையமைத்த  திரில்லர் திரைப்படம்.

இயற்கையை அழித்தால் அது நம்மை அழித்துவிடும் எனும் கருவுடன் தான் தங்கியிருக்கும் அறையில் நடைபெறும் கொலைகளிற்கு காரணம் யார் என்பதனை வெற்றியும், ஸ்மிருதியும் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதுவுமே கதை.வித்தியாசமான ஒரு கதையில் திருப்தியான ஒரு படம்

தொகுப்பு: செமனுவேந்தன் (Tamil Cinema Review)

No comments:

Post a Comment