ராமு : தீபாவாளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில்
வெடிச்சத்தம் கேக்குதே?
சோமு : தீபாவாளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.
.
ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி
ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல
இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?
சோமு : ம் .. .. .. உங்க வீடா ?
.
ராமு : எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா
சோமு : உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலியே.....
ராமு : உன் கூடப் பிறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா - மச்சி.
.
ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம்
பண்ணிக்கிட்டேன்...
சோமு : என்னாச்சு?
ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே
.
ராமு : சுருட்டு கம்பெனி கேஷியர் சுகுமாரன் எங்கே ?
சோமு : அவர், பணத்தை
சுருட்டிட்டு ஒடிட்டார்
.
ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு
சோமு : எப்படி?
ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு
சொல்லிட்டா..
.
சோமு : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்
ராமு : எப்படிச் சொல்றே?
சோமு : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு
.
ராமு : பல மொழிகள்ல இருந்து குரூப் டான்ஸர்களை வரவழைச்சு இருக்கீங்களே .. ..
நடனத்துக்கு நடனம் வித்தியாசம் காட்டவா ?
சோமு : ஊஹும் .. .. தொப்புளுக்குத் தொப்புள் வித்தியாசம் காட்டத்தான்
.
ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா... எப்படி ?
சோமு : காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம்
பின்னிட்டா
.
சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?
ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி
பண்ணக் கூடாதுல்லே..
.
ராமு : 20 வருஷம் முன்னாடி
நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு எனக்கு
ஆச்சரியமா இருக்கு.
சோமு : உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம்.
.
ராமு : ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?
சோமு : நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு
.
ராமு : கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,,
சோமு : அப்ப இன்னும் கொஞ்ச நாள் பொறுங்களேன் ,,,,
ராமு : எவ்வளவு நாள் ,,,,?
சோமு : உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும்.
.
தொகுப்பு:
செ. மனுவேந்தன்
No comments:
Post a Comment