திரையின் பக்கம் வந்ததும் வர இருப்பதுவும்.... (- Tamil Cinema )

இவ்வாரம் வெளிவந்த படங்கள்

 

'டாக்டர்' விமர்சனம்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு , வினைராஜ் , அர்ச்சனா விஜே , இளவரசு, தீபா சங்கர் என  முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்து வெளிவந்த  நகைச்சுவை மற்றும் அதிரடி - திரில்லர் திரைப்படம்.

ஒரு மருத்துவர்  அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பத்மினியின் அண்ணன் மகள் காணாமல் போய்விடுகிறாள். அந்தக் குழந்தையைத் தேடுவதில் உதவ இறங்குகிறார் டாக்டர் வருண். குழந்தையைக் கடத்தியது யார், எதற்காக, எப்படி மீட்கிறார்கள் என்பது மீதிக் கதை.

படத்தில் உள்ள சின்னச்சின்ன பலவீனங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரித்துவிட்டு வரத்தக்க படம்தான்.

 

'முகிழ்' விமர்சனம்

இயக்குனர் கார்த்திக் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரெஜினா, ஸ்ரீஜா விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த  திரைப்படம். இப்படத்தினை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க, இசையமைப்பாளர் ரேவா இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி மகள்  செல்லமாக வளர்க்கும் நாய்குட்டி இறந்துவிடுகிறது. இறுதியில் சோகத்தில் இருந்து விஜய் சேதுபதி குடும்பம் மீண்டதா? நாயின் இறப்புக்கு தானே காரணம் என்ற மகளின்   குற்ற உணர்ச்சியை விஜய் சேதுபதி போக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிறிய கதை என்றாலும் மொத்தத்தில் 'முகிழ்' மகிழ்ச்சி.

 

'என்றாவது ஒரு நாள்' விமர்சனம்

 இயக்குனர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் இராகவன், இளவரசு முதலியோர்  நடித்து வெளிவந்த  திரைப்படம். இப்படத்தினை  தியேட்டர் பீப்புள் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். உண்மைச் சம்பவங்களான குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில்குடும்பங்கள் கண்டு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு சமூக அக்கறை கொண்ட படமாக வெளிவந்தது.  பிரச்சினைகளை  மிக நேர்த்தியாக சொன்னதற்காகவும், நடிகர்களின் இயல்பான நடிப்புக்காகவும் அவசியம் பார்க்க வேண்டிய படம்

இம்மாதம் வெளிவர இருக்கும் படங்கள்

 

படம்: 'விநோதய சித்தம்'

நடிகர்  : சமுத்திரக்கனி, தம்பி ராமையா

இயக்கம்  : சமுத்திரக்கனி

வெளியீடு  : 13 Oct 2021

 

படம்: 'உடன்பிறப்பே'

நடிகர் : சசி குமார், ஜோதிகா

இயக்கம்  : சரவணன்

வெளியீடு : 14 Oct 2021

 

படம்: 'தள்ளிப் போகாதே'

நடிகர் : அதர்வா, அனுபமா பரமேசுவரன்

இயக்கம்  : ஆர் கண்ணன்

வெளியீடு : 14 Oct 2021

 

படம்: 'அரண்மனை 3'

நடிகர் : ஆர்யா, ராசி கன்னா

இயக்கம்  : சுந்தர் சி

வெளியீடு : 14 Oct 2021


படம்: 'ராஜ வம்சம்'

 நடிகர்: சசி குமார், நிக்கி கல்ராணி

இயக்கம்  : கதிர்வேலு

வெளியீடு : 14 Oct 2021

தொகுப்பு: செ.மனுவேந்தன்


No comments:

Post a Comment