''தாய்மை என்பது
தாலாட்டும் மகிழ்ச்சி
தாலி கட்டியவன் கொடுத்த பரிசு !
தாகம் எடுத்தாலும் அழுகை கேட்கின்
தாவி பாய்ந்து அணைக்கும் பாசம் !!"
"மண்ணும் பெண்ணும்
தாய்மையின் வடிவங்கள்
பண்பினை போற்றிடும் கற்புடைமை தாய்கள்
கண்ணை போல் பிள்ளையை பராமரித்து
ஆண்டுகள் போனாலும் தேயாத உணர்வு !"
"உடலால் மழலை
உயிர் வளர்த்து
உள்ளத்தால் பெரும் பூரிப்பு அடைந்து
உவகை கொண்டு பெருமை கொண்டு
உரிமை உடன் பேணும் தெய்வம் !"
"அழுகையில் பதறி, சிரிக்கையில்
மகிழ்ந்து
அச்சம் தவிர்த்து தைரியம் ஊட்டி
அரைநாண் கட்டி கொஞ்சி குலாவி
அம்புலி காட்டிசோறூட்டும் தேவதை !"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment