"பாரிஸ் பையா பாரிஸ் பையா"

 


திருமண நிகழ்வை 

மையமாக வைத்த துள்ளுப் பாட்டு


"பாரிஸ் பையா பாரிஸ் பையா

பாய்ந்து வாடா பாய்ந்து வாடா

பைசா கோபுரம் கொஞ்சம் சரியுது

தோள் கொடுடா தோள்  கொடுடா"

 

"படிப்பு பாதி தியாகம் பாதி

பல்லக்கில் வருவாள் உந்தன் பாதி 

எண்ணம் பாதி கனவு பாதி

மஞ்சத்தில் சாய்வாள் உந்தன் பாதி"

 

"பாரிஸ் பையா பாரிஸ் பையா

பச்சை கிளி எட்டிப் பார்க்குது

பஞ்சு மெத்தை காத்து இருக்குது

தோள் கொடுடா தோள்  கொடுடா"

 

"ஆண்மை கொண்ட அழகு சிங்கமே 

ஆசை நிறைந்த அழகு வாலிபனே 

ஆலாத்தி எடுக்க மாமி நிற்கிறா

கழுத்தை நீட்ட  மங்கை ஏங்கிறா"  

 

"பாரிஸ் பையா பாரிஸ் பையா

மனம் இழுக்குது மணமேடை அழைக்குது   

நெஞ்சம் தழுவுது மணமகள் கொஞ்சுது 

கடிவாளம் போடுது காதில் கிசுக்குது "

 

"பாரிஸ் பையா பாரிஸ் பையா

இதழ்கள் சேருது கைகள் கோருது  

மடியில் கிடக்குது தலையை கோதுது 

மணமகள் வருகுது பல்லக்கில் வருகுது"

 

"தெறிக்குது வெடிகள் பறக்குது தோரணம்

அறுக்குது மனம் ஏங்குது உடல்

நொறுக்குது ஆசை ரசிக்குது உள்ளம்

இறங்குது பல்லக்கில் நெருங்குது உன்னை"

 

"திமிராக வாடா மணமேடை வாடா

திலகம் இடடா  கையை பிடியடா  

வாழ்வை ரசியடா அவளை மதியடா 

தோள் கொடுடா தோள்  கொடுடா"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment