அம்மா பாசத்தை கருவாக வைத்து உருவாகும் சயின்ஸ்
பிக்சன் ‘கணம்’ படம் 'எங்கேயும் எப்போதும்' புகழ் சர்வானந்த் நடிப்பில், இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்உருவாகிறது. 25 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி யிருந்த அமலா, இந்த படத்தில் சர்வானந்த்தின் அம்மாவாக நடிக்கிறார்.
‘இளம்
ஜோடி’
திருமதி. மஞ்சுளா கிருஷ்ணப்பா வழங்க சி. எம்.கே.
புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஓசூர் கிருஷ்ணப்பா தயாரித்துள்ள படம்தான் ” இளம்
ஜோடி” புதுமுகங்கள் விஜய்கிருஷ்ணப்பா , பிரியங்கா ஜோடியுடன் அனுகிருஷ்ணா, ஆதிஷ் பாலா, மீரா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், பெஞ்சமின, வைகாசி ரவி, கர்ணா ராதா, ஜூனியர் அசோகன், போண்டாமணி, அம்பானி சங்கர், புரோட்டா முருகேசு, பட்டு மாமி ஆகியோருடன் பகவதி பாலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
''என்னங்க
சார் உங்க சட்டம்''
தமிழக அரசு அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
ஆகலாம் என்ற கதைக்கருவில் “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படமும் உருவாகியுள்ளது.ஆர்.எஸ்.கார்த்திக், இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சன்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம்
நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 29ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பிரேக்கிங்
நியூஸ்’
கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் உருவாகி வரும்
திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அதிக பொருட்செலவில் கிராபிக்ஸ்
காட்சிகள் , ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் நிறைந்தது இப்படம்.
நாயகி கோவை சரளா
பல படங்களில்
காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, தற்போது பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக களமிறங்க இருக்கிறார்.
பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு, நீதி வாங்கித்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘அரசி’
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது மேலும் ‘அரசி’ என்ற
படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வழக்கறிஞராக நடிக்கிறார். தெலுங்கில் சத்யம், பிரம்மாஸ்திரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சூரிய கிரண், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
தேசிய திரைப்பட விருது
டெல்லியில் 25 ம் திகதி இடம்பெற்ற 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாதாசாஹேப் பால்கே விருது
நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது என ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது. மேலும்,
`அசுரன்` திரைப்படத்திற்காக நடிகர் தனுஷூக்கும், `போன்ஸ்லே` என்கிற இந்தி திரைப்படத்திற்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் சிறந்த
நடிகருக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
ராகவா லோரன்ஸ் சகோதரர்
ராகவா லாரன்ஸின் தம்பி எல்வினும் நாயகனாகஅறிமுகமாக
உள்ளார்.இப்படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
உள்ளாராம். ராட்சசன், ஓ மை கடவுளே, மரகதநாணயம் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த அக்சஸ் பிலிம் பேக்ட்ரி
நிறுவனம் தான், எல்வின் அறிமுகமாகும் படத்தையும் தயாரிக்க உள்ளது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment