கடந்த வாரம் வந்த திரைப்படங்கள் எப்படி?

 


'பொன் மாணிக்கவேல்' விமர்சனம்

பொன் மாணிக்கவேல் இயக்குனர் எ சி செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், சூரி, சுரேஷ் சந்திரா மேனன் நடிக்கும் அதிரடி திரைப்படம். வி. ஹித்தேஷ் ஐபக் தயாரிக்க,  டி.இமான் இசையமைத்து 19 நவம்பர் வெளியானது.

கொலை எப்படி நடந்தது என்று துப்புதுலக்க காவல்துறைக்கு உதவியாக வரும் பிரபுதேவா இந்த விவகாரத்தை அலட்சியமாக கையாள்கிறார். உடன் இருக்கும் காவலர்கள் எரிச்சலும் ஆத்திரமும் அடைகிறார்கள். தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.

சுவாரஸ்யமான அம்சங்களோ, புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளோ இல்லாததால் ஒருமுறை பார்ப்பதற்கே சங்கடத்தை ஏற்படுத்துகிறது இந்த ‘பொன் மாணிக்கவேல்’.

 

'ஜாங்கோ' விமர்சனம்

ஜாங்கோ இயக்குனர் மனோ காத்திகேயன் இயக்கத்தில் சதீஷ் குமார், மிர்னாலினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். சி.வி. குமார் தயாரிக்க,  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஜாங்கோ’ திரைப்படம் தமிழிலில் வெளியான முதல் “Time loop” திரைப்படம். ‘ஜாங்கோ’ என்றால் ஜெர்மானிய மொழியில் மீண்டும் எழுவேன் என்று அர்த்தம்.

இது ஒரே நாளில் திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்வை மையமாக கொண்டும், காட்சிக்கு காட்சிக்கு சுவாரசியமும் எதிர்பார்ப்புகளும் மிகுந்ததாகவும் இருக்கிறது.  இதுவரை தமிழ் ரசிகர் கண்டிராத ஒரு புதுவிதமான கதையை ஜாங்கோ இருக்கிறது. இரண்டு மணி நேரம்  வீண் ஆகவில்லை என்று சொல்லலாம்.

 

'சபாபதி' விமர்சனம்

சபாபதி இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம் எஸ் பாஸ்கர், மாறன், ராமா, மதுரை முத்து, ரேணுகா மயில்சாமி, சுவாமிநாதன் நடிக்கும் திரைப்படம்.  ரமேஷ் குமார் தயாரிக்க,  சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

'சபாபதி' சந்தானம். பேசும்போது திக்கும் பிரச்னை, அப்பாவுடன் அக்கப்போர், எதிர்த்த வீட்டு 'சாவி'த்திரியுடன் காதல், அம்மா, தங்கை சென்டிமென்ட் என நகரும் கதையில் திடீரென விதி நுழைந்து பல்வேறு திருப்பங்களை நிகழ்த்தினால்..? அந்த விதி 'சபாபதி'யை என்னவெல்லாம் பாடுபடுத்தியது என்பதுதான்  கதை.

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கதையில் மாற்றங்கள் எதுவும் இல்லை. மொத்தத்தில் சபாபதி- நகைச்சுவையிலும் கொஞ்சம் திக்கல் தான். .

 

'குருப்' விமர்சனம்

கேரளாவில் சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான், சோபித்த துளிபல முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க மலையாளம்   தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியது.

இன்சூரன்ஸ் பணத்தை ஏமாற்றி அபகரிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து துல்கர் சல்மான் முயற்சி செய்கிறார். இறுதியில் இன்சூரன்ஸ் பணத்தை துல்கர் சல்மான் ஏமாற்றினாரா? இல்லையா? ஏன் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லி ஊரை நம்ப வைக்கிறார்? இதனுடைய பின்னணி என்ன? என்பதெல்லாம் படத்தின் மீதி கதை.

மொத்தத்தில் ‘குருப்–உச்சத்திற்கு செல்வார்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

'4 சாரி' விமர்சனம்

 இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் காளி வெங்கட், சாக்ஷி அகர்வால், முத்துக்குமார், டேனியல் ஆன்னி போப், ஆர் என் ஆர் மனோகர், ஜான் விஜய், கார்த்திக் அசோகன், ரித்விகா, எனப் பலர் நடித்த ஒரு தொகுப்புத்  திரைப்படம்.

 நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை தனித்தனி கதைகளாக  சுவாரஸ்யமான  சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஒருவர் தங்களின் தவறை உணரும்போது, கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்தது படத்தின் கதை.   ‘சாரி’ சொல்லும்போது ஒருவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

 

'என்னங்க சார் உங்க சட்டம்' விமர்சனம்

இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், கார்த்திக் ஆர்.எஸ், அய்ரா,

சௌந்தர்யா பால நந்தகுமார், ரோகினி, பகவதி பெருமாள், தன்யா,

சுபா உட்பட பலர் நடித்திருக்கும் திரைப்படம்.  குணா பாலசுப்ரமணியன் இசையமைத்துள்ளார். இடைவேளை வரை ஒரு கதை, இடைவேளைக்குப் பிறகு வேறொரு கதை. சட்டம் - கட்டம் கட்டவில்லை.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment